தகைவிலான்
தகைவிலாங் குருவி | |
---|---|
தமிழகத்திற்கு வலசை வரும், H. r. gutturalis ஜப்பானில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | Passeriformes |
குடும்பம்: | Hirundinidae |
பேரினம்: | Hirundo |
இனம்: | H. rustica |
இருசொற் பெயரீடு | |
Hirundo rustica லின்னேயசு, 1758 | |
![]() | |
இனப்பெருக்க பரவல் Resident year-round வலசை போகும் இடங்கள்
| |
வேறு பெயர்கள் | |
|
தகைவிலான் அல்லது தகைவிலாங் குருவி (Barn Swallow - Hirundo rustica) இவ்வகை பறவைகளில் அதிகம் பரவலாகக் காணப்படும் ஒன்றாகும். இதைத் தரையில்லாக் குருவி என்றும் கூறுவர். மிக அரிதாகவே தரையிறங்கும் இப்பறவை, சளைக்காமல் பறந்து கொண்டும் உயர்மின் கம்பிவடங்களில் கூடுவதுமாகவும் இருப்பதால் இதற்கு இப்பெயர் பொருந்தும்.[2]
உடல் தோற்றம்[தொகு]
ஊர்க்குருவியின் அளவுடையது[3]; 18 செ.மீ நீளமுள்ளது.[4] மேல் சிறகுத்தொகுதி பளபளப்பான அடர்நீல நிறமும் செம்பழுப்புக் கழுத்தும் வெண்ணிற அடிப்பகுதியும் கொண்டு பிளவுண்ட வாலும் உடையது; பறக்கும் போது அடிப்பகுதியை நோக்கினால் வாலில் கொடி போன்று வெண்புள்ளிகள் தென்படும்.[5]
உட்பிரிவுகள்[தொகு]
தமிழ்நாட்டில் காணப்படும் Hirundo rustica gutturalis [6] என்ற தகைவிலான் இமயமலைத் தொடரில் இனப்பெருக்கம் செய்யும் கிழக்குத் தகைவிலான் உட்பிரிவாகும். இந்தியாவிற்கு வரும் இன்னொரு உட்பிரிவான (Hirundo rustica tytleri) [7] என்ற டைட்லர் தகைவிலான் வங்காளம், அசாம் ஆகிய இடங்களில் காணப்படும்.[3] இந்த பறவை மதுரைப்பகுதிக்கு மழைக்காலத்திற்கு முந்தியே வரத்துவங்குகின்றன. இதன் வலசை அதிகமாக இருந்தால் அந்த ஆண்டு மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.[8]
கள இயல்புகள்[தொகு]
ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வரத்தொடங்கும் தகைவிலான் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தான் தம் இனப்பெருக்க உறைவிடங்களான இமயமலைத் தொடருக்கு வலசை போகும். மாலை வேளைகளில் பெருந்திரளாக இவற்றைக் காணலாம். நாணல் கதிர்கள் நிறைந்த ஏரிகள், வயல்கள் ஆகிய இடங்களில் அங்கும் இங்குமாக வேகமாகப் பறந்தபடியே பூச்சிகளைப் பிடித்து உண்ணும்.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Hirundo rustica". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 16 July 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ தமிழ் இணையக் கல்விக்கழகம்-கலைக்களஞ்சியத்தில் மா. கிருஷ்ணனின் உரை-பக். 405 [1]
- ↑ 3.0 3.1 3.2 The Book of Indian Birds-Salim Ali-BNHS(1941 Ed.)-Bird# 67-p. 142
- ↑ Pocket Guide to the Birds of the INDIAN Subcontinent- R. Grimmett et al.-OUP-Rev.Rep. 2001-p. 268
- ↑ பிபிசி
- ↑ Global Twitchr-
- ↑ Global Twitcher
- ↑ இலங்கையிலிருந்து மதுரைக்கு வலசை வரும் வண்ணத்துப் பூச்சிகள்: சூழலியல் பேரவையின் ஆய்வில் தகவல் தி இந்து தமிழ் பார்த்த நாள் 02. செப்டம்பர் 2015