கூட்டவழி மூலம் பெறுதல்
Jump to navigation
Jump to search
கூட்டவழி மூலம் பெறுதல் (Crowdsourcing) என்பது ஒரு கூட்டம் அல்லது கும்பலிடம் இருந்து உள்ளடக்கத்தை, கருக்களை, வளங்களை அல்லது சேவைகளை பெறும் முறை ஆகும். இணையச் சமூகம் ஊடாகப் பெறுவதை இது சிறப்பாகச் சுட்டுகிறது. அதாவது பரந்துபட்ட மக்கள் வளங்களில் இருந்து சிறிது சிறிதாக உள்ளீடுகளைப் பெற்று, ஒன்றுசேர்த்து ஒரு பெரிய விளைச்சலைப் பெறுதலே கூட்டுவழி மூலம் பெறுதல் ஆகும்.
கூட்டுவழிச் செயற்திட்டம் வெற்றி பெற என்ன செய்யப்பட வேண்டும், யார் செய்வார்கள், ஏன் செய்வார்கள், எப்படிச் செய்வார்கள் போன்ற கேள்விகளுக்கான பதிலகள் திறமையா வடிவமைக்கப்பட வேண்டும்.
எடுத்துக்காட்டுக்கள்[தொகு]
- நாட்டுப்புறப் இலக்கியங்கள், கலைக்களஞ்சியங்கள், கலைகள், தொழில்கள்
- கட்டற்ற மென்பொருட்கள் (லினக்சு, குனோம், எச்.டி.எம்.எல், அப்பாச்சி, நிரல்மொழிகள், பல..)
- இசுட்டாக் ஓவர்ஃபுலோ (Stack Overflow) - கேள்விகளுக்கு சரியான பதில்கள்
- சமூகவலை பக்கக்குறிப்புகள்
- மதிப்பீடு வலைத்தளங்கள்
- விக்கியூடகங்கள்