கரிச்சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Drongo
Drongo1.jpg
டைக்ரூரசு பிராக்டியேட்டசு
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வரிசை: பசாரிபார்மிசு
பெருங்குடும்பம்: Corvoidea
குடும்பம்: கரிச்சான்
விகோரசு, 1825
பேரினம்: டைகுருசு
வயோலாட், 1816
மாதிரி இனம்
கோர்வசு பலிகேசியசு (பலிகேசியோ)
லின்னேயஸ், 1766

கரிச்சான் (About this soundஒலிப்பு ) (Drongo) என்பது சிறிய வகைப் பறவையாகும். இது பரவலாக தென் மற்றும் தென்கிழக்காசிய பிரதேசங்களில் காணப்படுகின்றது. வளர்ந்த கரிச்சான் பறவைகள் கடும் சாம்பல் நிறம் கொண்டு, ஆழமாக பிரிக்கப்பட்ட (இரட்டை வால் தோற்றம்) நீண்ட வாலைக் கொண்டது. இதனால் இதை ஊர்ப்புறங்களில் இரட்டைவால் குருவி எனவும் அழைப்பர். இவ்வினங்களில் துணையினங்கள் சாம்பல் நிற இறகு நிறத்தில் காணப்படுகின்றன. சில இனங்கள் தலையில் வெள்ளை குறியுடன் காணப்படுகின்றன. இளம் பறவைகள் மங்கலான பழுப்பு சாம்பல் நிறத்தில் காணப்படும். கரிச்சான்கள் கரையான், வெட்டுக்கிளிகள், குளவி, எறும்பு, புழுக்கள் போன்றவற்றை விரும்பி உண்ணும்.

கரிச்சான் பறவைகள் தங்கள் வாழ்விட எல்லையை இனப்பெருக்கக் காலத்தில் மிக விழிப்புடன் பாதுகாக்கும். இவற்றின் உத்தரவாதமான இந்தப் பாதுகாப்பினால் வலிமை குறைந்ந பறவைகளான புறாக்கள், தவிட்டுக்குருவிகள், கொண்டைக்குருவிகள் போன்றவை கரிச்சான்களின் கூடுகளுக்கு அருகில் தம்முடைய கூட்டை பாதுகாப்புக் கருதி அமைத்துக்கொள்ளும். தன் எல்லைக்குள் வரும் உருவில் பல மடங்கு பெரிய பறவைகளையும் தாக்கக் இவை தயங்காது.[1]

உசாத்துணை[தொகு]

  1. "கரிச்சான்களின் வீரம்!". தி இந்து (தமிழ்) (2016 மே 7). பார்த்த நாள் 9 மே 2016.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிச்சான்&oldid=3357049" இருந்து மீள்விக்கப்பட்டது