கதிர்க்குருவி
கதிர்க்குருவி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம் |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | Passeriformes |
குடும்பம்: | Cisticolidae |
பேரினம்: | Prinia |
இனம்: | P. inornata |
இருசொற் பெயரீடு | |
Prinia inornata சைக்ஸ், 1832 |
கதிர்க்குருவி (ஒலிப்பு (உதவி·தகவல்)) (prinia inornata) is ஒரு சிறிய பறவை எனினும் அதன் பழக்க வழக்கங்களைக்கருதி இதற்கு பல பெயர்கள் உண்டு. (எ-டு: Plain Prinia, or the Plain, or White-browed, Wren-Warbler).[2] இது முன்பு செம்பட்டைக்கால் கதிர்க்குருவி (Tawny-flanked Prinia, Prinia subflava (Gmelin, 1789)), என்றும் எண்ணப்பட்டது. எனினும் செம்பட்டைக்கால் கதிர்க்குருவி சகாரா பாலைவனத்தின் தெற்கு காணப்பெறும் தனி இனம் என்று பிறகு பிரிக்கப்பட்டது.
பரம்பல்[தொகு]
Prinia inornata என்ற விலங்கியல் பெயர் கொண்ட இப்பறவை தென்கிழக்கு ஆசியாவில் பாக்கித்தான் முதல் இந்தியா மற்றும் தெற்கு சீனா வரை பரவிய வலசை வாரா பறவையினம். ஒரே இடத்தில் தங்கி இனவிருத்தி செய்யும். இலங்கையில் மட்டுமே வாழும் ஒரு துணை இனமானது குளிர்காலங்களில் மேலுடல் வெளிரிப்போன இளஞ்சிவப்பும், அடிப்பகுதி இளஞ்சாம்பலும், குட்டையான வாலும் கொண்டிருக்க; வேனிற்காலத்தில் நீண்ட வாலைக்கொண்டிருக்கும்.
உருவமைப்பு[தொகு]
இவை 13 முதல் 14 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியவை. வட்ட வடிவ சிறகுகளும், நீண்ட வாலும், பலம் பொருந்திய கால்களும், சிறிய குட்டையான கருத்த அலகும் உண்டு. அடிப்பகுதி இளஞ்சாம்பல் நிறத்தையும், மேல்பகுதி கருஞ்சாம்பல் நிறத்தையும் கொண்டிருக்கும். இனவிருத்தி காலங்களில் உடலின் மேல்பகுதி சாம்பல் நிறம் கொள்ளும். இருபாலினமும் ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கும்.
குணாதிசயங்கள்[தொகு]
வாழ்விடங்கள்[தொகு]
வளர்ந்த கோரைப்புல் பெருகியுள்ள இடங்களை விரும்பி வாழ்கின்றன இவை நீர் நிலைகள் அருகில் இருக்க விரும்பும். இதற்கு முக்கிய காரணம் இவை பூச்சியுண்ணியாக இருப்பதே.
ஒலி[தொகு]
இவற்றின் ஒலி ட்லீஈஈ-ட்லீஈஈ-ட்லீஈஈ என்று தொடர்ந்து ஒலிக்கும். மிகத்துள்ளியமாக இதன் ஒலியைக்கண்டறியலாம்.
உணவு[தொகு]
மற்ற சிறுகுருவிகள் போன்று கதிர்க்குருவி பூச்சியுண்ணி. குளக்கரைகள், புல் படுக்கைகள், நதிக்கரைகள், வயல்வெளிகள், காடுகள் என்று எங்கெல்லாம் பூச்சிகள் உள்ளனவோ, அங்கெல்லாம் இவை பல்கிப்பெருகுகின்றன.
இனப்பெருக்கம்[தொகு]
நன்கு வளர்ந்த கோரைப்புற்களில் தன் கூடுகளை அமைக்கும். கூடு கட்டும் பறவைகள் பஞ்சு, சிறு நூல் கண்டுகள், கோரைப்புல்லின் பஞ்சு போன்ற உருப்பு என பல பொருட்களைப் பயன்படுத்தும். மிகவும் மறைவாக கீழிருக்கும் நீர் எவ்வளவு உயர்ந்தாலும் கட்டிய கூட்டை நனைக்காமல் வடிவமைக்கும். இவ்வாறான கூட்டில் 3 முதல் 6 முட்டைகளை இடும். குஞ்சுகளுக்கும் பூச்சிகள் தீனியாக அளிக்கப்படுகிறது.
படிமங்கள்[தொகு]
-
உணவை உட்கொள்ளும் வேளையில், கோல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா.
-
அழைத்தல், கோல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா.
-
ஐதராபாத்து அருகில், இந்தியா.
-
கவால் சரணாலயம், இந்தியா.
-
கவால் சரணாலயம், இந்தியா.
-
கவால் சரணாலயம், இந்தியா.
-
கவால் சரணாலயம், இந்தியா.
-
ஐதராபாத்து அருகில், இந்தியா.
-
சென்னை பெரும்பாக்கம் ஏரிக்கரையில் குரலெழுப்பும் கதிர்க்குருவி
உசாத்துணை[தொகு]
- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Prinia inornata". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1 (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்). http://www.iucnredlist.org/details/106007379. பார்த்த நாள்: 16 July 2012.
- ↑ Bikram Grewal; Bill Harvey and Otto Pfister (2002). Photographic guide to birds of India. Periplus editions / Princeton University Press. p. 343
மேற்கொண்டு படிக்க[தொகு]
- Warblers of Europe, Asia and North Africa by Baker, ISBN 0-7136-3971-7
- Birds of India by Grimmett, Inskipp and Inskipp, ISBN 0-691-04910-6
- Birds of The Gambia by Barlow, Wacher and Disley, ISBN 1-873403-32-1