சிறிய மின்சிட்டு
சிறிய மின்சிட்டு | |
---|---|
![]() | |
ஆண் சின்னச் சிட்டு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கேம்பிபாஜிடே
|
பேரினம்: | பெரிகுரோகாக்டசு
|
இனம்: | பெ. சின்னமோமியூசு
|
இருசொற் பெயரீடு | |
பெரிகுரோகாக்டசு சின்னமோமியசு லின்னேயஸ், 1766 | |
வேறு பெயர்கள் | |
|
சிறிய மின்சிட்டு (Small Minivet)(பெரிகுரோகாக்டசு சின்னமோமியூசு) என்பது ஒரு சிறிய குருவி சிற்றினம் ஆகும். இந்த மின்சிட்டு வெப்பமண்டல தெற்கு ஆசியாவில் இந்திய துணைக்கண்டத்திலிருந்து கிழக்கே இந்தோனேசியா வரை காணப்படுகிறது.
விளக்கம்
[தொகு]சிறிய மின்சிட்டு 16 செ.மீ. நீளமுடையது. இது கருமையான வலிமையான அலகினை கொண்டுள்ளது. நீண்ட இறக்கைகளையும் கொண்டது. ஆண் மின்சிட்டானது பிற மின்சிட்டுக்களிலிருந்து பளபளப்பற்ற சாம்பல் மேல் பகுதி மற்றும் தலை, ஆரஞ்சு நிற கீழ் பகுதிகள், வயிற்றுப் பகுதி, ஆரஞ்சு நிற வால் விளிம்புகள், மூலம் வேறுபடுகிறது.[2]
பெண் மின்சிட்டின் மேல்பகுதி சாம்பல் நிறத்தில் இருக்கும். இதன் கீழ்ப்பகுதியும் முகமும் மஞ்சள் நிறத்துடன் காணப்படும்.
இந்த சிறிய மின்சிட்டுகளில் இன வேறுபாடுகள் மிகுதியாக உள்ளன.
- தெற்கத்திய சிறிய மின்சிட்டு பெரிக்ரோகோடசு சின்னமோமியசு சின்னமோமியசு: இந்திய தீபகற்ப பகுதி, இலங்கை
- பெரிக்ரோகோடசு சின்னமோமியசு பெரேக்ரினசு: இமயமலை மற்றும் இந்தியா
- பெரிக்ரோகோடசு சின்னமோமியசு பாலிடசு: பாக்கித்தான் (கச்சு வளைகுடா முதல் பஞ்சாப் வரையிலான சிந்து நதி பள்ளத்தாக்கு)
- மலபார் சிறிய மின்சிட்டு பெரிக்ரோகோடசு சின்னமோமியசு மலபாரிகசு: இந்தியாவின் மேற்கு பகுதி (பெல்காம் முதல் கேரளம் வரை மேற்குத் தொடர்ச்சி மலை)
- பெரிக்ரோகோடசு சின்னமோமியசு விவிடசு: அந்தமான் தீவுகள்
- பெரிக்ரோகோடசு சின்னமோமியசு செப்பாரடசு: மியான்மர் (தெற்கு)(மெர்குய் மாவட்டம்) மற்றும் தீபகற்ப தாய்லாந்து
- பெரிக்ரோகோடசு சின்னமோமியசு தாய்: மியான்மர் முதல் தாய்லாந்து மற்றும் லாவோஸ் வரை
- பெரிக்ரோகோடசு சின்னமோமியசு சாசெரோடசு: கம்போடியா மற்றும் வியட்நாம்
- பெரிக்ரோகோடசு சின்னமோமியசு சாச்சுராடசு: சாவகம் மற்றும் பாலி
நடத்தை
[தொகு]சிறிய மின்சிட்டு என்பது முள் காடு மற்றும் புதர்க்காடுகளில் இனப்பெருக்கம் செய்யும் பறவையாகும். கூடு என்பது ஒரு கோப்பை வடிவ அமைப்பாகும். இதில் இரண்டு முதல் நான்கு வரை, புள்ளிகளுடன் கூடிய முட்டைகள் இடும். பெண் மின்சிட்டுகள் முட்டைகளை அடைகாக்கும்.
இந்த மின்சிட்டு மரங்களில் உள்ள பூச்சிகளைப் பறந்து பிடிப்பதன் மூலமோ அல்லது அமர்ந்திருக்கும்போதோ பிடிக்கிறது. சிறிய மின்சிட்டு சிறிய மந்தைகளாகக் காணப்படும்.
படங்கள்
[தொகு]-
இந்தியாவில், ஆண் பெ. சி. மலபாரிகசு
-
இந்தியாவில், பெண் பெ. சி. மலபாரிகசு
-
சண்டையிடும் பெண்
-
இந்தியாவில் ஆண், பெ. சி. பாலிடசு
-
வரைபடம்
உசாத்துணை
[தொகு]- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Pericrocotus cinnamomeus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். Retrieved 16 July 2012.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ "Small Minivet - eBird". ebird.org (in ஆங்கிலம்). Retrieved 2022-06-29.
- ↑ "Pericrocotus cinnamomeus (Small Minivet) - Avibase". avibase.bsc-eoc.org. Retrieved 2022-06-29.