ஐரோப்பியப் பஞ்சுருட்டான்
Jump to navigation
Jump to search
ஐரோப்பிய ஈ பிடிப்பான் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம் |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவையினம் |
வரிசை: | கோராசீபோர்மெஸ் |
குடும்பம்: | Meropidae |
பேரினம்: | Merops |
இனம்: | M. apiaster |
இருசொற் பெயரீடு | |
Merops apiaster லினேயசு, 1758 |
ஐரோப்பிய ஈ பிடிப்பான் (European Bee-eater, Merops apiaster) அல்லது ஐரோப்பிய பஞ்சுருட்டான் என்பது ஈபிடிப்பான் இனத்தைச் சேர்ந்த ஒரு சிறு பறவையினமாகும். தென் ஐரோப்பாவிலும் வட ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் மேற்காசிய நாடுகள் வரையிலும் பரவலாகக் காணப்படுகிறது. ஈக்களையே முதன்மையான இரையாகக் கொள்ளும் இப்பறவைகள் புல்வெளிகளிலும் அடர்த்தியற்ற புதர்களிலும் காடுகளிலும் காணப்படும். இவை வால் பகுதியையும் சேர்த்துப் பொதுவாக 27 முதல் 29 செ.மீ நீளம் இருக்கும். மேற்புறம் பழுப்பு மற்றும் மஞ்சள் வண்னமும் சிறகுகள் பச்சையாகவும் அலகு கறுத்த நிறத்திலும் காணப்படும். இவை பனிக்காலத்தில் ஆப்பிரிக்கா வழியாக இந்தியா, இலங்கை போன்ற பகுதிகளுக்கு வலசை செல்கின்றன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ BirdLife International (2012). "Merops apiaster". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 16 July 2012 அன்று பார்க்கப்பட்டது.