கம்பிவால் தகைவிலான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கம்பிவால் தகைவிலான்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: கைருண்டினிடே
பேரினம்: கைருண்டோ
இனம்: கை. சுமித்தீ
இருசொற் பெயரீடு
கைருண்டோ சுமித்தீ
லீச்சு, 1818

கம்பிவால் தகைவிலான் (Wire-tailed Swallow) என்பது தகைவிலான் குடும்பத்தைச் சேர்ந்த சிறிய பறவை ஆகும். இது இரண்டு துணையிங்களைக் கொண்டுள்ளது: H. s. smithii இது ஆப்பிரிக்கா முழுவதும் காணப்படுகிறது, H. s. filifera இது தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது. இவை பொதுவாக வலசை போவதில்லை, என்றாலும் பாக்கித்தான் மற்றும் வட இந்தியாவில் உள்ள பறவைகள் குளிர்காலத்தில் மேலும் தெற்கு நோக்கி இடம்பெயர்கின்றன. இதன் அறிவியல் பெயரில் உள்ள ஹிருண்டோ என்ற பேரினப் பெயர் தகைவிலான் என்பதற்கான இலத்தீன் சொல்லாகும்.[2] நார்வே நாட்டை சார்ந்த தாவர சூழலியல் அறிஞர் கிறிஸ்டியன் சுமித் என்பவர் நினைவாக இச்சிற்றினப் பெயராக சுமித்தீ என்று இடப்பட்டுள்ளது.[3]

உடலமைப்பு[தொகு]

கம்பிவால் தகைவிலான் என்பது சுமார் 18 செ.மீ. (7.1 அங்குலம்) நீளம் கொண்ட ஒரு சிறிய தகைவிலான் ஆகும். செம்பழுப்புத் தொப்பி அணிந்தது போன்ற தலையும் பளப்பளப்பான கருநீல நிற உடலும் கொண்டது. வெள்ளை வெளேர் என்ற மார்பும் வயிறும் வாலிலிருந்து தொங்கும் 10 செ.மீ. நீளமுள்ள இரண்டு கம்பிகளும் இதனை அடையாளம் கண்டு கொள்ள உதவுபவை. முதிர்ச்சி அடையாத பறவைகளுக்கு வாலில் கம்பிகள் இல்லாமலும், தலையில் மங்கிய புழுப்பு (செம்பழுப்புக்கு பதிலாக) தொப்பி நிறம் இருக்கும்.[4] பாலினங்கள் தோற்றத்தில் ஒரே மாதிரியானவை, ஆனால் பெண் பறவையின் வாலில் உள்ள "கம்பிகள்" சற்று குறுகலாக இருக்கும். ஆப்பிரிக்காவில் காணப்படும் H. s. smithii துணை இனத்தைவிட ஆசியாவில் காணப்படும் H. s. filifera துணையினத்தின் வால் நீளமானது.

நடத்தை[தொகு]

இதன் பழக்க வழக்கங்கள் மற்ற தகைவிலானைப் போன்றதே எனினும் நீர்வளம் மிகுந்த பகுதிகள் மற்றும் மக்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் திறந்த வெளியில் காணப்படுகிறது. கம்பி வால் தகைவிலான்கள் வேகமாக பறக்கும் மேலும் இவை பொதுவாக பூச்சிகளை, குறிப்பாக ஈக்களை, பறக்கும் போது பிடித்து உண்ணும்.

கூடு[தொகு]

இவை தன் அலகினால் சேகரிக்கப்பட்ட சேற்றைக் கொண்டு நேர்த்தியான கூடுகளை அமைக்கின்றன. கூடுகளை செங்குத்தான இடத்தில் தண்ணீருக்கு அருகில் பாறை விளிம்புகளின் கீழே அமைகின்றன அல்லது தற்காலத்தில் பொதுவாக கட்டடங்கள் மற்றும் பாலங்கள் போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளில் அமைக்கின்றன. ஆப்பிரிக்காவில் காணப்படுபவை மூன்று முதல் நான்கு முட்டைகள்ஐ இடுகின்றன. ஆசியாவில் உள்ளவை ஐந்து வரையில் இடுகின்றன.

துணையினங்கள்[தொகு]

கம்பி வால் தகைவிலான் இரண்டு துணையினங்களைக் கொண்டுள்ளது:[5]

  • H. s. smithii இது முதன்முதலில் 1818 இல் வில்லியம் எல்ஃபோர்ட் லீச் மற்றும் கே. டி. கோனிக் ஆகியோரால் விவரிக்கபட்டது.[6] ஆப்பிரிக்க கம்பி வால் தகைவிலான் என அழைக்கப்படும் இது ஆப்பிரிக்கா முழுவதும் காணப்படுகிறது.[5]
  • ஆசிய கம்பிவால் தகைவிலான் H. s. filifera இது முதன்முதலில் 1826 இல் ஸ்டீபன்சால் விவரிக்கப்பட்டது.[6] இது ஆசிய கம்பி வால் தகைவிலான் என்றும் அறியப்படுகிறது. இது தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது.[5]

படங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hirundo smithii
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Hirundo smithii". IUCN Red List of Threatened Species 2016: e.T22712299A94328026. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22712299A94328026.en. https://www.iucnredlist.org/species/22712299/94328026. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. Jobling (2010), p. 193.
  3. Jobling (2010), p. 358.
  4. Stevenson, Terry; Fanshaw, John (December 2004). Birds of East Africa: Kenya, Tanzania, Uganda, Rwanda, Burundi. London, UK: A&C Black. பக். 294. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7136-7347-0. https://books.google.com/books?id=jcN1OCKC-bQC&pg=PA294. பார்த்த நாள்: 28 August 2014. 
  5. 5.0 5.1 5.2 Monroe, Burt (1997). A World Checklist of Birds. New Haven, CT, USA: Yale University Press. பக். 247. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-300-07083-5. https://books.google.com/books?id=3M7f_Y2zWDwC&pg=PA247. பார்த்த நாள்: 28 August 2014. 
  6. 6.0 6.1 "ITIS Report: Hirundo smithii". Integrated Taxonomic Information System. https://www.itis.gov/servlet/SingleRpt/SingleRpt?search_topic=TSN&search_value=560487. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பிவால்_தகைவிலான்&oldid=3794868" இருந்து மீள்விக்கப்பட்டது