தவிட்டுப்புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தவிட்டுப்புறா
செவ்வாமைப் புறா
பெங்களூர், இந்தியா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
கொலும்பிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
சிரிடெப்டோபெலியா
இனம்:
சி. திரங்குபாரிகா
இருசொற் பெயரீடு
சிரிடெப்டோபெலியா திரங்குபாரிகா
(எர்மண், 1804)

தவிட்டுப்புறா (உயிரியல் பெயர்:சிரிடெப்டோபெலியா திரங்குபாரிகா) (Red Turtle Dove,Red Collared Dove), எனும் வலசைபோகும் புறா, செவ்வாமைப் புறா என்றும் அழைக்கப்படுகிறது.இந்த சிறும்புறா இனமானது சமவெளிப்பகுதிகளிலேயே அதிகம் வாழுகின்றன. பாறைகள் நிறைந்த இடங்களில் வாழுவதைத் தவிர்க்கின்றன. உலகின் கிழக்கு நாடுகளில் (oriential species) , இவைக் காணப்படுகின்றன. குறிப்பாக தீபகற்ப இந்தியாவிலும், தைவானிலும், பிலிப்பைன்சிலும் இவை அதிகமாகக் காணப்படுகின்றன.

வகைப்பாடு[தொகு]

இதில் துணையினங்கள் அங்கீகரிக்கபட்டுள்ளன:[2]

  • S. t. humilis (Temminck, 1824) – கிழக்கு நேபாளம், வடகிழக்கு இந்தியா மற்றும் வடகிழக்கு திபெத் முதல் வட சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் வரை
  • இந்தியத் தவிட்டுப்புறா S. t. tranquebarica (Hermann, 1804) – பாக்கித்தான், தீபகற்ப இந்தியா, மேற்கு நேபாளம்

சிறப்புகள்[தொகு]

இந்தியபஞ்சாப் பகுதி
வடமேற்குப் பாகிசுத்தான்

தமிழ்மருத்துவம்[தொகு]

ஓடுகரப் பான்சோபை உட்சொறிகா மாலைபித்தம் ஆடு பெருமூச் சடைப்பும்போம் – நீடு கவட்டுக் கலகவிழிக் காரிகையே நாளும் தவிட்டுப் புறாக்கறிக்குத் தான்.

என்று கூறப்பட்டுள்ளன. புறாவின் இரத்தத்திற்கும் கறியின் குணம் இருக்கும். பொதுவாக, புறா வெப்பத்தன்மை கொண்டது. ஆகையால், காசம்,கபம்,வாதம், பித்தம், ஐயம் போன்ற நோய்களுக்கு ஏற்றதாக அறியப்பட்டுள்ளன.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Stigmatopelia senegalensis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2009.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2009.
  2. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (2020). "Pigeons". IOC World Bird List Version 10.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 28 February 2020.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தவிட்டுப்புறா&oldid=3776867" இலிருந்து மீள்விக்கப்பட்டது