தேன்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேன்சிட்டு
சிலந்திபிடிப்பான்
நெந்நிறத் தேன்சிட்டு (மேலுள்ளது ஆண், கீழுள்ளது பெண்)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Passeriformes
துணைவரிசை:
பாடும்பறவை
குடும்பம்:
Nectariniidae

விகோர்ஸ், 1825
Genera

15

தேன்சிட்டு அமெரிக்காவில் உள்ள ஓசனிச்சிட்டு (ஹம்மிங்க்பேர்ட்) போலத்தோன்றும் தேன்சிட்டு உருவத்தில் சிட்டுக்குருவியை விடச் சிறியதும் ஓசனிச்சிட்டை விடப் பெரியதுமான பறவையினம். இப்பறவைகள் தம் நீளமான குழாய்வடிவ அலகின் துணையுடன் மலர்களுக்குள்ளே இருக்கும் தேனை உறிஞ்சி வாழ்பவை. பெண் குருவி பச்சை கலந்த பழுப்பு நிற இறக்கைகள் மற்றும் தலை, முதுகையும் வெளிர் நிற அடிப்பாகத்தையும் கொண்டது. ஆண் குருவியின் தலை, கழுத்து இவை கரு நீலத்தில் மயில் கழுத்து போன்று மின்னும். இறக்கையும் முதுகும் கருமையாகவும் அடி முதுகுகரு நீலத்திலுமாகவும் அடிப் பாகம் மஞ்சள் நிறமாகவும் இருக்கும். ஆங்கிலத்தில் இதன் பெயர் ‘பர்பிள் ரம்ப்ட் சன் பேர்ட் (Purple-rumped Sunbird)’ என்பதாகும்.

தமிழ்நாட்டில் காணப்படும் தேன்சிட்டுகள் இருவகைப்படும்.[சான்று தேவை] ஓன்று ஊதாத் தேன்சிட்டு. மற்றொன்று ஊதாப்பிட்டு தேன்சிட்டு என்பதாகும். இரண்டாவது வகையே நம் தோட்டங்களில் சாதாரணமாகக் காணப்படும். முதல் வகையை ஸ்க்ரப் ஜங்கிள் என்று அழைக்கப்படும் சிறு காடுகளில்தான் அதிகம் பார்க்கமுடியும்.

ஊதாப்பிட்டு தேன்சிட்டு வகையின் ஆண் குருவி கருநீல நிறத்தில் இருக்கும். அதன் கழுத்தும் தலையும் மயில் கழுத்துப்போல மின்னும்.

தேன் சிட்டின் கூடு செடிகளின் கிளைகளில் இருந்து தொங்கிக் கொண்டிருக்கும். காய்ந்த சரகு, வேர்கள் இவற்றால் சிலந்தியின் வலைத் துண்டுகள் கொண்டு ஒட்டப்பட்டிருக்கும். வெளியே ஆங்காங்கே சிறிய வெள்ளைக் காகிதத் துண்டுகளோ அல்லது எட்டுக்கால் பூச்சியின் முட்டைகளைப் பாதுகாக்கும் உறையோ (வெள்ளை நிறத்தில் சுமார் ஒரு சென்டிமீட்டர் விட்டத்தில் வட்டமாக இருக்கும்) ஒட்டப் பட்டிருக்கும். இவ்வாறு செய்வது அழகுக்காகவா அல்லது கூட்டினை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கவா என்பது இப்பறவைகளைப் படைத்த ஆண்டவனுக்கே வெளிச்சம். கூட்டிற்குள்ளே செல்ல பக்கவாடில் சுமார் மூன்று அல்லது நன்கு சென்டிமீடர் அளவிலான துவாரம் இருக்கும். அந்த துவாரத்திற்கு ஒரு 'சன் ஷேடும்' அமைக்கப் பட்டிருக்கும். கூட்டின் கீழ் பாகத்திலிருந்து சிறிய காய்ந்த இலைச் சரகுத் துண்டுகள் தொங்கிக் கொண்டு இருக்கும். கூட்டினைக் கட்டுவது பெண் குருவியே. ஆண் குருவியோ தானும் விழுந்து விழுந்து வேலை செய்யும் பாவனையில் கூடக் கூட பறந்து கொண்டிருக்கும். கூட்டின் உள்ளே பஞ்சு மெல்லிய வேர்த் துண்டுகள் இவற்றால் மெத்தை அமைக்கப் பட்டிருக்கும்.

பேரினங்களின் பட்டியல்[தொகு]

இந்த பறவைக் குடும்பத்தில் 147 சிற்றினங்கள் 16 பேரினங்களின் கீழ் வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[1]

 • சால்கோபரியா (ஒற்றைச் சிற்றினப் பேரினம்) - மாணிக்க கன்ன தேன்சிட்டு
 • டெலியோர்னிசு (2 சிற்றினங்கள்)
 • ஆந்த்ரெப்ட்சு (14 சிற்றினங்கள்)
 • கெடிப்னா (4 சிற்றினங்கள்)
 • அனாபத்மிசு (3 சிற்றினங்கள்)
 • திரெப்டசு (ஒற்றைச் சிற்றினப் பேரினம்) - பெரும் தேன்சிட்டு
 • ஆந்தோபேபிசு (ஒற்றைச் சிற்றினப் பேரினம்) - ஆரஞ்சு-மார்பக தேன்சிட்டு
 • சயனோமித்ரா (7 சிற்றினங்கள்)
 • சல்கோமித்ரா (7 சிற்றினங்கள்)
 • லெப்டோகோமா (6 சிற்றினங்கள்)
 • நெக்டாரினியா (6 சிற்றினங்கள்)
 • திரெப்னோரைங்கசு (ஒற்றைச் சிற்றினப் பேரினம்) - தங்க இறக்கை தேன்சிட்டு
 • சைன்னிரிஸ் (57 சிற்றினங்கள்)
 • ஏத்தோபிகா (23 சிற்றினங்கள்)
 • குரோச்கினெக்ராம்மா (ஒற்றைச் சிற்றினப் பேரினம்) - நீல பிடரி தேன்சிட்டு
 • அராக்னோதெரா (13 சிற்றினங்கள்) - சிலந்திபிடிப்பான்கள்

மேற்கோள்கள்[தொகு]

 1. Gill, Frank; Donsker, David, eds. (2019). "Dippers, leafbirds, flowerpeckers, sunbirds". World Bird List Version 9.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 30 January 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேன்சிட்டு&oldid=3446105" இலிருந்து மீள்விக்கப்பட்டது