காத்தான்குடித் தாக்குதல் 1990
காத்தான்குடித் தாக்குதல் 1990 | |
---|---|
ஈழப் போர் | |
இடம் | காத்தான்குடி, மட்டக்களப்பு, இலங்கை |
நாள் | 3 ஆகத்து 1990 7:30பிற்பகல் (+6 GMT) |
தாக்குதலுக்கு உள்ளானோர் | இலங்கைச் சோனகர் |
தாக்குதல் வகை | ஆயுதங்களால் படுகொலை |
ஆயுதம் | தானியங்கி துப்பாக்கி, கையெறி குண்டுகள் |
இறப்பு(கள்) | 147 |
தாக்கியோர் | தமிழீழ விடுதலைப் புலிகள் |
காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை என்பது ஆகஸ்ட் 3, 1990ல் கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் ஆயுதக்குழுவினால் நடத்தப்பட்ட தாக்குதலைக் குறிக்கும். இத் தாக்குதல் ஒரே நேரத்தில் இரண்டு முஸ்லீம் பள்ளிவாசல்களில் நடத்தப்பட்டது. ஒன்று கிரவல் தெருவில் உள்ள பள்ளிவாசலும், மற்றொன்று உசைனியா பள்ளிவாசலும் தாக்குதலுக்குள்ளாயின.[1]. இதில் முஸ்லிம்கள் இரவுத்தொழுகை நடாத்திக்கொண்டிருக்கும் பொழுது நடத்தப்பட துப்பாக்கிப் பிரயோகத்தில் 25 குழந்தைகள் உட்பட 103 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.[2][3] இத்தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகளே மேற்கொண்டனர். ஆனாலும் அவர்கள் இதனை எப்போதும் மறுத்தே வந்திருக்கின்றனர்.[4]
இந்த தாக்குதல் ஆகஸ்ட் 1, 1990ல் அக்கரைப்பற்றில் நடைத்தப்பட்ட தாக்குதலின் தொடர்ச்சியாக கருதப்படுகிறது. அக்கரைப்பற்றில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 14 முஸ்லிம்களும், 2 தியதி மதவாச்சி, மட்டக்களப்பு மற்றும் மஜீது புரம் ஆகிய ஊர்களில் 15 முஸ்லிம்களும் கொல்லப்பட்டனர்.[2]
இத்தாக்குதல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தியதாக அவ்வியக்கத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கருணா அம்மான் தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இத்தாக்குதலை துன்பியல் சம்பவம் என்று பத்திரிகையாளர் மாநாடொன்றில் தெரிவித்திருந்தார். தமிழ் பேசுபவர்களாக இருந்தும் முஸ்லிம்களை விடுதலைப்புலிகள் பலமுறை தாக்கியதாகக் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளனர்.[5][6][7] [8]
இவற்றையும் பார்க்காவும்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- http://www.lankanewspapers.com/news%5C2006%5C8%5C7978_image_headline.html பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம்
- http://www.spur.asn.au/kattankudi_muslim_mosque_massare_by_ltte_1.htm பரணிடப்பட்டது 2009-08-14 at the வந்தவழி இயந்திரம்
- காத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா? 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள் !!!! பரணிடப்பட்டது 2016-08-15 at the வந்தவழி இயந்திரம்
குறிப்புகள்
[தொகு]- ↑ "துப்பாக்கிகளில் பூக்கும் பூபாளம்" புத்தகத்திலிருந்து
- ↑ 2.0 2.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-08-14. பார்க்கப்பட்ட நாள் 2007-06-09.
- ↑ towns shut down to mark massacre
- ↑ Trawick, Margaret (1999). Enemy Lines: Warfare, Childhood, and Play in Batticaloa. University of California Press. p. 205. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-24515-0. இணையக் கணினி நூலக மைய எண் 70866875.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-09-30. பார்க்கப்பட்ட நாள் 2007-06-09.
- ↑ LTTE mercilessly slaughtered more than 100 Muslim civilians - including women and children
- ↑ Muttur Muslims fear LTTE attack
- ↑ SOUTH ASIA INTELLIGENCE REVIEW