வல்லூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வல்லூறு
புதைப்படிவ காலம்:Late Miocene to present
Brown falcon (Falco berigora)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: கழுகு வரிசை
குடும்பம்: Falconidae
துணைக்குடும்பம்: Falconinae
பேரினம்: Falco
L, 1758
இனங்கள்

About 37; see text.

வல்லூறு (Falcon) என்பது உருவில் சற்று சிறிய ஒரு கழுகு பேரினம் ஆகும். இது லகுடு[1] என்றும் அழைக்கபடுகிறது. இது மிகவும் விரைவாகப் பறக்க வல்லது. கீழே பாய்ந்து இரையைக் கொல்லும் பொழுது மணிக்கு 290 கி.மீ விரைவிலே பறக்க வல்லது. விலங்கு உலகிலேயே யாவற்றினும் மிக அதிக விரைவுடன் பறக்க வல்ல பறவை இந்த வல்லூறுதான். வல்லூறு வலுவாக பறந்துகொண்டே தன்னைக்காட்டிலும் உருவில் பெரிய பிற பறவைகளைக் கொல்ல வல்லது. மிக விரைவாக உயரப் பறந்து செல்லும்; வாத்து, புறாவினங்களை இது மிக எளிதாகத் தாக்கிக் கொல்லும். வல்லூறு சுமார் 46 செ.மீ நீளம் கொண்டது. இதன் இறக்கைகளின் நீளம் 106 செ.மீ.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Falcon
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. பக். 84-85. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லூறு&oldid=3761090" இலிருந்து மீள்விக்கப்பட்டது