காத்தான்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காத்தான்குடி
நகர்
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பி.செ பிரிவுகாத்தான்குடி
அரசு
 • வகைநகர சபை
 • மாநகர முதல்வர்N/A (N/A)
இணையதளம்Kattankudy.lk

காத்தான்குடி கிழக்கிலங்கையில் ஒரு நகரமாகும். தலை நகரான கொழும்பில் இருந்து 339 கிலோமீட்டர் தொலைவில் இந்நகரம் அமைந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மத்தியில் அமையப்பெற்றுள்ள இந்நகரம் 2. 56 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பையும், 1.33 சதுர கிலோமீட்டர் நீர்ப்பரப்பையும் கொண்டுள்ளது. இந்நீர்ப்பரப்பானது மொத்த மாவட்ட நீர்ப்பரப்பில் 0.15% சதவீதமாகும்.

இங்கு இரண்டு தேசிய பாடசாலைகளும், எழுபதிற்கும் அதிகமான பள்ளிவாசல்களும் காணப்படுகின்றன.[1][2][3][4]

நகர எல்லைகள்[தொகு]

வடக்கு: மண்முனை வடக்கு பிரதேச செயலகம்.

கிழக்கு: வங்காள விரிகுடா (கடல்).

தென்: மண்முனை பற்று பிரதேச செயலாளர்.

மேற்கு: மட்டக்களப்பு வாவி.

GS பிரிவுகள் மற்றும் மக்கள் தொகை (2014)[தொகு]

GS இலக்கம் பகுதி மொத்த

குடும்பங்கள்

சனத்தொகை
162 காத்தான்குடி-6 922 3049
162A காத்தான்குடி-6 தெற்கு 921 3218
162B காத்தான்குடி-6 மேற்கு 622 2121
164 காத்தான்குடி-4 376 1295
164A காத்தான்குடி-5 631 2195
164B காத்தான்குடி-5 தெற்கு 303 982
164C காத்தான்குடி-5 மேற்கு 440 1532
165 காத்தான்குடி-3 458 1387
165A காத்தான்குடி-3 மேற்கு 318 955
165B காத்தான்குடி-3 கிழக்கு 421 1422
166 காத்தான்குடி-2 671 2345
166A காத்தான்குடி-2 வடக்கு 777 2685
167 காத்தான்குடி-1 353 1178
167A புதிய காத்தான்குடி வடக்கு 1624 5429
167B புதிய காத்தான்குடி கிழக்கு 2016 7847
167C புதிய காத்தான்குடி தெற்கு 1567 5485
167D புதிய காத்தான்குடி மேற்கு 697 2429
167E காத்தான்குடி -1 தெற்கு 641 2052

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை[தொகு]

இங்கு காணப்படும் பள்ளிவாசல் ஒன்றில் 1990, ஆகஸ்ட் 3 அன்று இரவுத் தொழுகை நிறைவேற்றிக் கொண்டிருந்த வேளையில் 147 ஆண்கள் மற்றும் சிறுவர்கள் 30 பேர் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டு சுட்டுப் படுகொலைச் செய்யப்பட்டனர். இது காத்தான்குடி படுகொலைகள் என அழைக்கப்படுகிறது. இத்தாக்குதலின் துப்பாக்கி ரவை துளைகள் இன்றும் இப்பள்ளிவாயல் சுவர்களில் அழியாச் சுவடுகளாய் காணப்படுகின்றன.

சுனாமி (2004)[தொகு]

2004 டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி தாக்கிய சுனாமிப் பேரலையில் காத்தான்குடியில் 108 பேர் உயிரிழந்தனர் மற்றும் 93 பேர் காணாமல் போயினர். சுமார் 2500 வீடுகள் சேதமடைந்தன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Xinhua, 147 Muslims Massacred by Tamil "Tigers" in Sri Lanka, Colombo, August 4, 1990
  2. The New York Times, Tamils Kill 110 Muslims at 2 Sri Lankan Mosques, August 5, 1990
  3. The Times, Tamils kill 116 Muslims, August 13, 1990
  4. Associated Press, Tamil Rebels Order Muslims to Leave City, June 17, 1995
"https://ta.wikipedia.org/w/index.php?title=காத்தான்குடி&oldid=3101779" இலிருந்து மீள்விக்கப்பட்டது