இந்திய தோட்டக்கள்ளன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தோட்டக்கள்ளன்
Pitta brachyura.jpg
Invalid status (IUCN 3.1)[1]
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: கோர்டேட்டா
வகுப்பு: ஏவுசு (பறவைகள்)
வரிசை: (மரத்தில்) அடையும் பறவை
குடும்பம்: பிட்டிடே
பேரினம்: Pitta
இனம்: P. brachyura
இருசொற் பெயரீடு
Pitta brachyura
(லின்னேயசு, 1766)
வேறு பெயர்கள்

Corvus brachyurus[2]

இந்திய பொன்னுத் தொட்டான் அல்லது இந்திய தோட்டக்கள்ளன் ("Indian Pitta", Pitta brachyura) என்பது ஒரு இடைப்பட்ட அளவு கொண்ட மரக்கிளைகளில் வந்து அமரும் வகைப் பறவை ஆகும். இமயமலைக்குத் தெற்கே இது இனப்பெருக்கம் செய்து, குளிர்காலத்தில் தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்கும் வலசை வரும்.

இது சுலபமாக நம் கண்களில் படுவதில்லை. ஏனெனில், இந்தப் பறவை சாதாரணமாக மற்ற பறவைகளைப் போல் உயரப் பறப்பதில்லை. இலைகள் அடர்ந்த கிளைகள் இடையே கிளைக்குக் கிளை சென்று கொண்டிருக்கும். இது இரை தேடும்போது தரையிலேயே தத்தித் தத்திச் சென்று இலை சரகுகளுக்கு கீழே உள்ள புழு பூச்சிகளைத்தேடி உண்ணும். பொன்னுத் தொட்டான் தேவை ஏற்படும் போது சற்றே பறந்து தாழ உள்ள மரக் கிளைகளில் உட்காரும். இதன் வண்ணம் கிளைகளில் உள்ள இலைகள் மற்றும் தரையில் கிடக்கும் இலை சரகுகளுடன் ஒன்றி விடுவதால் இது நம் கண்களுக்குப் புலப்படுவதில்லை.

பெயர்க்காரணம்[தொகு]

பச்சைக்காடை அளவிடப்படுகிறது

பிட்டா என்றால் “சிறு பறவை” என்று தெலுங்கில் பொருள்.[3] ஹிந்தியில் இதன் பெயர் நவ்ரங். அதாவது ஒன்பது நிறங்கள் என்பது பொருள். வானவில்லின் ஏழு நிறங்களுடன் கருப்பு வெள்ளை இரண்டும் சேர்ந்து ஒன்பது ஆகிறது.

பஞ்சவர்ணக் குருவி[தொகு]

இதன் சிறகுப் போர்வையில் பல நிறங்களைக் காணலாம் - பச்சை நிற முதுகு, நீல நிறமும் கருப்பு-வெள்ளைமும் கொண்ட இறக்கை, மஞ்சட்பழுப்பு நிற அடி, கருஞ்சிவப்புப் பிட்டம், கண்ணையொட்டி கருப்பு வெள்ளைப் பட்டைகள் - எனவே தான் இதற்கு பஞ்சவர்ணக் குருவி என்றொரு பெயருண்டு; மேலும் இதற்கு ஆறுமணிக்குருவி, பொன்னுத் தொட்டான், பச்சைக்காடை, காசிக்கட்டிக் குருவி,கஞ்சால் குருவி, காளி(மலையாளத்தில்) எனப் பல பெயர்களுண்டு.[4]

வகைகள்[தொகு]

ஆசிய தோட்டக்கள்ளன் நான்கு வகைப்படும்.

  1. தோட்டக்கள்ளன் - இந்தியன் பிட்டா - Pitta brachyura
  2. ஃபேரி பிட்டா - P. nympha
  3. நீலவிறக்கை பிட்டா - Blue-winged Pitta - P. moluccensis
  4. அலையாத்தி பிட்டா - Mangrove Pitta - P. megarhyncha[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pitta brachyura". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் Version 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008).
  2. Dickinson, E.C., R.W.R.J. Dekker, S. Eck & S. Somadikarta (2000). "Systematic notes on Asian birds. 5. Types of the Pittidae." (PDF). Zool. Verh. Leiden 331: 101–119. http://www.naturalis.nl/sites/naturalis.en/contents/i000308/snab004.pdf. 
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; whistler என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. தமிழில் பறவைப் பெயர்கள் - க. ரத்னம் - பக். 52
  5. orientalbirdclub.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_தோட்டக்கள்ளன்&oldid=2221604" இருந்து மீள்விக்கப்பட்டது