உள்ளடக்கத்துக்குச் செல்

தகைவிலான் குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தகைவிலான்
பின் சிவப்பு தகைவிலான்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
Suborder:
பசாரி
குடும்பம்:
தகைவிலான் குருவி

ரபினேஸ்கு, 1815[1][2]

தகைவிலான்கள் மற்றும் மார்ட்டின்கள், அல்லது ஹிருன்டினிடே ஆகியவை பேஸ்ஸரின் குடும்பப் பறவைகளாகும். இவை அனைத்துக் கண்டங்களிலும் (எதேச்சையாக அண்டார்டிகா கண்டத்திலும்) காணப்படுகின்றன. இவை பறக்கும் பொழுதே உணவைப் பிடிக்கவும், உண்ணவும் ஏற்ற உடல் அமைப்பு உள்ளதால் இந்த பெயரை கொண்டுள்ளது. இவை ஒரு தனித்துவமான தோற்றத்தைக் கொண்டுள்ளன. இக்குடும்பத்தில் 19 பேரினங்களில் 90 உயிரினங்கள் உள்ளன. இவை ஆப்பிரிக்காவில் அதிக வகைகளில் காணப்படுகின்றன. அங்குதான் இவை துளை-கூடுகளை அமைக்கும் வகையில் பரிணாமம் அடைந்ததாகக் கருதப்படுகிறது. இவை பல பெருங்கடல் தீவுகளிலும் காணப்படுகின்றன. பல ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க இனங்கள் நீண்ட தூரம் வலசை போகக் கூடியவையாகும். மாறாக, மேற்கு மற்றும் தென்னாப்பிரிக்க தகைவிலான்கள் வலசை போவதில்லை.

இக்குடும்பத்தில் இரண்டு துணை குடும்பங்கள் உள்ளன: சூடோசெலிடோனினே (சூடோசெலிடோன் பேரினத்தின் ஆற்று மார்ட்டின்கள்) மற்றும் ஹிருன்டினினே (மற்ற அனைத்து தகைவிலான்கள், மார்ட்டின்கள் மற்றும் இரம்ப- இறக்கைகள்). பழைய உலகத்தில் மார்ட்டின் என்ற பெயர் சதுர-வால் இனங்களுக்கும், தகைவிலான் என்ற பெயர் முள்-வால் இனங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது; எனினும் அறிவியல் ரீதியாக இந்த இரண்டு குழுக்களுக்கு இடையில் வேறுபாடு கிடையாது.[3] புதிய உலகத்தில் "மார்ட்டின்" என்ற பெயர் ப்ரோக்னே பேரினத்தின் உறுப்பினர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. (இந்த இரு அமைப்புகள் காரணமாகவே மண் மார்ட்டின் புதிய உலகத்தில் "கரை தகைவிலான்" என்று அழைக்கப்படுகிறது.)

வகைப்பாடு மற்றும் அமைப்பு முறை

[தொகு]

ஹிருன்டினிடே குடும்பம் (ஹிருன்டியா என்ற பெயரில்) பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பல்துறை வல்லுநர் கான்ஸ்டன்டைன் சாமுவேல் ரபினேஸ்குவே என்பவரால் 1815 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.[4][5] ஹிருன்டினிடே குடும்ப உறுப்பினர்கள் பேசரின்களிலேயே உருவ அமைப்பில் தனித்துவமானவை. மூலக்கூறு ஆதாரங்கள் இவற்றை தனித்துவமான பரம்பரை என சில்வியோயிடியாவினுள் (பழைய உலக பாடும் பறவைகள் மற்றும் உறவினர்கள்) வகைப்படுத்துகின்றன.[6] இவை வெண்-கண்ணிகள் மற்றும் டிட் பறவைகளுடனும் தொடர்புபடுத்தப்படுகின்றன. சிப்லே-அல்குயிஸ்ட் வகைப்பாட்டியலில் இவை சிறு வரிசையான பேசரிடாவின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன.

இந்த குடும்பத்தினுள் ஒரு தெளிவான பிரிவு துணை குடும்பங்களுக்கு இடையில் உள்ளது. சூடோசெலிடோனினாய் துணை குடும்பத்தில் ஆற்று மார்ட்டின்கள் உள்ளன.[7][8] மற்றொரு துணை குடும்பமான ஹிருன்டினினாயில் எஞ்சிய இனங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஹிருன்டினினாய் துணைக் குடும்பத்தின் பிரிவானது பல்வேறு விவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. பல்வேறு வகைப்பாட்டியலாளர்கள் அதிகபட்சமாக 24 பேரினங்களாக அதைப் பிரிக்கின்றனர். வேறு சிலர் வெறும் 12 பேரினங்களாக மட்டுமே பிரிக்கின்றனர். ஹிருன்டினினாயில் மூன்று அடிப்படை குழுக்கள் உள்ளன என்பதில் மட்டும் சிறிது உடன்பாடு வகைப்பாட்டியலாளர்கள் இடையே உள்ளது. அந்த மூன்று குழுக்கள் சலிடோப்ரோக்னே பேரினத்தின் ரம்ப இறக்கைகள், முக்கிய மார்ட்டின்கள், ஹிருன்டே பேரின தகைவிலான்கள் மற்றும் அவற்றின் கூட்டாளிகள் ஆகியவை ஆகும்.[9] ரம்ப இறக்கைகளே இந்த மூன்று குழுக்களில் அடித்தளம் ஆனவையாகும். மற்ற இரண்டு குழுக்கள் சகோதரி குழுக்கள் என்று அழைக்கப்படுகின்றன. தகைவிலான்களின் பிரிப்பானது அவற்றின் கூடு கட்டுதலின் பரிணாம வளர்ச்சியை அதிகமாக ஒத்துள்ளது; இவற்றின் அடித்தளமாக கருதப்படும் ரம்ப-இறக்கைகள் பொந்துகளை கூடுகளாக பயன்படுத்துகின்றன, முக்கிய மார்ட்டின்கள் வளைகளை (பழைய உலக உயிரினங்களில்) மற்றும் பொந்துகளை கூடுகளாக (புதிய உலக உயிரினங்களில்) பயன்படுத்துகின்றன, மற்றும் ஹிருன்டோ மற்றும் அதன் கூட்டாளிகள் மண் கூடுகளை பயன்படுத்துகின்றன.[10]

மண் மார்ட்டினின் அலகு இக்குடும்பத்தைப் போலவே குட்டையாகவும், அகலமாகவும் உள்ளது.
ஐரோப்பிய பார்ன் தகைவிலான், லின்டிஸ்பர்னே, இங்கிலாந்து

உசாத்துணை

[தொகு]
  1. Rafinesque, Constantine Samuel (1815). Analyse de la nature ou, Tableau de l'univers et des corps organisés (in French). Palermo: Self-published. p. 68.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. Bock, Walter J. (1994). History and Nomenclature of Avian Family-Group Names. Bulletin of the American Museum of Natural History. Vol. Number 222. New York: American Museum of Natural History. pp. 149, 252.
  3. Turner, Angela; Rose, Chris (1989). Swallows and martins: an identification guide and handbook. Houghton-Mifflin. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-395-51174-7.
  4. Rafinesque, Constantine Samuel (1815). Analyse de la nature ou, Tableau de l'univers et des corps organisés (in French). Palermo: Self-published. p. 68.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  5. Bock, Walter J. (1994). History and Nomenclature of Avian Family-Group Names. Bulletin of the American Museum of Natural History. Vol. Number 222. New York: American Museum of Natural History. pp. 149, 252.
  6. Alström, Per; Olsson, Urban; Lei, Fumin (2013). "A review of the recent advances in the systematics of the avian superfamily Sylvioidea". Chinese Birds 4 (2): 99–131. doi:10.5122/cbirds.2013.0016. https://www.researchgate.net/profile/Per_Alstroem/publication/266141539_A_review_of_the_recent_advances_in_the_systematics_of_the_avian_superfamily_Sylvioidea/links/5426de1a0cf26120b7b34577.pdf. 
  7. Mayr, E.; Amadon, D (1951). "A Classification of Recent Birds". American Museum Novitates (1496): 16. http://digitallibrary.amnh.org/bitstream/handle/2246/3994/N1496.pdf?sequence=1. 
  8. Sheldon, Frederick H.; Whittingham, Linda A.; Moyle, Robert G.; Slikas, Beth; Winkler, David W. (April 2005). "Phylogeny of swallows (Aves: Hirundinidae) estimated from nuclear and mitochondrial DNA sequences". Molecular Phylogenetics and Evolution 35 (1): 254–270. doi:10.1016/j.ympev.2004.11.008. பப்மெட்:15737595. https://www.researchgate.net/publication/7995527. 
  9. Turner, Angela K. (2004). "Family Hirundinidae (Swallows and Martins)". In del Hoyo, J.; Elliott, A.; Christie, D.A. (eds.). Handbook of the Birds of the World. Vol. 9: Cotingas to Pipits and Wagtails. Barcelona, Spain: Lynx Edicions. pp. 602–685. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-87334-69-6.
  10. Winkler, D. W.; Sheldon, F. H. (1993). "Evolution of nest construction in swallows (Hirundinidae): a molecular phylogenetic perspective". Proceedings of the National Academy of Sciences 90 (12): 5705–5707. doi:10.1073/pnas.90.12.5705. பன்னாட்டுத் தர தொடர் எண்:0027-8424. பப்மெட்:8516319. Bibcode: 1993PNAS...90.5705W. 

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hirundinidae
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=தகைவிலான்_குருவி&oldid=3930591" இலிருந்து மீள்விக்கப்பட்டது