பருவப் பெயர்ச்சிக் காற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்தியாவின் விந்திய மலைத்தொடர் அருகே உள்ள மழைக்கால முகில்கள்

பருவப்பெயர்ச்சிக் காற்று (monsoon) என்பது நிலத்திற்கும் கடலிற்கும் இடையேயுள்ள வெப்பநிலை வேறுபாட்டினால் பருவந்தோறும் உருவாகும் காற்றுப்பெயர்ச்சி ஆகும். உலகின் பல பகுதிகளில் இது ஏற்பட்டாலும் அவற்றில் முதன்மையாகக் கருதப்படுவது ஆசிய பருவப்பெயர்ச்சியே. [1] இது பருவந்தோறும் மழையைக் கொணர்வதால் பருவமழை எனவும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இது, அரபிக் கடல் மற்றும் இந்து சமுத்திரப் பகுதிகளில் வீசும் காற்றுகளைக் குறிக்கவே பயன்பட்டது. இந்தியாவுக்குத் தென்மேற்குப் பகுதியிலிருந்து வீசும்காற்று, தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று (south west monsoon) என்றும், வங்காள விரிகுடாப் பகுதியிலிருந்து வீசும் காற்று, வடகிழக்குப் பருவமழை (north east monsoon)என்றும் குறிப்பிடப்படுகின்றது. இப்பருவப் பெயர்ச்சிக் காற்றுகள் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு மழையைக் கொண்டு வருகின்றன. சில பகுதிகள் இரண்டு பருவப்பெயர்ச்சிக் காற்றுக் காலங்களின்போதும் மழையைப் பெற, தமிழ் நாட்டின் பல பகுதிகள், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் உள்ளிட்ட வேறு சில பகுதிகள் ஒரு பருவத்தில் மட்டுமே மழையைப் பெறுகின்றன.

பருவமழை ஏற்படக் காரணம்[தொகு]

சூரியனைப் பொறுத்து புவியின் சுழற்சியச்சு சாய்ந்திருப்பதனால் பருவப்பெயர்ச்சிக் காற்று (பருவக்காற்று) தூண்டப்படுகிறது.[2] நிலமும் கடலும் கதிரவனின் கதிர்களுக்குட்டாலும் நிலம் வேகமாக சூடடைகிறது; நீரின் தன் வெப்ப ஏற்புத்திறன் அதிகம் ஆதலால், கடல் எளிதில் சூடடைவதில்லை. அதாவது, நிலத்திற்கு மேலுள்ள வளி அதிக வெப்பநிலையிலும் கடலின் மேலிருக்கும் வளி குறைந்த வெப்பநிலையிலும் காணப்படுகின்றன. இதுவே நிலத்தின் மேலிருக்கும் வளியழுத்தம் குறைவதற்கும் கடலின் மேல்பகுதி வளியழுத்தம் அதிகமாவதற்கும் காரணமாகின்றது. அதிகவழுத்தப் பகுதியிலிருந்து தாழ்வழுத்தப் பகுதிக்கு காற்று பெயர்கின்றது. இதுவே பருவக்காற்று உருவாகக் காரணமாகும்.

வடகிழக்குப் பருவமழை ஏற்படக் காரணம்[தொகு]

இது “குளிர்காலப் பருவப்பெயர்ச்சி” எனவும் அழைக்கபடுகிறது. புவியின் வட அரைக்கோளக் குளிர்காலப் பருவத்தில் கதிரவனின் கதிர்கள் தென் அரைக்கோளத்தின் மேல் வீழ்கின்றன. தென் அரைக்கோளப் பகுதியில் வளி சூடாகி மேலெழும்புகிறது; அப்பகுதியில் தாழ்வழுத்தம் ஏற்படுகிறது. அதை நிரப்ப வட அரைக்கோள வளி “குளிர் கிளம்பல்” (cold surge) நிகழ்த்துகிறது. இக் குளிர் கிளம்பிய காற்று பெயரும் பகுதிகளிலுள்ள ஈரப்பதத்தை யெல்லாம் சேகரித்துக் கொண்டு இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவின் வட பகுதி, இலங்கை, இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதி ஆகிய இடங்களில் மழையாகப் பொழிகின்றது. [3]


இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. BBC Weather - The Asian Monsoon [1]
  2. library.thinkquest.org [2]
  3. library.thinkquest.org [3]