உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை தொங்கும் கிளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கை தொங்கும் கிளி
இலங்கை தொங்கும் கிளி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
லோரிகுலசு
இனம்:
லோ. பெரிலினசு
இருசொற் பெயரீடு
லோரிகுலசு பெரிலினசு
பார்சுடர், 1781

இலங்கை தொங்கும் கிளி (Sri Lanka Hanging Parrot, லோரிகுலசு பெரிலினசு) என்பது இலங்கையில் காணப்படும் சிறிய கிளியாகும்.

விபரம்

[தொகு]

இலங்கை தொங்கும் கிளி சிறியதும், பச்சை நிறத்திலும் காணப்படும் இது குறுகிய வாலுடன் 13 செ.மீ நீளமுடையது. வளர்ந்த கிளி சிவப்பு நிறத்தில் முடியும் பிட்டமும் கொண்டு காணப்படும். பிடரி மற்றும் பின் புறத்தில் செம்மஞ்சல் காணப்படும். நாடியும் கழுத்தும் பளுப்பு நீல நிறத்திலிருக்கும். அலகு சிவப்பாகவும் விழித்திரைப்படலம் வெண்மையாகவும் இருக்கும்.[2]

வளர்ச்சியடையாத கிளியின் பின்புறத்தில் செம்மஞ்சல் குறைவாகவும், பிட்டம் குறை நிறத்திலும், முடியில் குறைவான செம்மஞ்சலும் காணப்படும். போலியான நீல நிறத்தை தொண்டைப் பகுதியில் கொண்டும், செம்மஞ்சல் அலகும் பளுப்பு விழித்திரைப்படலம் கொண்டும் காணப்படும்.[2]

உசாத்துணை

[தொகு]
  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Loriculus beryllinus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 16 July 2012. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. 2.0 2.1 Forshaw (2006). plate 46.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_தொங்கும்_கிளி&oldid=3477112" இலிருந்து மீள்விக்கப்பட்டது