கைத்துப்பாக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒர் இசுரேலிய டெசட் ஈகிள் கைத்துப்பாக்கி.

கைத்துப்பாக்கி (Handgun) ஒரு கையினால் பிடித்துச் சுடப்பயன்படும் ஒரு சுடுகலனாகும். கைத்துப்பாக்கிகளில் பல வகைகள் உள்ளன. சிறு கைத்துப்பாக்கி, சுழல் கைத்துப்பாக்கி ஆகியன முக்கிய கைத்துப்பாக்கி வகைகளாகும். சிறுகைத்துப்பாக்கியில் துப்பாக்கிக் குண்டுகள் துப்பாக்கியினுள் இருக்கும். சுழல்கைத்துப்பாக்கியில் சுழலும் நீள் உருளையின் துளைகளுள் குண்டுகள் இடப்படும்.

ஆரம்பத்தில் ஒரே ஒரு தடவை சுடக்கூடிய கைத்துப்பாக்கிகளே உருவாக்கப்பட்டன. அடுத்தடுத்துச் சுடுவதனை சாத்தியப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்தன. ஆரம்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சுடுகுழல்கள் பயபடுத்தப்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சுழல்கைத்துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டமை ஒரே சுடுகுழலுடன் அடுத்தடுத்துச் சுடுவதைச் சாத்தியமாக்கியது. பின்னர் சிறுகைத்துப்பாக்கிகள் அறிமுகமாயின.

கைத்துப்பாக்கிகள் சிறியவை; பாரங் குறைந்தவை; இலகுவில் எடுத்துச் செல்லவும் மறைத்து வைக்கவும் கூடியவை. சுடுகலன்களின் பயன்பாடு காரணமாக உடற்பலத்தில் சமமற்றவர்களும் ஒரே அளவான தற்பாதுகாப்பு நிலையைக் கொண்டவர்களாக முடிந்தது.

கைத்துப்பாக்கிகள் பொதுவாக தற்பாதுகாப்பு ஆயுதங்களாகவே கருதப்படுகின்றன. தேர்ந்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை மிக நெருங்கிச் சென்று தாக்கவும் பயன்படுகின்றன.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pistols
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைத்துப்பாக்கி&oldid=2157436" இருந்து மீள்விக்கப்பட்டது