இலங்கையில் கிறித்தவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இலங்கையில் கிறித்தவர்களின் பரவல்

இலங்கையில் கிறித்தவம் ஒரு சிறுபான்மைச் சமயமாகவுள்ளது. இயேசுவின் அப்போஸ்தலர்களில் ஒருவர் கி.பி. 52இல் இந்தியாவுக்கு கிறித்தவத்தை அறிமுகப்படுத்திய காலத்தில், இந்தியாவுக்கு அண்மையிலுள்ள இலங்கைக்கும் கிறித்தவம் அறிமுகமாகியிருக்க வாய்ப்பிருந்திருக்கலாம் என்ற ஊகமுள்ளது.[1] கிறித்தவ வியாபாரிகள் இலங்கையில் 6ம் நூற்றாண்டில் தங்கி, தேவாலயத்தினைக் கட்டி கிறித்தவ சமய விடங்களில் ஈடுபட்டனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.[2][3][4] 1505 இல் போர்த்துக்கேயரால் உரோமன் கத்தோலிக்கம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 17ம் நூற்றாண்டில் ஒல்லாந்துக்காரரால் மதமாற்றம் மேற்கொள்ளப்பட்டது. இதனால் கிறிஸ்த்தவர்கள் 10 வீதத்தினால் அதிகரித்தனர். இந்த எண்ணிக்கை பின்னர் குறைந்தது. இலங்கையிலுள்ள கிறிஸ்த்தவர்கள் சிங்கள, தமிழ், பறங்கியர் இனக்குழுக்களை உள்ளடக்கியவர்களாகவுள்ளனர்.

இவற்றையும் பார்க்க[தொகு]

குறிப்புக்கள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]