ஆற்று உள்ளான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆற்று உள்ளான்
Green Sandpiper (Tringa ochropus)- In Breeding plumage at Bharatpur I IMG 5533.jpg
பரத்பூர் தேசியப் பூங்காவில் இனப்பெருக்க கால சிறகுத்தொகுதியுடன் ஒரு வளர்ந்த ஆற்று உள்ளான்.
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: சரத்ரீபார்மசு
குடும்பம்: இசுகோலோபாசிடே
பேரினம்: திரிங்கா
இனம்: தி. ஓக்ரோபசு
இருசொற் பெயரீடு
திரிங்கா ஓக்ரோபசு
லின்னேயஸ், 1758

ஆற்று உள்ளான் (Green sandpiper, திரிங்கா ஓக்ரோபசு) ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் காணப்படும் ஒரு பறவை. கரைப்பறவை வகையைச் சேர்ந்த இப்பறவை வலசை போகும் பழக்கமுடையது. குளிர்காலங்களை இந்தியத் துணைக்கணடத்திலும், தென்கிழக்காசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் கழிக்கும். பழுப்பு நிற சிறகுகளில், வெள்ளைப் புள்ளிகளை கொண்டிருக்கும்; மரங்களில் கூடு கட்டி வாழும்.

வகைப்பாட்டியல்[தொகு]

1758 ஆம் ஆண்டில் சுவீடன் இயற்கையியலாளர் கரோலஸ் லின்னேயஸ் தனது சிஸ்டமா நேச்சுரேயின் பத்தாவது பதிப்பில் திரிங்கா ஓக்ரோபசு என்ற பெயரில் இவர் பச்சை ஆற்று உள்ளான் குறித்து விவரித்திருந்தார்.[2] திரிங்கா என்பது 1599ஆம் ஆண்டில் ஆல்ட்ரோவாண்டசு என்பவரால் பச்சை உள்ளானுக்கு வழங்கப்பட்ட புதிய இலத்தீன் பெயராகும். சிற்றினப் பெயரான ஓக்ரோபசு பாதம் என பொருள்படும் பண்டைய கிரேக்க ஓக்ரோஸ், "ஓச்சர்" மற்றும் பூசு, ஆகியவற்றிலிருந்து வந்தது. இது ஒற்றைச் சிற்றினமாகும்.[3] இதன் கீழ் எந்த கிளையினமும் அங்கீகரிக்கப்படவில்லை.[4]


மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஆற்று உள்ளான்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆற்று_உள்ளான்&oldid=3353011" இருந்து மீள்விக்கப்பட்டது