பசையெடுப்பான் குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசையெடுப்பான் குருவி

பசையெடுப்பான் குருவி (ஆங்கிலம்:Nuthatch) இது மரங்கொத்தி, மரமேறிக் குருவிகளைப் போல மரத்தூரிலும், கிளைகளிலும் ஏறித் திரியும் சிறு குருவி வகையாகும். 5 அங்குலம் நீளமிருக்கும். இது மரப்பட்டையிலுள்ள வெடிப்புகளிலும், இடுக்குகளிலும் பூச்சிகள், அப்பூச்சிகளின் இளம் புழுக்கள், சிலந்திகள் ஆகியவற்றைத்தேடித் தின்று வாழும் இயல்புடையது ஆகும். மற்ற பறவைகளை விட இதுவே மரமேறுவதில் மிகவும் திறமையுடையதாகும். இந்தப் பறவைகள் 'சிட்டிடே' (Sittidae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். இவை ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களில் உண்டு ஆப்பிரிக்காவில் சகாராவுக்கு வடக்கில் உண்டு. இது எங்கும் மிகுதியாக இல்லை. எனினும், பொதுவாகப் பரவி இருக்கிறது. தென்னிந்தியாவிலே இரண்டு இனங்கள் உள்ளன. ஒன்றன் அடிப்பாகம் செம்பழுப்பு நிறமாக இருக்கும். மற்றொன்றின் நெற்றியும், உச்சியும் கறுப்பு மென்பட்டுபோல இருக்கும். இவற்றின் அறிவியல் பெயர்கள் முறையே 'சிட்டா காசுட்டனியா' (Sitta castanea) , 'சிட்டா பிரன்டாலிசு' (Sitta frontalis) என்பனவாகும்.

சிறப்பியல்பு[தொகு]

மரங்கொத்தியிலே அதன் வாலிறகுகள், மரத்தில் ஏறும் போது, மரப்பட்டை மீது ஊன்றிக் கொண்டு, ஆதாரமாகப் பறவையைத் தாங்கிக் கொள்ளும். அவ்வித இறகுகள் இப்பறவைகளுக்கு இல்லை.இதன் வால் சிறியது. இருப்பினும், மரங்கொத்தியை விட சுறுசுறுப்பாகவும், விரைவாகவும், இங்குமங்கும் ஓடும். இது மரத்தில் மேல்நோக்கி ஏறுவது மட்டுமின்றி, எந்த திசையிலும் மேலும், பக்கங்களிலும், கீழ்நோக்கியும் ஓடும். அடிக்கடி கிளைகளின் கீழ்ப்பக்கங்களில் தலைகீழாக, முதுகு தரைப்பக்கமாகத் திரும்பி இருக்கும் படியும் ஓடும். சாதாரணமாகப் பறவைகள் கிளையைக் கால்விரல்களால் பற்றிக் கொண்டு உட்காருவது போல இதுவும் உட்காரக்கூடும். ஆனால், இது மிக்க முயற்சியுடனும், துடிதுடிப்பாகவும் சோம்பல் இல்லாமலும் இருக்கும் இயல்பை சிறப்பாகப் பெற்றுள்ளது. இது மரத்தின் மேலேயே வாழும்.

வளரியல்பு[தொகு]

தனியாக இது சிறுகூட்டங்களாக , மற்றப் பறவைகளுடன் கூடிக் கொண்டு இரை தேடும். மிக உயர்ந்த மரங்களிலும், மிக முதிர்ந்த மரங்களிலும், உச்சியிலே இது பெரும்பாலும் வாழும் இயல்புடையதாக உள்ளது. இதைப் பார்ப்பதைக் காட்டிலும், இதன் குரலைக் கேட்பதே அதிகம். இதில் குரல் ஒலியோடு, கொட்டையைக் கொத்தி உடைக்கும் சத்தமும் கேட்கும். இது கொட்டைகளையும், விதைகளையும், பட்டைப்பிளவுகளில் அழுத்திப் பொருத்தி வைத்துக் கொண்டு, அலகினால் கொத்திக் கொத்தி உடைத்துப் பருப்பைத்தின்னும். இப்பறவைக்கு இட்டிருக்கும் ஆங்கிலப்பெயரே, இந்தப் பழக்கத்தையே குறிக்கிறது.

கூடு[தொகு]

பசையெடுப்பான் கூடு கட்டுவது விநோதமாக இருக்கும். இது மரப்பொந்துகளில் கட்டும். பொந்தின் வாயைக் களிமண்ணாலும், சேற்றாலும், இலை முதலியவற்றை வைத்துப் பூசி, அடைத்துத் தங்களுடைய சிறிய உடல் நுழைவதற்கு வேண்டிய அளவு துளையை மட்டும் அமைத்துக் கொள்ளும். இப்படி அடைத்திருக்கும் பரப்புச் சிலநேரங்களில், மிக அகன்றதாக இருப்பதுண்டு. கூட்டின் உள்ளே உலந்த இலைகள், பட்டையின் உட்பக்கத்தில் இருக்கும் மென்மையான துணி போன்ற படலங்கள், பாசம், மயிர் ஆகியவற்றைப்போட்டு மெத்தென்று செய்திருக்கும். இவை 2-6 முட்டையிடும்.

பறவையின் உள்ளினங்கள்[தொகு]

இப்பறவையின் சிற்றினங்கள் பன்மயமாக, தெற்கு ஆசியாவில் காணப்படுகிறது. இது குறித்த பல்வேறு விவரங்களைக் காணும் போது, இவ்வினத்தின் தாயகம் தெற்கு ஆசியாவாக இருக்கலாம் என பறவையியலாளர்கள் எண்ணுகின்றனர். ஏறத்தாழ 15 உள்ளினங்கள் இப்பறவையில் காணப்படுகின்றன. இருப்பினும், பூமியின் வடகோளப்பகுதியில் இதன் இனங்கள் காணப்படுகின்றன.[1]

வகைப்பாட்டியலில் இப்பறவை இனங்கள்
பெயர்
விலங்கியல் இருசொற்பெயர்
ஊடகம் வர்ணனை பரவல்
யூரேசியப் பச்சைக்குருவி
(Sitta europaea)
Eurasian Nuthatch (Sitta europaea) -modified.jpg 14 செ.மீ(5.5 அங்குலம்) நீளமுடையது, கண்களில் கருநிறவரிகள், நீல-சாம்பல்நிற மேற்பகுதிகள், செந்நிறமும், வெண்மையும் உடையகீழ்பகுதிகளும்(துணை இனங்களைப் பொறுத்து மாறுபாடும்) வெப்பமண்டல யூரேசியா
(10 மில்லியன்)[2]
செம்பழுப்புப்புழை பச்சைக்குருவி
(Sitta nagaensis)
SittaNagaensis.svg 12.5–14 செ.மீ(5–5.5 அங்குலம்) நீளமுடையது, கண்களின் மேற்பகுதி சாம்பல் நிறமாகவும், கீழ்புறம் வெள்ளை நிறமாகவும், அடர்நிறத்தில் கண்கோடுகளும் அமைந்துள்ளன. வட இந்தியா கிழக்கு முதல் வடமேற்கு தாய்லாந்து[3]
கெசுமீரியப் பச்சைக்குருவி
(Sitta cashmirensis)
SittaCashmirensis.svg 14 செ.மீ(5.5 அங்குலம்) நீளமுடையது, பெரும்பாலும் சாம்பல்நிற மேற்பகுதிகளையும், செந்நிறகீழ்பகுதிகளும், வெளுத்த கன்னங்களும், தொண்டைப் பகுதியையும் உடையவை. கிழக்கு ஆப்கானித்தான் முதல் மேற்கு நேபாளம் வரை[4]
செம்பழுப்பு வயிற்றுப் பச்சைக்குருவி
(Sitta cinnamoventris)
SittaCinnamoventrisGould.jpg 13 செ.மீ(5.25 அங்குலம்) நீளமுடையது, நிறங்கள் துணை இனங்களுக்கு ஒப்ப மாறுபடுகிறது. இமாலயமலையின அடிவாரங்கள், (வடகிழக்கு இந்தியாவிலுந்து மேற்கு யூன்னன் சீனப்பகுதி வரை)தாய்லாந்து.[5]
இந்தியப் பச்சைக்குருவி
(Sitta castanea)
SittaCastanea.svg 13 செ.மீ(5.25 அங்குலம்) நீளமுடையது. வட மற்றும் நடு இந்தியப் பகுதிகள்[6]
பர்மியப் பச்சைக்குருவி
(Sitta neglecta)
SittaCastanea.svg 13 செ.மீ(5.25 அங்குலம்) நீளமுடையது. மியான்மர் முதல் லாவோசு, கம்போடியா, தெற்கு வியட்னாம் [7]
வெண்வால் பச்சைக்குருவி
(Sitta himalayensis)
SittaHimalayensis.svg 12 செ.மீ(4.75 அங்குலம்) நீளம்; S. cashmirensis என்பதைவிட சிறு அலகு; ஒருவித ஆரஞ்சுநிற கீழ்பகுதிகள்; எடுப்பான வெண்நிற வாலின் மேற்பகுதி; கீழ்பகுதி சிறிது ஆரஞ்சுநிறமாகவும் மாறுபடும்; உற்றுநோக்கினால் தெரியும் வண்ண வேறுபாடு; வடகிழக்கு இந்திய இமயமலைப்பகுதி முதல் தென்மேற்கு சீனப்பகுதி வரை; கிழக்கு வியட்னாம்.[8]
வெண்புருவப் பச்சைக்குருவி
(Sitta victoriae)
SittaVictoriae.svg 11.5 செ.மீ(4.5 அங்குலம்) நீளமுடையது, சாம்பல்நிற மேற்பகுதிகள்; கீழ்பகுதிகள் பெரும்பாலும் வெண்நிறம் பர்மா பகுதிக்குரியவை.[9]
குள்ளப் பச்சைக்குருவி
(Sitta pygmaea)
Pygmy Nuthatch (Sitta pygmaea) at a feeder.jpg 10 செ.மீ(4 அங்குலம்) நீளமுடையது, சாம்பல்நிற தலையுச்சி, நீலச்சாம்பல்நிற மேற்பகுதிகள், வெண்நிற கீழ்பகுதிகள், பிடரியில் வெண்பகுதி. வடஅமெரிக்காவின் மேற்குப்பகுதி; பிரிட்டிசு கொலம்பியாவிலிருந்து மெக்சிகோவின் தென்மேற்கு வரை
(2.3 மில்லியன்)[10]
பழுப்புத்தலைப் பச்சைக்குருவி
(Sitta pusilla)
Brown-headed Nuthatch-27527-4c.jpg 10.5 செ.மீ(4 அங்குலம்) நீளமுடையது, பழுப்பு உச்சி;குறுகிய கண்கருவரி;மினுமினுக்கும் வெண்நிற கன்னங்கள்;வயிறு; நீல-சாம்பல்நிற இறக்கைகள்; கழுத்தின் பின்புறம் வெண்பகுதி தென்கிழக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகள்+பகாமா
(1.5 மில்லியன்)[11]
கோர்சிகன் பச்சைக்குருவி
(Sitta whiteheadi)
SittaWhiteheadi.svg 12 செ.மீ(4.75 அங்குலம்) நீளமுடையது. நீலச்சாம்பல்நிற மேற்புறம்; கீழ்புறம் மினுமினுப்புத்தோல்; ஆண்குருவி: கருநிற உச்சியையும், குறுகிய கண்வரிகளையும், வெண் புருவமேலம்(supercilium);பெண்குருவி: சாம்பல்நிற உச்சியையும்; கண்வரிகளையும் உடையவை. குரோசியா பகுதிக்குரியது
(3,000–9,000 இணைகள்)[12]
அல்சீரியப் பச்சைக்குருவி
(Sitta ledanti)
SittaLedanti.svg 13.5 செ.மீ(5.5 அங்குலம்) நீளமுடையது, நீலச்சாம்பல்நிற மேற்புறம்; மினுக்கும் கீழ்பகுதி; ஆண்: கருஉச்சி; புருவமேலத்தால் பிரிக்கப்படும் கண்வரிகள்; பெண்: சாம்பல்நிற உச்சியும், கண்வரியும் பெற்றவை. வடகிழக்கு அல்சீரியா பகுதிக்குரியவை
( 1,000< இணைக)[13]
குருப்பர்சுப் பச்சைக்குருவி
(Sitta krueperi)
090503 Krupers nuthatch east of Gulf of Kalloni.jpg 11.5–12.5 செ.மீ(4.5–5 அங்குலம்) நீளமுடையது, வெண்மையான கீழ்பகுதிகள்; செந்நிறதொண்டை; பெரும்பாலும் சாம்பல்நிற மேற்பகுதிகள். துருக்கி, சியார்சியா , இரசியா; கிரேக்கம் (Lesbos).
(80,000–170,000 இணைகள்)[14]
சீனப் பச்சைக்குருவி
(Sitta villosa)
SittaVillosa.svg 11.5 செ.மீ(4.25 அங்குலம்) நீளமுடையது, சாம்பல்நிற மேற்பகுதிகள்; இளஞ்சிவப்பு கீழ்பகுதிகள். சீனா, வடகொரியா, தென்கொரியா[15]
யூன்னன் பச்சைக்குருவி
(Sitta yunnanensis)
SittaYunnanensis.svg 12 செ.மீ(4.75 அங்குலம்) நீளமுடையது, சாம்பல்நிற மேற்பகுதிகள்; வெண்நிற கீழ்பகுதிகள். தென்மேற்கு சீனாவிற்குரியது [16]
செம்மார்புப் பச்சைக்குருவி
(Sitta canadensis)
Red-breasted Nuthatch (Sitta canadensis)10-4c.jpg 11 செ.மீ(4 அங்குலம்) நீளமுடையது, நீலச்சாம்பல்நிற மேற்பகுதிகள், செந்நிறகீழ்பகுதிகள், வெண்முகம்;கருநிற கண்வரிகள்;வெண்தொண்டை; சாம்பல்நிற நேரானஅலகு; கருநிற உச்சி. வடமெரிக்காவின் வடக்கு, மேற்கு வெப்பமண்டலம்;பனிகாலத்தில் அமெரிக்க ஐக்கிய நாடு;தென்கனடா
(18 மில்லியன்)[17]
வெள்ளைகன்னப் பச்சைக்குருவி
(Sitta leucopsis)
White-cheeked Nutthatch I IMG 7384.jpg 13 செ.மீ(5 அங்குலம்) நீளமுடையது, வெண்குஞ்சுகள்,கன்னங்கள்,தொண்டை;கீழ்பகுதிகள், மேற்பகுதிகள் பெரும்பாலும் அடர் சாம்பல்நிறம் மேற்கு இமாலயப்பகுதிகள்[18]
பெர்சிவால்சுகிப் பச்சைக்குருவி
(Sitta przewalskii)
13 செ.மீ(5 அங்குலம்) நீளமுடையது, வெண்குஞ்சுகள்,கன்னங்கள்,தொண்டை; கீழ்பகுதிகள், மேற்பகுதிகள் பெரும்பாலும் அடர் சாம்பல்நிறம் திபெத் தென்கிழக்கு முதல் சீனவான் மேற்பகுதி[19]
வெண்மார்ப்புப் பச்சைக்குருவி
(Sitta carolinensis)
Sitta-carolinensis-001.jpg 13–14 செ.மீ(5–6 அங்குலம்) நீளமுடையது, முகத்தின் வெண்பகுதிகள் முழுமையாக கண்ணைச் சுற்றிலும், கீழ்பகுதிகளிலும்; வெளுத்த மேற்பகுதிகள்; பெரும்பாலும் நீல-சாம்பல்நிறமுடையது வட அமெரிக்கா;தெற்கு கனாடாவில் இருந்து, மெக்சிகோ வரை[9][20]
மேற்குப்பாறைப் பச்சைக்குருவி
(Sitta neumayer)
Westernrocknuthatch Sitta neumayer.jpg 13.5 செ.மீ(5.5 அங்குலம்) நீளமுடையது. வெண்தொண்டை; திட்டுதிட்டான வயிற்று கீழ்பகுதிகள்; சாம்பல்நிற மேற்பகுதிகள்;கண்ணில் அடர் கோடுகள் (மூன்று துணைஇனங்களில்) கிழக்குபால்கன் குடா, கீரிசு, துருக்கி முதல் ஈரான் வரை
(130,000)[21]
கிழக்குப்பாறைப் பச்சைக்குருவி
(Sitta tephronota)
SittaTephronota.svg 16–18 செ.மீ(6.25–7 அங்குலம்) நீளமுடையது, சாம்பல்நிற மேற்பகுதிகள்; வெண்மயான கீழ்பகுதிகள், இளஞ்சிவப்பு பின்புற உடல். வடஈராக்; மேற்கு ஈரான் கிழக்கு, நடுஆசியா
(43,000–100,000 in Europe)[22]
முன்மென்பட்டுப் பச்சைக்குருவி
(Sitta frontalis)
Velvet-fronted Nuthatch (Sitta frontalis)2-2008-11-07.jpg 12.5 செ.மீ(5 அங்குலம்) நீளமுடையது, மேற்புறம் கத்திரி-நீலம்;லாவன்டர் குஞ்சுகள்; வெளுத்த பழுப்புநிற கீழ்பகுதிகள்;வெண்தொண்டை;சிவப்புஅலகு; முன்னந்தலையில் கருந்திட்டு. இந்தியா; இலங்கை;தென்கிழக்குஆசியா முதல் இந்தோனேசியா[23]
மஞ்சள்வயிற்றுப் பச்சைக்குருவி
(Sitta solangiae)
SittaSolangiae.svg 12.5–13.5 செ.மீ(5–5.5 அங்குலம்) நீளமுடையது, வெண்கீழ்பகுதிகள், நீலமேற்பகுதிகள், மஞ்சளான அலகு. வியட்நாம்- சீனாவின் ஆய்னான் தீவு[24]
கந்தகவயிற்றுப் பச்சைக்குருவி
(Sitta oenochlamys)
SittaOenochlamys.svg 12.5 செ.மீ(5 அங்குலம்) நீளமுடையது, இளஞ்சிவப்பு கீழ்பகுதிகள், மஞ்சளான அலகு, நீல மேற்பகுதிகள். பிலிப்பைன்சு நாட்டுப்பறவை[25]
நீலப் பச்சைக்குருவி
(Sitta azurea)
Bluenuthhatch01.jpg
Click here for video
13.5 செ.மீ(5.25 அங்குலம்) நீளமுடையது, சாம்பல்நிற மேற்பகுதிகள் and whitish கீழ்பகுதிகள். மலேசியா, சுமத்திரா, ஜாவா (தீவு)[26]
பெரும் பச்சைக்குருவி
(Sitta magna)
SittaMagna.svg. 19.5 செ.மீ(7.75 அங்குலம்) நீளமுடையது, சாம்பல்நிற மேற்பகுதிகள்;வெண்மையானக் கீழ்பகுதிகள். சீனா, பர்மா, தாய்லாந்து.[27]
அழகுநிறைப் பச்சைக்குருவி
(Sitta formosa)
SittaFormosa.svg 16.5 செ.மீ(6.5 அங்குலம்) நீளமுடையது,வெண்நிறக் கோடுகளுடைய கரும்முதுகு; எடுப்பான நீலநிற மேற்புற முதுகு,பிட்டம், தோள்; மங்கலான ஆரஞ்சுநிற கீழ்பகுதிகள்; வெளுப்பான முகம். வடகிழக்கு இந்தியா, பர்மா; தென்சீனப்பகுதிகள்;வட,தென்கிழக்கு ஆசியப்பகுதிகள்[28]


மேற்கோள்கள்[தொகு]

  1. name="HQfamily"- The currently recognised nuthatch species are tabulated below.
  2. name="HQeurasian"
  3. Harrap & Quinn (1996) pp. 114–117 "Chestnut-vented Nuthatch"
  4. Harrap & Quinn (1996) pp. 117–119 "Kashmir Nuthatch"
  5. Harrap & Quinn (1996) pp. 119–123 "Chestnut-bellied Nuthatch"
  6. name="Rasmussen" + "HQcbn"
  7. name="Rasmussen" - "HQcbn"
  8. Harrap & Quinn (1996) pp. 123–125 "White-tailed Nuthatch"
  9. 9.0 9.1 Harrap & Quinn (1996) pp. 125–126 "White-browed Nuthatch" பிழை காட்டு: Invalid <ref> tag; name "HQwbn" defined multiple times with different content
  10. Harrap & Quinn (1996) pp. 127–130 "Pygmy Nuthatch"
  11. Harrap & Quinn (1996) pp. 130–133 "Brown-headed Nuthatch"
  12. Harrap & Quinn (1996) pp. 133–135 "Corsican Nuthatch"
  13. Harrap & Quinn (1996) pp. 135–138 "Algerian Nuthatch"
  14. Harrap & Quinn (1996) pp. 138–140 "Krüper's Nuthatch"
  15. Harrap & Quinn (1996) pp. 140–142 "Chinese Nuthatch"
  16. Harrap & Quinn (1996) pp. 143–144 "Yunnan Nuthatch"
  17. Harrap & Quinn (1996) pp. 144–148 "Red-breasted Nuthatch"
  18. Harrap & Quinn (1996) pp. 148–150 "White-cheeked Nuthatch"
  19. Rasmussen, P.C., and J.C. Anderton. 2005. Birds of South Asia. The Ripley guide. Volume 2: attributes and status. Smithsonian Institution and Lynx Edicions, Washington D.C. and Barcelona
  20. Bull, John and Farrand, John Jr. The Audubon Society Field Guide to North American Birds, Eastern Region. Alfred A. Knopf, Inc. (1977) pp. 646–647 "White-breasted Nuthatch"
  21. Harrap & Quinn (1996) pp. 155–158 "Western Rock Nuthatch"
  22. Harrap & Quinn (1996) pp. 158–161 "Eastern Rock Nuthatch"
  23. Harrap & Quinn (1996) pp. 161–164 "Velvet-fronted Nuthatch"
  24. Harrap & Quinn (1996) pp. 164–165 "Yellow-billed Nuthatch"
  25. Harrap & Quinn (1996) pp. 165–168 "Sulphur-billed Nuthatch"
  26. Harrap & Quinn (1996) pp. 168–169 "Blue Nuthatch"
  27. Harrap & Quinn (1996) pp. 169–172 "Giant Nuthatch"
  28. Harrap & Quinn (1996) pp. 172–173 "Beautiful Nuthatch"