உள்ளடக்கத்துக்குச் செல்

சிற்றெழால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிற்றெழால்
Adult male Falco tinnunculus tinnunculus
Female(♀) Falco tinnunculus tinnunculus from Tal Chhapar Sanctuary, Churu, இராசத்தான், இந்தியா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
துணைவகுப்பு:
உள்வகுப்பு:
பெருவரிசை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
F. tinnunculus
இருசொற் பெயரீடு
Falco tinnunculus
L, 1758
துணையினம்

About 10, see text

Global range of F. t. tinnunculus     Year-Round Range     Summer Range     Winter Range
வேறு பெயர்கள்

Falco rupicolus Daudin, 1800 (but see text)
Falco tinnunculus interstictus (lapsus)

சிற்றெழால் (Common kestrel, Falco tinnunculus) என்பது வல்லூறு குடும்ப கரைவணை வகைப் பறவையாகும். கழுகு, வல்லூறு சிற்றெழால் ஆகிய பறவையினங்கள் பிற விலங்குகளை தாக்கிக் கொன்றுண்ணும் பறவைகள். இதனால் இவைகளுக்கு கொன்றுண்ணிப் பறவைகள் என்று பெயர். தமிழ் நாட்டில் வாழும் சிற்றெழால் ஆண் சுமார் 150 -160 கிராம் இருக்கும். பெண் சுமார் 180 -190 கிராம் எடை இருக்கும் 34-38 செ.மீ நீளம் இருக்கும் (சுமார் ஒரு புறாவின் அளவினதாகும்). இறக்கைகள் 70-80 செ.மீ இருக்கும். சிற்றெழால் காடை முதலிய பறவைகளையும், எலி போன்ற சிறு பாலூட்டிகளையும், தவளை, வெட்டுக்கிளி போன்றவற்றையும் தின்னும். உயிரின வகைப்பாட்டாளர்கள் 'ப்பால்க்கோ டின்னுக்யுலசு (Falco Tinnuculus) என்று அழைப்பர்.

தமிழ் இலக்கியத்தில் திணைமொழி ஐம்பது பாடல் 51ல்

சிறுபுள் புறவொடு சிற்றெழால் சீறு
நெறியரு நீள்சுரத்து

சிற்றெழாலை மலையாள மொழியில் சிறு புள்ளு என்று அழைக்கிறார்கள்.

இந்த இனம் பெரிய வாழிட எல்லையைக் கொண்டுள்ளது. இது ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்காவில் பரவலாக உள்ளது, அதே போல் எப்போதாவது வட அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை அடைகிறது.[2]

விளக்கம்

[தொகு]

சிற்றெழால் தலைமுதல் வால்வரை 32–39 cm (12+1215+12 அங்) நீளம் இருக்கும். இறக்கை விரிந்த நிலையில் 65–82 cm (25+1232+12 அங்) அகலம் இருக்கும். பெண் பறவைகள் ஆண்பறவைகளை விட அளவில் பெரியவை . வயதுவந்த ஆண் பறவையின் எடை 136–252 g (4+348+78 oz), சராசரியாக சுமார் 155 g (5+12 oz) ஆகும். வளர்ந்த எண் பறவையின் எடை 154–314 g (5+3811+18 oz), சராசரியாக சுமார் 184 g (6+12 oz) ஆகும். மற்ற வேட்டையாடி பறவைகளுடன் ஒப்பிடும்போது இவை சிறியவை. ஆனால் பெரும்பாலான பாடும் பறவைகளை விட பெரியவை. இவை மற்ற வல்லூறு இனங்களைப் போலவே, நீண்ட இறக்கைகள், தனித்துவமான நீண்ட வால் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.[3]

இப்பறவைகளின் அலகு சிலேட் நீலநிறத்திலும், விழிப்படலம் பழுப்பு நிறத்திலும், கால்கள் செம்மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இறக்கைகள் கூர்மையானவையாகவும், வட்டமான வாலும் கொண்டவை. பால் ஈருருமை கொண்ட பறவை இது. ஆண் பறவையின் தலை, உச்சி, பின்கழுத்து, கழுத்தின் பக்கங்கள் ஆகியவை கருஞ்சாம்பல் நிறமாகக் கருங்கோடுகளுடன் காணப்படும். முதுகு, செங்கல் சிவப்பாக நீள் வட்டமான கரும் புள்ளிகளோடு காணப்படும். கீழ் முதுகு, வால் மேல் இறகுகள் ஆகியவை கருஞ்சாம்பல் நிறம். வால் முனை வெண்மையாகவும் அதற்கு மேல் அகன்ற குறுக்குக் கரும்பட்டையும் காணப்படும். அடிப்பகுதி பகுதி வெளிர் இளஞ் சிவப்பு நிறத்தில் இருக்கும். மார்பில் கருங்கோடுகளும் வயிற்றில் கரும் புள்ளிகளும் காணப்படும்.

பெண் பறவையின் உச்சி, கழுத்து ஆகியவை வெளிர் மஞ்சள் சிவப்பாக இருக்கும். முதுகில் சில வரைகள் காணப்படும். பின் முதுகும் வாலும் நீர்த்த கருஞ்சாம்பல் நிறத்தில் காணப்படும். மார்பும், வயிறும் ஆணை பறவையை விட நிறங்குன்றி கருங்கோடுகளும் புள்ளிகளும் அழுத்தமாக காணப்படும்.

உசாத்துணை

[தொகு]
  1. [[பன்னாட்டு பறவை வாழ்க்கை]] (2013). "Falco tinnunculus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. "Common Kestrels | Beauty of Birds". www.beautyofbirds.com. பார்க்கப்பட்ட நாள் 2021-01-05.
  3. Orta 1994

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Falco tinnunculus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிற்றெழால்&oldid=3762385" இலிருந்து மீள்விக்கப்பட்டது