நெடுங்கால் உள்ளான்
நெடுங்கால் உள்ளான் | |
---|---|
முதிர்வடையா நெடுங்கால் உள்ளானுடன் முதிர்ந்த பறவை, அரியானாவின் ஓடாலில். | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
துணைவகுப்பு: | |
உள்வகுப்பு: | |
பெருவரிசை: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | H. himantopus (disputed)
|
இருசொற் பெயரீடு | |
Himantopus himantopus (லின்னேயசு, 1758) | |
துணையினம் | |
1–7, see text | |
Range of H. himantopus (sensu lato, see text)
Breeding Resident Passage Non-breeding |
நெடுங்கால் உள்ளான் (Black-winged Stilt - Himantopus himantopus) என்பது நீண்ட கால்களைக் கொண்ட கரைப்பறவைகளுள் ஒன்றாகும். இது நீர் நிலைகளுக்கு அருகில் வாழக்கூடிய பறவை ஆகும்.
விளக்கம்
[தொகு]முதிர்ந்த பறவைகள் 33-36 செமீ (13-14 அங்குலம்) நீளம் கொண்டவை. இந்தப் பறவையின் உடலின் மேற்பகுதியான பின்பகுதியும், இறக்கைகளும் கறுப்பு நிறத்தில் இருக்கும். தலை, கழுத்து, மார்பு, வயிறு ஆகியன நல்ல வெண்மை நிறத்தில் இருக்கும். நீண்ட கருப்பான அலகு இருக்கும். இளஞ்சிவப்பு நிற நீண்ட கால்கள் கொண்டவை. இந்தப் பறவையானது தன் கால்களைப் பயன்படுத்தி தனக்கான உணவைத் தேடுகின்றன. இவை ஆபத்தான சூழலில் மட்டும் நீரில் மூழ்கி நீந்தக்கூடியது. பறக்கும்போது கூரியதான கறுத்த இறக்கைகளும், பின் தொங்கும் பவளச் சிவப்பு நிறக் கால்களும் தொலைவில் இருந்துகூட அடையாளம் காணத்தக்கதாக இருக்கும்.
பெண் பறவையின் இறக்கைகளும் பின் முதுகும் கறுப்புக்கு பதிலாக கரும்பழுப்பு நிறத்தில் இருக்கும். கோடையில் சில நிறவேறுபாடுகள் தோன்றுவது உண்டு.
-
முட்டை
-
குஞ்சு
-
காசிங்கா கால்வாய், உகாண்டா
இயல்பு
[தொகு]இந்தப் பறவைகள் எப்போதும் கூட்டமாகவே காணப்படும். இவை தங்கள் கூடுகளை தண்ணீருக்கு அருகில் அருகருகே அமைத்துக் கொள்கின்றன. தன் எல்லைக்குள் வேறு பறவைகளை இவை நுழைய விடாது. அவ்வாறு நுழையும் பறவைகளை, சத்தம் எழுப்பித் துரத்தும். கோடைக் காலத்தில் இவை இனப்பெருக்கம் செய்கின்றன. கீழே உள்ள கூடுகளில் முட்டைகளை மறைவாக இட்டு வைத்திருக்கும். இவை பெரும்பாலும் இடம்பெயர்வதில்லை. தண்ணீர் வற்றிப்போனால் மட்டுமே வேறு வழியின்றி இவை இடம்பெயர்கின்றன. தமிழகத்தில், பள்ளிக்கரணை சதுப்புநிலத்திலும், வேடந்தாங்கலிலும் இந்தப் பறவை அதிகம் காணப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் சர்க்கார் பெரியபாளையம் ஏரி என்றழைக்கப்படும் நஞ்சராயன் குளத்தில் இப்பறவைகள் காணப்படுகின்றன. [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Himantopus himantopus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 16 July 2012.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ ராதிகா ராமசாமி (26 சனவரி 2019). "இளஞ்சிவப்புக் காலழகி". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 27 சனவரி 2019.