மஞ்சள் குருகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Yellow bittern
Ixobrychus sinensis - Bueng Boraphet.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: Animalia
தொகுதி: Chordata
வகுப்பு: Aves
வரிசை: பெலிகனிபார்மசு
குடும்பம்: அர்டெயிடே
பேரினம்: Ixobrychus
இனம்: I. sinensis
இருசொற் பெயரீடு
Ixobrychus sinensis
(Gmelin, 1789)

மஞ்சள் குருகு[2][3] எனப்படும் மணல் நாரை [4] அல்லது மஞ்சள் கொக்கு என்பது ஒரு சிறிய வகைக் குருகு. இவை இந்தியத் துணைக்கண்டத்தின் வட பகுதிகளிலும் ஜப்பான், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் இனப்பெருக்கம் செய்கின்றன; பொதுவில் இவை வலசை போவதில்லை எனினும் வட பகுதிகளிலுள்ள சில பறவைகள் சிறிய தொலைவிற்கு உள்நாட்டு வலசை செல்கின்றன.

கள இயல்புகள்[தொகு]

உடல் தோற்றம்[தொகு]

செங்குருகைப் போன்று இதுவும் ஒரு சிறிய ஒல்லியான வகைக் குருகு; ஒட்டுமொத்த தோற்றத்தில் குருட்டுக் கொக்கு போல் இருந்தாலும், இது பறக்கும் போது இதன் மஞ்சள் கலந்த வெண் பழுப்பு நிற உடலும் கருத்த இறக்கைகளும் இதனை வேறுபடுத்திக் காட்டும்.[4]

வளர்ந்த ஆண்[தொகு]

Hong Kong - Yellow Bittern - Ixobrychus sinensis - 2017.jpg

புதர் போன்ற கருத்த கொண்டை; பின்புறம் மஞ்சள் கலந்த பழுப்பு நிறம் உடையது. வால் சாம்பல் கலந்த கருமை நிறம் கொண்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ixobrychus sinensis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. தென் இந்திய பறவைகள் - கிரிமிட், இன்சுகிப், மகேஷ்வரன் - பக். 152:2 - BNHS (2005)
  3. தமிழில் பறவைப் பெயர்கள் – க. ரத்னம் – பக். 18:21
  4. 4.0 4.1 Handbook of the Birds of India and Pakistan – Salim Ali & Dillon Ripley – Vol. I (p. 86 ff : 57) – OUP (1968)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_குருகு&oldid=2723829" இருந்து மீள்விக்கப்பட்டது