ஈபேர்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈபேர்டு
Logo ebird.png
வலைத்தள வகைகாட்டுயிரியன தரவுத்தளம்
கிடைக்கும் மொழி(கள்)பல்கேரியம், சீனம், குரோசியம், செக் மொழி, தேனிய மொழி, இடாய்ச்சு, செருமானிய மொழி, ஆங்கிலம், பாரோயீசு, பின்னிய மொழி, பிரெஞ்சு மொழி, கிரோயோல், ஈப்ரு, இந்தோனேசிய மொழி ... Icelandic, Italian, Japanese, Latvian, Malayalam, Mongolian, Norwegian (Bokmål), Polish, Portuguese, Russian, Serbian, Spanish, Swedish, Thai, Turkish, and Ukrainian
உருவாக்கியவர்கார்நெல் பறவையியல் ஆய்வுக்கூடம்
வெளியீடு2002
தற்போதைய நிலைசெயல்பாட்டில் உள்ளது
உரலிeBird


ஈபேர்டு (Ebird) என்பது பல்லுயிரியம் சார்ந்த ஒரு மக்கள் அறிவியல் திட்டமாகும். உலகளாவிய பறவை நோக்கர்களின் பறவைகாணல் நிகழ்வுகளைப் பதிவு செய்து, அவற்றை ஒருங்கிணைப்பதற்கான இணையவழிக் களமாக ஈபேர்டு உள்ளது. கார்னெல் பல்கலைக்கழகத்தின் பறவையியல் ஆய்வுக்கூடத்தால் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பறவை காணல்களை சேகரித்து, சேமித்தும் வைப்பதன் மூலம் பறவைகளின் பரவலையும் அவற்றின் திரள்வையும் குறித்து ஒப்பீடு செய்வதற்கான விவரத்தொகுப்பு கிடைக்கிறது; இத்தரவுகள் பொதுவெளியிலும் அறிவியல் பயன்பாட்டிற்கும் பரவிட ஈபேர்டு உதவுகிறது[1]. ஈபேர்டு கூட்டு மூலத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ள ஒரு அமைப்பாகும்[2]. அறிவியலை மக்கள்மயப்படுத்துவதற்கும் மக்கள் அறிவியலை ஊக்கப்படுத்தி, அவர்கள் சேகரித்த தகவல் தரவுகளை அவர்கள் பயன்பாட்டுக்கே அளிப்பதற்கும் எடுத்துக்காட்டாக இது விளங்குகிறது[3].

வரலாறும் நோக்கமும்[தொகு]

ஈபேர்டு 2002ஆம் ஆண்டு கார்னெல் பல்கலைக்கழகத்தின் பறவையியல் ஆய்வுக்கூடம் மற்றும் தேசிய ஆதுபான் குமுகம் ஆகிய இரு அமைப்புகளால் தொடங்கப்பட்டது. சாக் லாரிவீ எனப்படும் ஆய்வாளரால் 1975ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு தரவுத்தளத்தை அடிப்படையாகக் கொண்டே இது செயல்பாட்டுக்கு வந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "BIRDCOUNT INDIA".
  2. nytcrowdsource Robbins, Jim (19 Aug 2013). "Crowdsourcing, for the Birds". New York Times. 2014-04-18 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 11 Dec 2013 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Science Explicitly for Nonscientists" Archived 2009-01-08 at the Wayback Machine, Caren B. Cooper, Janis L. Dickinson, Tina Phillips, Rick Bonney, Ecology and Society, Vol. 13, No. 2, r1, 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈபேர்டு&oldid=3602969" இருந்து மீள்விக்கப்பட்டது