மேக்பை
மேக்பை | |
---|---|
ஐரோவாசிய மேக்பை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
இனங்கள் | |
|
மேக்பை (Magpie) என்பது காகக் குடும்பத்தைச் சேர்ந்த சில இனங்களைக் குறிக்கும் பொதுப்பெயர் ஆகும். இதில் ஐரோவாசிய மேக்பை என்ற பறவை உலகின் அதிக நுண்ணறிவுள்ள விலங்குகளில் ஒன்றாகவும்[1][2][3] கண்ணாடி முன்பு நிற்கும் போது தன்னை உணர்ந்து கொள்ளும் திறன் பெற்றுள்ள மிகச்சில விலங்குகளில் ஒன்றாகவும் உள்ளது.[4]
சீனா மற்றும் கொரியா ஆகிய நாடுகளில் மேக்பை பறவையானது நற்பேற்றின் அடையாளமாகக் கருதப்படுகின்றது.
பண்புகள்
[தொகு]மேக்பைகள் பொதுவாக கருப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் கலந்த உடலும் கருமையான அலகும் நீளமான வாலும் கொண்டவை. எனினும் இனங்களைப் பொறுத்து இவற்றின் நிறங்கள் வேறுபடுகின்றன. இவற்றின் சராசரி ஆயுட்காலம் 8 முதல் 15 ஆண்டுகள் ஆகும். பெரிய இறகுகள் கொண்டிருப்பினும் இவற்றால் வெகுதூரம் பறக்க இயலாது.
இனப்பெருக்கம்
[தொகு]மேக்பைகள் வாழ்நாள் முழுவதும் இனப்பெருக்கம் செய்பவை ஆகும். இனப்பெருக்கம் செய்யும் இணைகள், தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக சேர்ந்து வாழ்கின்றன. மேக்பைகள் வசந்த காலத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன. அவை மரத்தில் பெரிய கூடு கட்டி முட்டையிடுகின்றன. பெண் மேக்பைகள் சராசரியாக ஒரு முறைக்கு 5 முட்டைகள் வரை இடுகின்றன. 3 வார அடைகாக்கும் காலம் முடிந்த பிறகு முட்டைகள் பொரிந்து மேக்பை குஞ்சுகள் வெளிவருகின்றன.
இளம் மேக்பை குஞ்சுகள் தங்ஙள் பெற்றோர் தேடிக் கொண்டு வரும் உணவை உண்டு வாழ்கின்றன. அவை பிறந்து 3 முதல் 4 வாரங்களான பிறகு பறக்கும் திறன் பெறுகின்றன. பிறகு தங்கள் பெற்றோர்களை விட்டு பிரிந்து சென்று தனியாக வாழத் தொடங்குகின்றன.
உணவுப்பழக்கம்
[தொகு]மேக்பைகள் அனைத்துண்ணி உணவுப் பழக்கத்தைக் கொண்டுள்ளன. இவை பழங்கள், பூச்சிகள், முட்டைகள் மற்றும் மற்றும் இறந்த விலங்குகளின் அழுகிய பிணங்கள் ஆகியவற்றை உண்டு வாழ்கின்றன.
இனங்கள்
[தொகு]கருப்பு-வெள்ளை மேக்பைகள்
[தொகு]- பேரினம் Pica
- ஐரோவாசிய மேக்பை, Pica pica
- கருவலகு மேக்பை, Pica hudsonia
- மஞ்சள் அலகு மேக்பை, Pica nuttalli
- ஆசீர் மேக்பை, Pica asirensis
- மாக்ரேப் மேக்பை, Pica mauritanica
- கொரிய மேக்பை, Pica sericea
நீல/பச்சை மேக்பைகள்
[தொகு]- பேரினம் Urocissa
- தைவான் நீல மேக்பை, Urocissa caerulea
- செவ்வலகு நீல மேக்பை, Urocissa erythrorhyncha
- மஞ்சள் அலகு நீல மேக்பை, Urocissa flavirostris
- வெண்சிறகு மேக்பை, Urocissa whiteheadi
- இலங்கை நீல மேக்பை, Urocissa ornata
- பேரினம் Cissa
- பச்சை மேக்பை, Cissa chinensis
- இந்தோச்சீனப் பச்சை மேக்பை, Cissa hypoleuca
- சாவகப் பச்சை மேக்பை, Cissa thalassina
- போர்னியப் பச்சை மேக்பை, Cissa jefferyi
வானீல-இறகு மேக்பைகள்
[தொகு]- பேரினம் Cyanopica
- வானீல இறகு மேக்பை, Cyanopica cyanus
- ஐபீரிய மேக்பை, Cyanopica cooki
காட்சித் தொகுப்பு
[தொகு]-
இலங்கை நீல மேக்பை
-
இந்தோச்சீனப் பச்சை மேக்பை
-
ஐபீரிய மேக்பை
-
மஞ்சள் அலகு மேக்பை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "World's smartest birds - Welcome Wildlife". welcomewildlife.com. 3 January 2017.
- ↑ Connor, Steve (19 August 2008). "Magpies reflect on a newly discovered intellectual prowess". The Independent. https://www.independent.co.uk/environment/nature/magpies-reflect-on-a-newly-discovered-intellectual-prowess-901857.html.
- ↑ "Eurasian Magpie: A True Bird Brain". britannica.com. Archived from the original on 2017-12-06. பார்க்கப்பட்ட நாள் 2019-03-04.
- ↑ De Waal, Frans, தொகுப்பாசிரியர் (2008). "Mirror-Induced Behavior in the Magpie (Pica pica): Evidence of Self-Recognition". PLoS Biology (Public Library of Science) 6 (8): e202. doi:10.1371/journal.pbio.0060202. பப்மெட்:18715117. பப்மெட் சென்ட்ரல்:2517622. http://www.plosbiology.org/article/fetchObject.action?uri=info:doi/10.1371/journal.pbio.0060202&representation=PDF. பார்த்த நாள்: 2008-08-21.