விந்திய மலைத்தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய புவியமைப்பு
விந்திய மலைத்தொடர்

விந்திய மலைத்தொடர் இந்தியத் துணைக்கண்டத்தின் மேற்கு-மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். தன்மை, அளவு ஆகியவற்றில் இது வட அமெரிக்காவின் அப்பலாச்சிய மலைகளை ஒத்தது எனச் சொல்லப்படுகிறது. இது இந்தியாவைப் புவியியல் அடிப்படையில் வட இந்தியா, தென்னிந்தியா என இரண்டாகப் பிரிக்கின்றது.[1][2]

இதன் மேற்குப்பக்க முடிவு, குஜராத் தீவக்குறையின் கிழக்குப் பகுதியில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுடனான எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடர் வடக்காகவும், கிழக்காகவும் சென்று மிர்சாப்பூருக்கு அண்மையில் கங்கை நதியை அணுகுகிறது. இம்மலைத்தொடரின் வடக்கிலும் மேற்கிலும் உள்ள பகுதிகள் விந்திய மலைத்தொடரினாலும், அராவலி மலைத்தொடரினாலும் மறைக்கப்பட்டு உள்ளதால் இவை வறண்ட பகுதிகளாக உள்ளன.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விந்திய_மலைத்தொடர்&oldid=3838007" இலிருந்து மீள்விக்கப்பட்டது