பேச்சு:காத்தான்குடித் தாக்குதல் 1990

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தக் கட்டுரைக்கு தகுந்த ஆதாரங்கள் சேர்க்கப்பட வேண்டும். --Natkeeran 14:34, 9 ஜூன் 2007 (UTC)

//ஒன்றான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை முஸ்லீம்களுக்கும் நல்லுறவு இல்லை. தமிழர்களாக இருந்தும் முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளின் கொடூரத்தாக்குதலுக்கு பலமுறை ஆளாகியிருக்கிறார்கள்.//. இரண்டுமே தவறான கருத்துகள். நல்லுறவு அவ்வப்போது இருந்து வந்திருக்கிறது. இப்போது உள்ளது. முஸ்லீம்கள் என்றுமே தம்மைத் தமிழர்கள் என்று அடையாளப்படுத்தியது இல்லை.--Kanags 15:28, 9 ஜூன் 2007 (UTC)

தனித் தமிழ் ஈழத்திலும் தமக்கு வாழ்வுரிமை கிடைக்காது என்று முஸ்லீம்கள் கருதுகின்றார்களா?? ஆதாரம்?????? --ஜெ.மயூரேசன் 15:33, 9 ஜூன் 2007 (UTC)

ஆமாம், இது எந்தக் கருத்துக் கணிப்பில் கண்டறியப்பட்டது. எப்பொழுது? --Natkeeran 18:34, 9 ஜூன் 2007 (UTC)


முஸ்லீம்கள் தம்மை தமிழர்கள் என்று அடையாளப்படுத்துவது இல்லை என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியது இல்லை. அவர்களும் தமிழர்களே. பல்வேறு வரலாற்று காலகட்டங்களில் அவர்கள் தம்மை தமிழர்கள் என்று அடையாளப்படுத்தியதுண்டு. அரசியல் ரீதியாத முஸ்லீம்கள் தம்மை தமிழர்கள் என்று அடையாளப்படுத்து இல்லை என்பதுதான் சரி.
புலிகளுக்கும் தமிழ் முஸ்லீம்களுக்கும் பொதுவாக நல்லுறவு இல்லை.
--Natkeeran 15:36, 9 ஜூன் 2007 (UTC)

கனகு தகவல் பிழைகள் நீங்கள் சுட்டியது மட்டும்தானா, அல்லது வேறும் உள்ளதா? --Natkeeran 15:38, 9 ஜூன் 2007 (UTC)


"தமிழ் முஸ்லிம்கள்" என்று இங்கு யாரும் இல்லை, இதை எந்த முஸ்லீமும் விரும்பவும் மாட்டார். இப்படி தலைப்பிடுவது தெவையில்லாமல் இரு இனங்களுக்கிடையில் பாகுபாட்டையும் துவேசத்தையுமே உண்டு பன்னும். அவர்கள் தம்மை ஆராபிய வழித்தோன்றல் என்றே குறிப்பிட விரும்புவர். ஆகவெ தலைப்பை மாற்றவும்! - 124.43.232.186

மேலேயுள்ள கருத்து நான் இட்டதல்ல. --கோபி 19:20, 9 ஜூன் 2007 (UTC)
இலங்கையில் முஸ்லிம்கள் தம்மைத் தமிழராக அடையாளப் படுத்துவதில்லை. மொழியால் தமிழர்களாயினும் அவர்கள் தம்மைத் தனித்த தேசிய இனமாகவே அடையாளங் காண்கிறார்கள். ஆதலால் தமிழ் முஸ்லிம்கள் என்பது பொருத்தமற்றது என்பதே எனது கருத்து. கோபி 17:51, 9 ஜூன் 2007 (UTC)

தமிழ் பேசும் முஸ்லிம்களும் என்று சொன்னால் பொருத்தமாக இருக்குமா?--ரவி 18:15, 9 ஜூன் 2007 (UTC)

உண்மையில் இது ஒரு சிக்கலான விடயம். பெரும்பான்மை முஸ்லீம்களுக்கிடையேயும் இந்த விடயத்தில் கருத்தொற்றுமை இல்லை என்றே நினைக்கின்றேன். கனடாவில் இலங்கையில் இருந்து வந்த தமிழ் முஸ்லீம்கள் பலர் தம்மை தமிழர் என்றும் அடையாளப்படுத்துகின்றார்கள். எனவே அவர்களை தமிழர் என்றும் அடையாளப்படுத்தலாம். இது ஒரு அரசியல் கட்டுரை என்றபடியால், குறைந்த பட்சம் தமிழ் பேசும் முஸ்லீம்கள் என்று அடையாளப்படுத்தல் ஏற்றுக்கொள்ளக் கூடியது. --Natkeeran 18:28, 9 ஜூன் 2007 (UTC)
இத்தகைய தலைப்புக்களில் கலைக்களஞ்சியக் கட்டுரைகள் எழுதப்படுவதுண்டா என்பதே எனக்குள்ள சந்தேகம். --கோபி 19:20, 9 ஜூன் 2007 (UTC)

கோபி சொல்வதுபோல் இப்படியான தலைப்புகளில் கட்டுரைகள் அமையலாமா என்பதில் எனக்கும் சந்தேகமே? மற்றும், தமிழ் பேசும் முஸ்லீம்கள் என்று அழைக்கலாம். இலங்கை ஊடகங்களில் இச்சொற்பதம் கையாளப்படுகிறது. (நன்றி ரவி).--Kanags 23:46, 9 ஜூன் 2007 (UTC)

"தமிழ் முஸ்லிம்கள்" - "தமிழ் பேசும் முஸ்லிம்கள்" என்பதற்கும் வேறுபாடு உண்டு...--மாஹிர் 07:33, 10 ஜூன் 2007 (UTC)

மாஹிர் அவர்களே, தமிழ்நாடு முஸ்லிம்களுக்கும் இலங்கை முஸ்லீம்களுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. அந்த வேறுபாடுகளை முதலில் அறிந்து கொண்டு கட்டுரை எழுத ஆரம்பியுங்கள்.--Kanags 14:40, 10 ஜூன் 2007 (UTC)


கோபி, உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன்.

//அந்த வேறுபாடுகளை முதலில் அறிந்து கொண்டு கட்டுரை எழுத ஆரம்பியுங்கள்.//

நன்றி அப்படியே செய்கிறேன்..

நான் ஒரிரு வாரங்களாகத்தான் விக்கிபீடியாவில் எழுதி வருகிறேன். விக்கிபீடியாவில் நிறைய எழுத வேண்டுமென்கிற ஆசையுண்டு. ஆனால் எனக்கு இதுபோன்ற கட்டுரைகளை எழுத ஆரம்பித்து அதற்கான ஆதாரங்கள் திரட்டிக் கொண்டிருப்பதில் நேரம் கிடையாது.

அதே சமயம், யாழ்ப்பாண முஸ்லீம்களின் கட்டாய வெளியேற்றம் என்கிற கட்டுரைத் தொடுப்புத் தான் எனக்கு இப்படி ஒரு தலைப்பிட தூண்டியது. இப்பொழுது உங்களுக்கு ஏற்படுகிற இதே உணர்ச்சி தான் எனக்கும் ஏற்பட்டு இத்தலைப்பை எழுதத் தூண்டியது...

நடுநிலையோடு "உணர்ச்சிக்கு" இடம் கொடாமல் விக்கிபீடியா நடைக்கேற்ப எழுதப்பட வேண்டிய கட்டுரை என்பது மட்டும் திண்ணம்.

--மாஹிர் 17:23, 10 ஜூன் 2007 (UTC)

ஒரு கலைக்களஞ்சியத்தில் இது போன்ற கட்டுரைகள் அமையக்கூடாது என்பதற்கு எந்தத் (மன, மரபுத்) தடையும் இருப்பதாகத் தோன்றவில்லை. --ரவி 07:51, 10 ஜூன் 2007 (UTC)
இக்கட்டுரை தகவல்களை முன்வைத்து முடிவுகளுக்குச் செல்கிறது. உண்மையில் ஈழத்தில் இந்த புலிகள்-முஸ்லிம்கள் என்ற உறவுச் சிக்கல் அதனைக் கடந்து முஸ்லிம்கள்-தமிழர்கள் என்ற நிலையை எப்பொழுதோ எட்டி விட்டது. ஈழத்தில் இன்றைய சூழலில் தமிழர் தேசம் வேறு - முஸ்லிம் தேசம் வேறு. குறைந்தபட்சம் நேசதேசங்களாக இருப்பதற்கான வழிகளைக் கண்டறிவதை விட வேறு இணைவுகள் சாத்தியமற்ற சூழல் உள்ளது. அந்த நேச தேசச் சாத்தியங்களையும் கூட நீண்ட கால நோக்கில் இத்தகைய ஆவணப்படுத்தல்கள் குழப்புவதாக அமையலாம். புலிகள்-முஸ்லிம்கள் இடையிலான சிக்கல்களை மட்டுமே இனங்காணக் கூடிய இக்கட்டுரை உண்மையில் அந்த விரிசலை தூண்டுவதாக அமையும். இந்தப் பிரிவினர்க்கிடையிலான நல்லுறவு நிலைகளை இக்கட்டுரை சுட்ட வாய்ப்புக்களுமில்லை. இலங்கை இனப்பிரச்சினையுள் இதுவும் உள்ளடங்குவதால் தனியே தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழ் முஸ்லிம்களும் என்ற தலைப்பு வருத்தமிளிக்கிறது. யாழ்ப்பாண முஸ்லீம்களின் கட்டாய வெளியேற்றம், காத்தான்குடிப் படுகொலை (காத்தான்குடித் தாக்குதல் என்பதை விடப் காத்தான்குடிப் படுகொலை என்பது பொருத்தமானது) போன்றவை தனித்தனிக் கட்டுரைகளாக ஆவணப்படுத்தப்படுவது வரவேற்கத் தக்கது. நன்றி கோபி 11:57, 10 ஜூன் 2007 (UTC)
கோபியின் கருத்து முக்கியம். அதாவது இந்தப் பிரிவினர்களுக்கிடையே பிளவை வலியுறுத்தும் விதமாக இந்தக் கட்டுரை அமையக் கூடாது. அது வரவேற்கத்தக்கது இல்லை. --Natkeeran 15:20, 10 ஜூன் 2007 (UTC)

கோபியின் கருத்தின் உண்மையை ஆதரிக்கிறேன். தற்போதைய நிலையில் கட்டுரை கடுமையான தகவல்களை, முன்மொழிவுகளைப் பதிவு செய்திருக்கிறது. ஒரு நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் (ஒரு மாதம்?) இதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்களைச் சேர்ப்பது கட்டுரையின் முதன்மை ஆசிரியரின் தார்மீகக் கடமை. குறிப்பாக, சில வரிகளில் மாற்றங்கள் கோருகிறேன்.

//தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை முஸ்லீம்களுக்கும் பொதுவாக நல்லுறவு இல்லை//

இது போன்ற wild statementகளைத் தவிர்த்து உறுதிப்படுத்தக்கூடிய தகவல்களை மட்டும் தரலாம். இது போன்ற சொற்றொடர்களுக்கு ஆதாரம் தருவது கடினம்.

//தமிழர்களாக இருந்தும் முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளின் கொடூரத்தாக்குதலுக்கு பலமுறை ஆளாகியிருக்கிறார்கள்//

அரசியல் ரீதியாக, இலங்கையில் தமிழர் வேறு, இசுலாமியர் வேறு என்று இருக்கையில் - முஸ்லிம்கள் தமிழர்களாக இருந்தும் அவர்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தினார்கள் என்பது குழப்பம், பிளவு உண்டாக்குவதாக அமையும்.

//இதில் முஸ்லிம்கள் இரவுத்தொழுகை நடாத்திக்கொண்டிருக்கும் பொழுது காட்டுமிராண்டித்தனமாக சுடப்பட்டதில் 103 பேர் இறந்து போயினர்.//

எது காட்டுமிராண்டித் தனம் என்று விக்கிபீடியர் தீர்மானிக்க முடியாது. எத்தனை பேர் சுடப்பட்டு இறந்தனர் என்று மட்டும் எழுதினால் போதுமானது. அது காட்டுமிராண்டித் தனமா என்று வாசகர்கள் தங்கள் சிந்தனைக்கு ஏற்ப முடிவு செய்து கொள்ளலாம்.

//ஆயுதங்கள் ஏந்தியிராத அப்பாவிகளை புலிகள் கொன்று குவித்தனர்.//

குவித்தனர் போன்ற உணர்ச்சிகளைத் தூண்டும் விவரிப்புகளைத் தவிர்க்கலாம். கொன்றனர் என்று சொல்வது மட்டுமே கூட போதுமானது.

//ஆனால் அவர்களின் விலைமதிப்பற்ற பொருட்களை பிடுங்கிகொண்டே அவர்களை விட்டதாகச் சொல்லப்படுகிறது.//

சொல்லப்படுகிறது போன்ற விவரிப்புகள் கலைக்களஞ்சியத்தில் ஏற்றுக் கொள்ள இயலாதவை. ஆதாரம் இல்லாவிட்டால் சொற்றொடரை நீக்கப் பரிந்துரைக்கிறேன்.

//தமிழீழம் தனிநாடாக ஆக்கப்பட்டாலும் முஸ்லிம்களுக்கான வாழ்வுரிமையும், அங்கீகாரமும் தமிழீழத்தில் கிடைக்காது என்று தமிழ் முஸ்லிம்கள் திடமாக நம்புகின்றனர்.//

இன்னொரு wild statement. இலங்கை முஸ்லிம்களுக்கான பெரும்பான்மைச் சார்பு அமைப்பு ஏதும் இத்தகைய அறிக்கையைத் தந்துள்ளதா? இல்லையெனில், ஆதாரம் தர இயலாத கருத்துருவாக்கத்துக்குத் தூண்டும் இந்த சொற்றொடரை நீக்கப் பரிந்துரைக்கிறேன்.

அனைத்து இலங்கை பயனர்களும் சேர்ந்து இக்கட்டுரையின் நடுநிலைமையை உறுதி செய்வதுடன், தொனியையும் எதிர்மறையாக இல்லாமல் வரலாற்றைப் பதிவு செய்வதை மட்டும் நோக்கமாகக் கொண்டிருக்கப் பார்த்துக் கொள்ள வேண்டுகிறேன்.--ரவி 22:16, 10 ஜூன் 2007 (UTC)

இலங்கையில் இல்லாத இடங்கள் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது[தொகு]

அக்கரைப்பட்டு என்ற இடம் இலங்கையில் கிடையாது வேண்டுமானல் அக்கரைப்பற்று என்று ஓர் இடம் உண்டு. மெடவாச்சிய என்று இடம் கிடையாது வேண்டுமானால் மதவாச்சி (அல்லது மதவாச்சிய) என்ற இடம் அனுராதபுரம் மாவட்டத்தில் உண்டு. கட்டுரையில் சம்பந்தமில்லாத இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது இலங்கையில் வடக்குக் கிழக்கில் அம்பாறை தவிர ஏனைய எல்லா மாவட்டங்களிலும் நான் பணிபுரிந்துள்ளேன். தமிழ் பழமொழியில் "பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லவேண்டும்" இப்படி இல்லாத இடங்களைக் குறிப்பிட்டு கற்பனைக் கதைகளை எழுதுவதற்கு விக்கிபீடியா இடமல்ல. தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் கன்னா பின்னா என்று அரைகுறைத் தமிழில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. --Umapathy 14:16, 10 ஜூன் 2007 (UTC)

இக்கட்டுரையில் தவறான தகவல்கள் இருக்கும் பட்சத்தில் இக்கட்டுரையை நீக்கும் படிக்கோருகிறேன்.....அக்கரைப்பட்டு/பற்று போன்ற வார்த்தைகளில் ஏற்படும் பிழைகளால் இக்கட்டுரையையும் அதனை எழுதுபவரையும் பொய்யர் என்று சாடுவது "தமிழ் விக்கிபீடியாவின்" தவறான முன்னுதாரணம். மாஹிர் 17:36, 10 ஜூன் 2007 (UTC)
மன்னிக்கவும் மாஹிர், உங்களை நான் சொல்லவில்லை. கட்டுரையில் சில இடங்கள் தொடர்பாக விளக்கம் தேவை. பிபிசி போன்று நன்கு அறியப்பட்ட நம்பிக்கைகுரிய நடுநிலை ஊடகங்களில் இருந்து இணைப்பேதும் இருப்பின் தந்தால் கட்டுரையை மேம்படுத்தலாம். கட்டுரையை அழிக்கத் தேவையில்லை. --Umapathy 18:57, 10 ஜூன் 2007 (UTC)

dear wikipedians[தொகு]

dear wikipedians, could you please give examples to similar articles in english or any other wikipedia? about relationship between a rebel movement and an ethnic group? some people are trying to promote their point of view here.

    • Wikipedia is supposed to compile human knowledge. It is not a vehicle to make personal opinions become part of human knowledge.
    • Opinions on current affairs is a particular case of the previous item. Although current affairs may stir passions and tempt people to "climb soapboxes" (i.e. passionately advocate their pet point of view), Wikipedia is not the medium for this.



மேலே எழுதியது நானல்ல. எனினும் எனது கருத்தும் அதுவே. இக்கட்டுரையின் தலைப்பு விக்கிபீடியாக் கொள்கைகளுக்கு எற்புடையதல்ல. எனது பரிந்துரை: காத்தான்குடித் தாக்குதல் என்ற தனிக்கட்டுரை ஒன்று எழுதப்பட்டு இக்கட்டுரையை நீக்கக் கோருகிறேன். அல்லது இக்கட்டுரைத் தலைப்பை காத்தான்குடித் தாக்குதல் என்று மாற்றி கட்டுரையிலும் அதற்கேற்ப சில மாற்றங்கள் செய்யப்படல் வேண்டும்.--Kanags 21:25, 18 ஜூன் 2007 (UTC)

நானும் கனகுவின் கருத்துடன் உடன்படுகின்றேன். ஒருவாருத்துக்கு பின், மாற்றுக்கருத்துக்கள் இருக்கா இடத்து, மேலே குறிப்பிட்டது போல மாற்றப்படும். --Natkeeran 22:28, 18 ஜூன் 2007 (UTC)

இத்தலைப்பு விக்கிபீடியாக் கொள்கைகளுக்கு ஏற்புடையதாய் இல்லாத பட்சத்தில் மாற்றுவதில் தவறில்லை. --மாஹிர் 02:55, 19 ஜூன் 2007 (UTC)

have a look at these 2 articles in tamil http://thesamnet.co.uk/?p=139

http://thesamnet.co.uk/?p=258