கொடிக்கால் வாலாட்டி
கொடிக்கால் வாலாட்டி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம் |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | பசாரிபார்மிசு |
குடும்பம்: | மோடாசிலிடே |
பேரினம்: | டெண்ட்ரோனாந்தசு பிளைத், 1844 |
இனம்: | டெ. இண்டிகசு |
இருசொற் பெயரீடு | |
டெண்ட்ரோனாந்தசு இண்டிகசு (ஜெமிலின், 1789) | |
வேறு பெயர்கள் | |
லிமோனிடுரோமசு இண்டிகசு |
கொடிக்கால் வாலாட்டி (Forest Wagtail) என்பது மோடாசிலிடே குடும்பத்தை சார்ந்த வாலாட்டி பறவையாகும். இது குறிப்பாக காடுகளில் காணப்படும் வளரியல்பு உடையவை ஆகும். இதன் இனப்பெருக்கமானது கிழக்கு ஆசியா, இந்தியா, இந்தோனிசியாவில் நடைபெறுகிறது.
பெயர்கள்[தொகு]
தமிழில் :கொடிக்கால் வாலாட்டி
ஆங்கிலப்பெயர் :Forest Wagtail
அறிவியல் பெயர் :Dendronanthus indicus[2]
உடலமைப்பு[தொகு]
இதன் உடல் நீளம் சுமார் 17 செ. மீ. ஆகும். உடலின் மேற்பகுதி ஆலிவ் பழுப்பு. கீழ்ப்பகுதி வெளிர் மஞ்சள் தோய்ந்த வெண்மை நிறம். தொண்டையின் கீழ்ப்பகுதியில் காணப்படும் பிறை வடிவிலான இரண்டு கருப்புத் திட்டுகளையும் இறக்கைகளில் காணப்படும் இரண்டு வெண்பட்டைகளையும் கொண்டு அடையாளம் காணலாம்.
காணப்படும் பகுதிகள், உணவு[தொகு]
மேற்குத் தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளுக்கு வலசை வரும் இது ஏப்ரல் வரை தங்குகின்றது. தனித்தும், சிறு குழுவாகவும், காடுகளில் ஓடும் சிற்றாறுகளை அடுத்தும் காட்டிடையே புழு பூச்சிகளைப் பிடிக்கும். மற்ற வாலாட்டிகளைப் போல வாலை மேலும் கீழுமாக ஆட்டுவதோடு வாலோடு கூட உடம்பையும் பக்கவாட்டில் அசைக்கும் பழக்கம் உடையது. எறும்பு முதலிய புழு பூச்சிகளே இதன் முக்கிய உணவு. இரவில் நாணல்புதர்களிடையேயும் கரும்புக் காடுகளிலும் மற்ற வாலாட்டிகளோடு சேர்ந்து தங்கும்.[3]
ஓசை[தொகு]
வன வானம்பாடி ஒரு ஒற்றை-குறிப்பு அழைப்பைக் கொண்டுள்ளது (பிங்க் பிங்க்).
வெளி இணைப்புகள்[தொகு]
- Photographs and other media பரணிடப்பட்டது 2016-04-30 at the வந்தவழி இயந்திரம்
- Call recordings
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Dendronanthus indicus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "கொடிக்கால் வாலாட்டிForest_wagtail". 1 நவம்பர் 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:106