பொரி உள்ளான்
பொரி உள்ளான் | |
---|---|
மங்கலசோடி ஈரநிலங்களில், சிலிகா ஏரி, இந்தியா. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
துணைவகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | T. glareola
|
இருசொற் பெயரீடு | |
Tringa glareola லின்னேயசு, 1758 | |
வேறு பெயர்கள் | |
Rhyacophilus glareola (L. 1758) |
பொரி உள்ளான்[2] எனப்படும் பொரி மண்கொத்தி [3](Wood Sandpiper - Tringa glareola) ஒரு வலசை போகும் டிரிங்கா வகை உள்ளான். இவை நீளக் கால்கள் கொண்ட நடுத்தர அளவுள்ள கரைப்பறவைகளாகும். நன்னீர் ஏரிகளிலும் சதுப்புநிலங்களிலும் (ஈரநிலங்கள்) இவற்றைக் காணலாம். ஒரே உயிரியல் குடும்பத்தைச் சார்ந்த பவளக்காலியின் மிக நெருங்கிய உறவாக இப்பறவை உள்ளது.
உடல் தோற்றம்
[தொகு]- 18 செ.மீ- 21 செ.மீ நீளமுள்ளது.
- (வெண்)புருவம் நீண்டு காணப்படும்.
- முதிர்ந்த பறவையின் இறக்கையின் அடர்பழுப்பு நிற வெளிப்பகுதியிலும் தொண்டை, மார்புப் பகுதிகளிலும் தெளிவான புள்ளிகள் காணப்படும். (முதிர்வடையாத பறவையில் பொரிகள் தெளிவாக இராது).
- பறக்கும்போது தென்படும் இறக்கையின் உள்பகுதி வெளிர் நிறத்திலிருக்கும்.[4]
- கால்கள் பசுமை கலந்த மஞ்சள் நிறத்திலிருக்கும் [5].
ஆற்று உள்ளான் வேறுபாடு
[தொகு]பொதுவில் ஒன்று போலவே தென்படும் ஆற்று உள்ளானிலிருந்து (Green Sandpiper - Tringa ochropus) பொரி உள்ளானை வேறுபடுத்திக் காட்ட பின்வரும் களக்குறிப்புகள் உதவும்:
- (வெண்)புருவம் சிறியதாக கண்ணிற்கு முன் மட்டும் காணப்படும்; கண்ணின் பின்புறம் புருவம் இராது[6].
- இறக்கையின் உள்பகுதி கருமையாக இருக்கும்.
- இறக்கை பொரி உள்ளானை விடக் கருமையாகவும் (புள்ளிகள்/பொரிகள் தெளிவாக இராது) உடல் வெண்ணிறமாகவும் இருக்கும்.
- பறக்கும்போது இறக்கையின் கருமையான உள்பகுதி தென்படும்.[7]
கள இயல்புகள்
[தொகு]மற்ற கரைப்பறவைகளை விட அதிகம் கூடிவாழ்கின்ற இயல்புடையது. சேற்றிலும் குறைவான நீருள்ள ஈரநிலங்களிலும் அலகால் பெருக்கியபடி உணவைப் பொறுக்கி எடுக்கும். பனிக்கால உறைவிடங்களிலும் உரிமையை நிலைநாட்டுவதில் சண்டையிடும் குணமுடையது.[8]
பரவல்
[தொகு]இந்தியா முழுவதும் பனிக்காலத்தில் காணப்படும். ஆகஸ்டில் வந்து ஏப்ரலில் தான் வலசை போகும்.[8]
உணவு
[தொகு]மெல்லுடலிகள், பூச்சிகள், புழுக்கள்.
கூப்பாடு
[தொகு]மெல்லிய சிஃப்-இஃப்-இஃப் (chiff-if-if) குரல் தருகிறது.
காணொலிகள்
[தொகு]- பிரித்தனிய அறக்கட்டளையின் BTO-YouTube காணொலி-ஆற்று உள்ளானையும் பொரி உள்ளானையும் வேறுபடுத்துதல்-[1]
கலைச்சொற்கள்
[தொகு]வலசை = migration; ஈரநிலம் = wetland; கரைப்பறவை = shore bird (or wader); முதிர்ந்த = adult; அடர்பழுப்பு = dark brown; புருவம் = supercilium; மெல்லுடலி = mollusc;
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Tringa glareola". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 16 July 2012.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ BIRDS OF TAMILNADU-K. RATNAM-Bird No. 96
- ↑ தென் இந்திய பறவைகள் - கிரிமிட், இன்சுகிப், மகேஷ்வரன் - பக். 100:2 - BNHS (2005)
- ↑ planetofbirds.com
- ↑ MigrantWatch.in
- ↑ MigrantWatch.in
- ↑ planetofbirds.com
- ↑ 8.0 8.1 BIRDS OF TAMILNADU - K. RATNAM - Bird# 96
வெளி இணைப்புகள்
[தொகு]- Wood sandpiper species text in The Atlas of Southern African Birds
- Oriental Bird Images: Wood Sandpiper Selected photos
- Ageing and sexing (PDF; 1.8 MB) by Javier Blasco-Zumeta & Gerd-Michael Heinze
- {{{2}}} on Avibase
- பொரி உள்ளான் videos, photos, and sounds at the Internet Bird Collection
- பொரி உள்ளான் photo gallery at VIREO (Drexel University)
- Interactive range map of Tringa glareola at IUCN Red List maps
- Audio recordings of Wood sandpiper on Xeno-canto.
- Tringa glareola பிளிக்கரில்: Field Guide Birds of the World
- பொரி உள்ளான் media at ARKive