ஆத்திரேலிய விலங்குவள தகவல் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆத்திரேலிய விலங்குவள தகவல் தொகுதி (Australian Faunal Directory) என்பது ஆத்திரேலியாவில் காணப்படும் அனைத்து விலங்கு இனங்களின் வகைபாட்டியல் மற்றும் உயிரியல் தகவல்களின் இணையவழிப் பட்டியல் ஆகும்.[1][2] இது ஆத்திரேலியா அரசாங்கத்தின் வளங்குன்றா மேலாண்மை, சுற்றுச்சூழல், நீர், மக்கள் தொகை மற்றும் சமூகங்கள் துறையின் திட்டமாகும். மே 12, 2021க்குள், ஆத்திரேலிய விலங்கின தகவல் தொகுதியில் 126,442 சிற்றினங்கள் மற்றும் துணையினங்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.[2] இது ஆத்திரேலியாவின் நிறுத்தப்பட்ட விலங்கியல் பட்டியலின் தரவுகளையும் உள்ளடக்கியது.[3] மேலும் இது தொடர்ந்து குறிப்பிட்ட காலப்பகுதியில் புதுப்பிக்கப்படுகிறது.[4] 1980களில் தொடங்கப்பட்டது, இது "நிலவாழ் முதுகெலும்புகள், எறும்புகள் மற்றும் கடல் விலங்கினங்கள் உட்பட அனைத்து ஆத்திரேலிய விலங்கினங்களின் பட்டியலையும்" தொகுத்து, "ஆத்திரேலிய உயிரியவகைப்பாட்டியல் தகவலமைப்பை" உருவாக்குவது இதனுடைய இலக்குகளில் ஒன்றாக நிர்ணயித்துள்ளது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Australian Faunal Directory". BugGuide. 6 January 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 "Australian Faunal Directory". 13 May 2021. 13 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
  3. Davie, P. J. F., A. Wells, and W. W. K. Houston. Zoological Catalogue of Australia. 19.3B, 19.3B. Collingwood, Vic: CSIRO, 2002, p. XIII.
  4. Australian Biological Resources Study, and Australia. Australian Faunal Directory. Canberra, ACT: Dept. of the Environment and Heritage, 2000.
  5. Commonwealth Record, Volume 5, Issues 26-34, p. 1282. Australian Government Publishing Service, 1980.

வெளி இணைப்புகள்[தொகு]