கருங்குருகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருங்குருகு
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகெழும்புள்ளவை
வகுப்பு: பறவை
வரிசை: பெலிகனிபார்மசு
குடும்பம்: அர்டெயிடே
பேரினம்: இக்சோபிரிசசு
இனம்: இ. பிளேவிகோலிசு
இருசொற் பெயரீடு
இக்சோபிரிசசு பிளேவிகோலிசு
(இலாதம், 1790)
வேறு பெயர்கள்

துப்பெட்டார் பிளேவிகோலிசு

கருங்குருகு (About this soundஒலிப்பு ) (Black Bittern) இந்தியாவின் தமிழ்நாடுப் பகுதியைச் சார்ந்த இப்பறவை குறைந்த தூரம் இடம்பெயரும் தன்மை கொண்ட பறவையாகும். இவை பொதுவாக இலங்கை, ஆசியாவைன் வெப்பப்பகுதி, வங்காளதேசம், பாக்கித்தான், சீனா, இந்தோனேசியா, ஆத்திரேலியா போன்ற நாடுகளில் இனபெருக்கம் செய்கிறது. நீளமான கழுத்தும், நீளமான மஞ்சள் நிற அலகுடன் 58 செமீ நீளத்துடன் காணப்படுகிறது. இவற்றில் ஆண் இனம் உடல் முழுவடும் கருப்பு நிறத்துடம் நீண்ட மஞ்சள் அலகுடம் காணப்படும். பெண் பறவை அடர் பழுப்பு நிற கருப்பு நிறத்துடன் காணப்படுகிறது. இவை அதன் கூடுகளை இலை தளைகளைக் கொண்டு புதர், அல்லது மரத்தின் கிளைகளில் கூடுகட்டுகிறது.

உணவு[தொகு]

இதன் உணவு வகைகள் நீரில் காணப்படும் பூச்சிகள், மீன்கள் போன்றவையாகும்.

இனப்பெருக்கம்[தொகு]

இவை வாழிடமான நாணல் படுக்கைகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை புதர்களில் உள்ள நாணகளிலோ மரங்களிலோ கூடு கட்டுகின்றன. மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரை இடுகின்றன.

காப்பு நிலை[தொகு]

ஆத்திரேலியா[தொகு]

ஆத்திரேலிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு சட்டம் 1999-ல் கருங்குருகினை அச்சுறுத்தப்பட்டவையாக பட்டியலிடப்படவில்லை.

விக்டோரியா மாநிலம், ஆத்திரேலியா[தொகு]

கருங்குருகானது விக்டோரியாவின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உத்தரவாதச் சட்டத்தில் (1988) அச்சுறுத்தப்பட்ட இன்மாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.[2] இந்தச் சட்டத்தின் கீழ், இந்த சிற்றினத்தின் மீட்பு மற்றும் எதிர்கால மேலாண்மைக்கான செயல் அறிக்கை இன்னும் தயாரிக்கப்படவில்லை.[3] விக்டோரியாவில் அச்சுறுத்தப்பட்ட முதுகெலும்பு விலங்கினங்களின் 2007 ஆலோசனைப் பட்டியலில், கருங்குருகு பாதிக்கப்படக்கூடியதாக பட்டியலிடப்பட்டுள்ளது.[4]

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருங்குருகு&oldid=3769674" இருந்து மீள்விக்கப்பட்டது