செங்குருகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செங்குருகு
Cinnamon bittern or chestnut bittern (Ixobrychus cinnamomeus) Photograph by Shantanu Kuveskar.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகெழும்புள்ளவை
வகுப்பு: பறவை
வரிசை: பெலிகனிபார்மசு
குடும்பம்: அர்டெயிடே
பேரினம்: Ixobrychus
இனம்: I. cinnamomeus
இருசொற் பெயரீடு
Ixobrychus cinnamomeus
(Gmelin, 1789)
Ixobrychus cinnamomeus map.svg

செங்குருகு (Cinnamon Bittern - Ixobrychus cinnamomeus) தொல்லுலக குருகு வகையைச் சார்ந்த ஒரு சிறிய பறவை ஆகும். சீனா, இந்தியா, இந்தோனேசியா, தென் கிழக்கு ஆசியா உள்ளிட்ட பகுதிகளில் பரவியுள்ளது. பொதுவில் ஓரிடப் பறவையான செங்குருகு, சில பகுதிகளில் சிறிய தொலைவு பறந்து சென்றும் இனப்பெருக்கம் செய்யவல்லது. இதன் இனப்பெருக்கத்திற்கு உகந்த சூழல்பகுதிகள் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல ஆகியவை ஆகும்.

தோற்ற அமைப்பு[தொகு]

குட்டையான கழுத்தும் நீண்ட அலகும் கொண்டது; 38 செமீ நீளம், 90 கிராமிலிருந்து 165 கிராம் எடை கொண்டு மடையானை விட சிறியதாவும் மெல்லியதாகவும் இருக்கும்.

ஆண் பறவை: பெரும்பாலும் செம்மண் நிறமுடையது; மார்பின் மேல் பகுதி கருப்பாக இருக்கும்.

பெண் பறவை: பின் பகுதி புள்ளிகளுடன் மார்புப் பகுதி செம்பழுப்பு கோடுகள் கொண்டது

உணவு[தொகு]

இதன் உணவு வகைகள் நீரில் வாழும் பூச்சி, புழுக்கள் போன்றவையாகும்.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்குருகு&oldid=3137518" இருந்து மீள்விக்கப்பட்டது