கல்முனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கல்முனை
நகரம்
Skyline of கல்முனை
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்அம்பாறை
கிசே பிரிவுகல்முனை
அரசு
 • வகைமாநகர சபை
மக்கள்தொகை (2011[1])
 • மொத்தம்1,06,780
 • அடர்த்தி4,726/km2 (12,240/sq mi)
நேர வலயம்இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30)
 • கோடை (பசேநே)கோடை நேரம் (ஒசநே+6)

கல்முனை (Kalmunai) இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள கரையோர நகரங்களுள் ஒன்று. இதன் கிழக்கே வங்காள விரிகுடாவையும் வடக்கே பெரியநீலாவணையையும் தெற்கே காரைதீவையும் எல்லையாகக் கொண்டது. கல்முனையில் தமிழர், சிங்களவர்,முஸ்லிம், பறங்கியர் என நான்கு இன மக்களும் வாழ்கின்றனர். அதன் மொத்த மக்கள்தொகை 2011 இல் கணக்கிடப்பட்டதன் படி 1,06,780 ஆகும்.

பிரதேசங்கள்[தொகு]

அதன் பிரதேசங்கள் பிரதானமான நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படிருக்கின்றன. .

  • கல்முனை மாநகரம் (தளவட்டுவான் சந்தி தொடக்கம் சாஹிராக்கல்லூரி வீதி வரை),
  • கல்முனை வடக்கு (பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவணை),
  • கல்முனை தெற்கு (சாய்ந்தமருது)
  • கல்முனை மேற்கு (நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு,சவளக்கடை,மணல்சேனை )

நிருவாக அமைப்பு[தொகு]

பிரதேச செயலாளர் பிரிவுகள்[தொகு]

  • கல்முனை பிரதேச செயலகம்
    • கல்­முனை பிரதேச செயலகப் பிரிவு
    • கல்முனை தமிழ் உப-பிரதேச செயலகப் பிரிவு
  • சாய்ந்தமருது பிரதேச செயலகம்

மக்கள் தொகை[தொகு]

தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் 2011 தரவுகளின் படி, கல்முனை மாநகரத்தின் மக்கள்தொகை வருமாறு:

பிரதேச செயலகப் பிரிவு குடும்பங்களின் எண்ணிக்கை வாக்காளர் எண்ணிக்கை சிங்களவர் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் இலங்கை சோனகர் பரங்கியர் மொத்தம்
கல்முனை பிரதேச செயலகம் 10,459 29,094 124 66 08 44,306 5 44,509
கல்முனை (தமிழ்) உப பிரிவு 7,533 20,099 231 26,564 50 2,376 492 29.713
சாய்ந்தமருது பிரதேச செயலகம் 6,087 16,936 05 17 25,389 01 25,412

மூலம்: சனத்­தொகை மற்றும் வீடு­க­ளுக்­கான புள்­ளி­வி­பரம் -2011

முக்கியத்துவம்[தொகு]

கல்முனை 2004 ம் ஆண்டு ஆழிப்பேரலையால் நேரடியாகத் தாக்கப்பட்டு உயிரழிவுகளையும், பல மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்சேதங்களையும் எதிர் கொண்டது.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்முனை&oldid=3197064" இருந்து மீள்விக்கப்பட்டது