உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கையின் பறவைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கை, இந்தியத் துணைக்கண்டத்தின் தென் முனைக்கு அப்பாலுள்ள ஒரு வெப்ப மண்டலத் தீவு ஆகும். இத் தீவின் அளவுடன் ஒப்பிடும்போது இங்கு பறவையினங்கள் அதிக அளவில் உள்ளன. 443 பறவையினங்கள் வரை பதிவுசெய்யப்பட்டுள்ளன. இங்கேயே தங்கி வாழும் பறவைகள் தவிர குறிப்பிடத்தக்க அளவு எண்ணிக்கையிலான இடம்பெயர் பறவையினங்கள், தங்கள் வடகோளத்து வாழ்விடங்களின் குளிர் காலத்தைத் தவிர்ப்பதற்காக இலங்கைக்கு வருபவை.

233 இனங்கள் இலங்கையிலேயே வசிப்பவை. இவற்றுள் 26 நாட்டுக்குரியவை. ஏனையவை அயலிலுள்ள இந்தியத் தலை நிலத்திலும் வாழ்பவை எனினும் அவற்றில் 80க்கு மேற்பட்டவை இலங்கைக்கேயுரிய விசேட குணாம்சங்களுடன் விருத்தியடைந்துள்ளன. இவற்றுட் சில இனங்கள் அவற்றின் இறகு இயல்புகளைப் பொறுத்தவரை தொடர்புடைய இந்திய இனங்களிலிருந்து மிகுந்த வேறுபாடுள்ளவையாக உள்ளன.

இலங்கையில் பறவையினங்களின் பரம்பல் நாட்டின் காலநிலை வலயங்களினால் பெரிதும் தீர்மானிக்கப் படுகின்றன. இலங்கையின் மூன்று காலநிலை வலயங்களில், நீண்ட, உலர்ந்த, வெப்பமான காலநிலையையும், மழை கொடுக்கும் ஒரேயொரு பருவப் பெயர்ச்சிக் காற்றையும் (வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காற்று அக்டோபரிலிருந்து ஜனவரி வரை) மட்டுமே கொண்ட உலர்வலயப் பிரதேசமே பெரியது. இது நாட்டின் அரைப்பங்குக்கும் மேற்பட்ட பரப்பளவில் பரந்துள்ளது.

இரண்டு பருவப் பெயர்ச்சிக் காற்றுகளைக் கொண்ட ஈரவலயப் பிரதேசம் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. நாட்டின் மீந்துள்ள சில மழைக் காட்டுப் பிரதேசத்திலேயே உள்ளன.

மத்திய மலைப் பிரதேசம் கடல் மட்டத்துக்கு மேல் 2450 மீட்டருக்கும் (8 – 10,000 அடிகள்) கூடுதலாக உயர்ந்து செல்கின்றது. 26 நாட்டுக்குரிய இனங்களில் பெரும்பாலானவை ஈர வலய, அல்லது மத்திய மலைப் பகுதிகளைச் சேர்ந்தவயே. மிகச் சிலவே உலர்வலயத்துள்ளும் வாழ்கின்றன.

முக்குளிப்பான்கள்[தொகு]

முக்குளிப்பான்
பெயர் உயிரியற் பெயர் நிலை
முக்குளிப்பான் Tachybaptus ruficollis குடியிருத்தல்

மத்திய மற்றும் சிறிய அளவு கடற்பறவைகள்[தொகு]

வகை: Procellariiformes. குடும்பம்: Procellariidae

உலகிலுள்ள 75 இனங்களில் 12 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.[1]

பெயர் உயிரியற் பெயர் நிலை
கேப் கடற்பறவை Daption capense
பரவ்வு கடற்பறவை Pterodroma baraui
புல்வர் கடற்பறவை Bulweria bulwerii
உயோனின் கடற்பறவை Bulweria fallax
வரி கடற்பறவை Calonectris leucomelas
காற்தசை கடற்பறவை Puffinus cameipes
பிளவுவால் கடற்பறவை Puffinus pacificus
கரும் கடற்பறவை Puffinus griseus
குட்டைவால் கடற்பறவை Puffinus tenuirostris
அவுடோவன் கடற்பறவை]] Puffinus lherminieri

புயல் கடற்பறவைகள்[தொகு]

உலகில் காணப்படும் 22 இனங்களில் இலங்கையில் இரண்டு காணப்பட்டன.[1]

பெயர் உயிரியற் பெயர் நிலை
வில்சன் புயல் கடற்பறவைகள் Oceanites oceanicus
சுவின்கோ புயல் கடற்பறவைகள் Oceanodroma monorhis

வெப்பமண்டலப் பறவைகள்[தொகு]

வகை: Pelecaniformes. குடும்பம்: Tropicbird

உலகிலுள்ள 3 இனங்களில் 2 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.[2]

பெயர் உயிரியற் பெயர் நிலை
சிவப்பு வால் வெப்பமண்டலப் பறவை Phaethon rubricauda
வெள்ளை வால் வெப்பமண்டலப் பறவை Phaethon lepturus

கூழைக்கடா[தொகு]

வகை: Pelecaniformes. குடும்பம்: Pelican

கூழைக்கடா

உலகில் காணப்படும் 8 இனங்களில் இலங்கையில் ஓன்று காணப்படுகின்றது.[2]

பெயர் உயிரியற் பெயர் நிலை
புள்ளி அலகு கூழைக்கடா Pelecanus philippensis குடியிருத்தல், ஆனால் அரிதானவை. ஆபத்துக்குட்பட்டவை[3]

பேதை கடற்பறவைகள்[தொகு]

வகை: Pelecaniformes. குடும்பம்: Sulidae

உலகிலுள்ள 9 இனங்களில் 3 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.[2]

பெயர் உயிரியற் பெயர் நிலை
முகமூடி பேதை Sula dactylatra
சிவப்புப் பாத பேதை Sula sula
பழுப்புப் பேதை Sula leucogaster

நீர்க்காகங்கள்[தொகு]

வகை: Pelecaniformes. குடும்பம்: Cormorant

சின்ன நீர்க்காகம், ஓர் குடியிருந்து முட்டையிடும் இனம்

உலகிலுள்ள 38 இனங்களில் 3 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.[2]

பெயர் உயிரியற் பெயர் நிலை
கொண்டை நீர்க்காகம் Phalacrocorax fuscicollis குடியிருத்தல்
பெரிய நீர்க்காகம் Phalacrocorax carbo குடியிருத்தல்
சின்ன நீர்க்காகம் Phalacrocorax niger குடியிருத்தல்

பாம்புத் தாராக்கள்[தொகு]

வகை: Pelecaniformes. குடும்பம்: Darter

கிழக்கத்தைய பாம்புத் தாரா. அரிதான இனம்

உலகிலுள்ள 4 இனங்களில் 1 இனம் இலங்கையில் காணப்படுகின்றது.[2]

பெயர் உயிரியற் பெயர் நிலை
கிழக்கு பாம்புத் தாரா Anhinga melanogaster குடியிருத்தல், உலகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.[4]

கப்பற் பறவைகள்[தொகு]

வகை: Pelecaniformes. குடும்பம்: Frigatebird

உலகிலுள்ள 5 இனங்களில் 3 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.[2]

பெயர் உயிரியற் பெயர் நிலை
கிறித்துமஸ் தீவு கப்பற் பறவை Fregata andrewsi
பெரிய கப்பற் பறவை Fregata minor
சிறிய கப்பற் பறவை Fregata ariel

குருகு, நாரை, கொக்கு[தொகு]

வகை: Ciconiiformes. குடும்பம்: Heron

உலகிலுள்ள 61 இனங்களில் 17 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.[5]

மஞ்சள் குருகு
பெயர் உயிரியற் பெயர் நிலை
சாம்பல் நாரை Ardea cinerea குடியிருப்பு
இராட்சத நாரை Ardea goliath
செந்நாரை Ardea purpurea குடியிருப்பு
கிழக்கு பெரிய கொக்கு Ardea modesta குடியிருப்பு
வெள்ளைக் கொக்கு Egretta intermedia குடியிருப்பு
சின்னக் கொக்கு Egretta garzetta குடியிருப்பு
மேற்கு கரைக்கொக்கு Egretta gularis குடியிருப்பு, உலகளாவிய அச்சுறுத்தல்[6]
உண்ணிக் கொக்கு Bubulcus ibis குடியிருப்பு
குருட்டுக் கொக்கு Ardeola grayii குடியிருப்பு
சீன குருட்டுக் கொக்கு Ardeola bacchus
தோசிக் கொக்கு Butorides striata குடியிருப்பு
இராக் கொக்கு Nycticorax nycticorax குடியிருப்பு
மலேய இராக் கொக்கு Gorsachius melanolophus
மஞ்சள் குருகு Ixobrychus sinensis குடியிருப்பு
இலவம் குருகு Ixobrychus cinnamomeus குடியிருப்பு
கருங்குருகு Ixobrychus flavicollis குடியிருப்பு
ஐரோவாசிய குருகு Botaurus stellaris

நாரைக் கொக்குகள்[தொகு]

வகை: Ciconiiformes. குடும்பம்: Stork

உலகிலுள்ள 19 இனங்களில் 7 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.[5]

மஞ்சள் மூக்கு நாரை
பெயர் உயிரியற் பெயர் நிலை
மஞ்சள் மூக்கு நாரை Mycteria leucocephala குடியிருப்பு
நத்தை குத்தி நாரை Anastomus oscitans குடியிருப்பு
கருநாரை Ciconia nigra
செங்கால் நாரை Ciconia episcopus குடியிருப்பு
வெண் நாரை Ciconia ciconia
கருங்கழுத்து நாரை Ephippiorhynchus asiaticus குடியிருப்பு, உலகளாவிய அச்சுறுத்தல்[7]
சிறிய பெருநாரை Leptoptilos javanicus குடியிருப்பு

அரிவாள் மூக்கன், கரண்டிவாயன்/துடுப்பு வாயன்[தொகு]

வகை: Ciconiiformes. குடும்பம்: Threskiornithidae

உலகிலுள்ள 36 இனங்களில் 3 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.[5]

பெயர் உயிரியற் பெயர் நிலை
வெள்ளை அரிவாள் மூக்கன் Threskiornis melanocephalus குடியிருத்தல், உலகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.[8]
அன்றில் Plegadis falcinellus
கரண்டிவாயன் Platalea leucorodia குடியிருத்தல், உலகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.[9]

பூநாரை[தொகு]

வகை: Ciconiiformes. குடும்பம்: Phoenicopteridae

பெயர் உயிரியற் பெயர் நிலை
பெரும் பூநாரை Phoenicopterus ruber

தாரா, வாத்து, அன்னம்[தொகு]

வகை: Anseriformes. குடும்பம்: Anatidae

உலகிலுள்ள 131 இனங்களில் 18 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.[10]

Male Cotton Pigmy-goose
பெயர் உயிரியற் பெயர் நிலை
பழுப்பு சீழ்க்கைச் சிறகி Dendrocygna bicolor
சீழ்க்கைச் சிறகி Dendrocygna javanica குடியிருத்தல்
சாம்பல் வாத்து Anser anser
செம் வாத்து Tadorna ferruginea
செண்டு வாத்து Sarkidiornis melanotos
பஞ்சு குள்ளத்தாரா Nettapus coromandelianus குடியிருத்தல்
ஐரோவாசிய காட்டு வாத்து Anas penelope
கருவால் வாத்து Anas strepera
கிளுவை Anas crecca
காட்டுத்தாரா Anas platyrhynchos
புள்ளி மூக்கு வாத்து Anas poecilorhyncha
வட ஊசிவால் வாத்து Anas acuta
நீலச்சிறகி Anas querquedula
ஆண்டி வாத்து Anas clypeata
பளிங்குக் கிளுவை Marmaronetta angustirostris
செம்மார்புத் தாரா Netta rufina
பொது வாத்து Aythya ferina
குடுமித் தாரா Aythya fuligula


கழுகுப் பருந்துகள்

GALLIFORMES

TURNICIFORMES

GRUIFORMES

CHARADRIIFORMES

COLUMBIFORMES

PSITTACIFORMES

CUCULIFORMES

STRIGIFORMES

CAPRIMULGIFORMES

APODIFORMES

TROGONIFORMES

CORACIIFORMES

PICIFORMES

இது இலங்கையின் பசரீன் பறவைகளின் பட்டியலாகும். இலங்கையின் பறவைகள் பற்றிய பொதுவான குறிப்புகளுக்கு இலங்கையின் பறவைகளைப் பார்க்கவும். இலங்கைப் பறவைகள்: பசெரீன்கள் அல்லாதவை பார்க்கவும்.

இனப் பட்டியல்[தொகு]

மரக்கிளைகளில் வந்து அமரும் இலங்கைப் பறவைகள்:

துணை நூல்கள்[தொகு]

 • A Field Guide to the Birds of Sri Lanka by John Harrison and Tim Worfolk
 • Guide to the Birds of Sri Lanka by G.M.Henry

உசாத்துணை[தொகு]

 1. 1.0 1.1 Onley, Derek (2007). Albatrosses, Petrels and Shearwaters of the World (Helm Field Guides). Christopher Helm Publishers Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7136-4332-3. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Harrison, Peter (1991). Seabirds: A Complete Guide to the Seabirds of the World (Helm Identification Guides). Christopher Helm Publishers Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7136-3510-X. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
 3. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2004). Pelecanus philippensis. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 10 May 2006.
 4. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2006). Anhinga melanogaster. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 11 May 2006. Database entry includes a brief justification of why this species is near threatened
 5. 5.0 5.1 5.2 Walters, Michael P. (1980). Complete Birds of the World. David & Charles PLC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7153-7666-7.
 6. BirdLife International (2004). Egretta eulophotes. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 11 May 2006. Database entry includes a brief justification of why this species is vulnerable
 7. BirdLife International (2006). Ephippiorhynchus asiaticus. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 11 May 2006. Database entry includes a brief justification of why this species is near threatened
 8. BirdLife International (2006). Threskiornis melanocephalus. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 11 May 2006. Database entry includes a brief justification of why this species is near threatened
 9. BirdLife International (2006). Platalea minor. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 9 May 2006. Database entry includes a range map and justification for why this species is endangered
 10. Madge, Steve (1988). Wildfowl: An Identification Guide to the Ducks, Geese and Swans of the World (Helm Identification Guides). Christopher Helm. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7470-2201-1. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
 11. Gehan de Silva Wijeratne (2007). "Species description". A Photographic Guide to Birds of Sri Lanka. New Holland Publishers (UK) Ltd. p. 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85974-511-3. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
 • Splitting headaches? Recent taxonomic changes affecting the British and Western Palaearctic lists – Martin Collinson, British Birds vol 99 (June 2006), 306-323

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கையின்_பறவைகள்&oldid=3950466" இலிருந்து மீள்விக்கப்பட்டது