கருவால் வாத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கருவால் வாத்து
Gadwall-Anas-strepera.jpg
ஆண்
Gadwall-female.jpg
பெண்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: அன்செரிபார்மஸ்
குடும்பம்: Anatidae
துணைக்குடும்பம்: Anatinae
பேரினம்: Anas
இனம்: A. strepera
இருசொற் பெயரீடு
Anas strepera
L., 1758
துணையினம்

கருவால் வாத்து (About this soundஒலிப்பு ) (Gadwall) இது ஒரு வாத்து இனத்தைச் சார்ந்த பறவையாகும். இதன் குடும்பப்பெயர் அனாடிசு (Anatidae) என அறியப்படுகிறது.

பொது குறிப்பு[தொகு]

1758 ஆம் ஆண்டு சுவீடன் நாட்டைச் சார்ந்த விலங்கியலாளர் கரோலஸ் லின்னேயஸ் என்பவரின் தேடலில் இப்பெயர் இந்தப் பறவைக்குச் சூட்டியுள்ளார்.[2] சொற்பிறப்பியல் கணக்குப்படி இப்பெயர் 1666 ஆம் ஆண்டே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த இனம் டி. என். ஏ.வின் கணக்குப்படி பேக்டட் வாத்துவின் (Falcated duck) சகோதர இனம் ஆகும். இதே போல் வேகன் (Wigeon) என்ற வாத்து வகையும் இதே போன்ற பண்புகளைக் கொண்டுள்ளது.

விளக்கம்[தொகு]

இப்பறவை 46 முதல் 56 செமீ வரை நீள உடல் அமைப்பைப் பெற்றுள்ளது.[3] அதேபோல் சிறகுகள் விரிந்த நிலையில் 78 முதல் 90 செமீ அகலம் கொண்டதாக உள்ளது. இதில் ஆண் இனம் பெண் இனத்தைவிட கொஞ்சம் பெரியதாக காணப்படுகிறது. ஆண் 990 கிராம் எடையும் பெண் இனம் 850 கிராம் எடையும் கொண்டதாக உள்ளது. பிறந்த குட்டிப்பறவை கருப்பு கலந்த செம்மை நிறத்தில் காணப்படுகிறது. இதன் சிறகுகளுக்கிடையில் வெள்ளைக் கோடுகள் கொண்டு உள்ளது.[4] பெண் வாத்து காட்டு வாட்தைப் போல் வெளிற் சிகப்பு நிறத்தில் காணப்படுகிறது. இரண்டு இனங்களும் ஆண்டுதோறும் சிறகுகளை உதிர்க்கும் தன்மை கொண்டு உள்ளது. இவை இனவிருத்திக் காலம் தவிர்த்து மற்ற காலங்களில் அமைதியாக வாழுகிறது. பெண் இனத்தைக் கவர ஆண் மெல்லிய ஓசை எழுப்புகிறது.

பரவல்[தொகு]

பொதுவாக உலகில் பல இடங்களில் இப்பறவையைக் காணமுடிகிறது.[2] ஆனாலும் இப்பறவை ஒரு இந்திய நாட்டில் தமிழக ஏரிகளில் காணப்படும் பறவையாகும். மேலும் உலகில் ஐரோப்பாவின் மேற்குப் பகுதி, ஆசியா, மத்திய வட அமெரிக்கா, சான்ட் லூயிஸ் ஆறு, பெரிய ஏரி, ஆல்பர்ட்டா, சஸ்காச்சுவான், டகொடாசு, தெற்கு கன்சாஸ், மெற்கு கலிபோர்னியா, கனடாவின் பசிபிக் கடற்கரைப் பகுதி, அலாஸ்காவின் தெற்குக் கடற்கரைப்பகுதி போன்ற இடங்களிலும் காணப்படுகிறது. மேலும் கிழக்கு, மற்றும் வட அமெரிக்காவின் காற்கரைப்பகுதியிலும் வாழுகிறது. மழைக்காலங்களில் இனவிருத்திக்காக அலாஸ்காவின் கடற்கரைப்பகுதிக்குச் பறந்து செல்கிறது. இனப்பெருக்கக் காலங்களில் மட்டுமே கூட்டம் கூட்டமாகக் காணப்படுகிறது.[2]

பழக்கம்[தொகு]

இப்பறவை பொதுவாக கடற்கரைக்கு பக்கத்தில் அமைந்துள்ள சமவெளிப் பகுதியில் சிறிய தாவரங்களுக்கு அருகில் கூடு கட்டி முட்டையிடுகிறது. நீர் நிலைகளுக்கு சமீப தூரத்திலேயே பள்ளம் தோண்டி அதில் கூடு கட்டுகிறது. இதன் முக்கிய உணவு நீருக்கு அடியில் காணப்படும் தாவரங்கள் ஆகும். இதனை தன் தலையை கவிழ்ந்து நீருக்கு அடியில் பார்த்து உட்கொள்ளும் தன்மைகொண்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Anas strepera". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. 2.0 2.1 2.2 http://sora.unm.edu/sites/default/files/journals/auk/v116n03/p0792-p0805.pdf
  3. Floyd, T. (2008). Smithsonian Field Guide to the Birds of North America. New York: HarperCollins. 
  4. Dunn, J.; Alderfer, J. (2006). National Geographic Field Guide to the Birds of North America (5th ). 

மேலும் பார்க்க[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Anas strepera
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருவால்_வாத்து&oldid=3238603" இருந்து மீள்விக்கப்பட்டது