டெலியோர்னிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டெலியோர்னிசு
Deleornis fraseri.JPG
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: பறவை
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: நெக்டாரினிடே
பேரினம்: டெலியோர்னிசு
வோல்டர்சு, 1977
சிற்றினம்

டெலியோர்னிசு பரேசெரி
டெலியோர்னிசு ஆக்சில்லரிசு

டெலியோர்னிசு (Deleornis) என்பது ஆப்பிரிக்கத் தேன்சிட்டு ஆகும். இது பறவைகளின் நெக்டாரினிடே குடுபம்பத்தினை சார்ந்த ஒரு பேரினமாகும்.[1] இதன் சிற்றினங்கள் சில நேரங்களில் ஆந்த்ரெப்ட்சுகளில் சேர்க்கப்படுகின்றனர். இப்பேரினத்தின் கீழ் உள்ளச் சிற்றினங்கள்.

சாம்பல் தலை தேன்சிட்டு சில நேரங்களில் பரேசெரின் தேன்சிட்டின் துணையினமாகக் கருதப்படுகிறது.

தேன்சிட்டுக்கள் மிகச் சிறிய பழைய உலகப் பசாரென் பறவைகளின் ஒரு குழுவாகும். இவை பெரும்பாலும் மலர்த்தேனை உண்கின்றன. இருப்பினும் குஞ்சுகள் பூச்சிகளை உணவாக உண்ணும். சிறிய இறக்கைகளை வேகமாக அசைத்துப் பறக்கின்றன. பெரும்பாலான இனங்கள் ஓசனிச்சிட்டைப் போல வட்டமிடுவதன் மூலம் மலர்த்தேனை எடுத்துக் கொள்ளும். ஆனால் பொதுவாக பெரும்பாலான நேரங்களில் மலரில் அமர்ந்து உணவை எடுக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெலியோர்னிசு&oldid=3363647" இருந்து மீள்விக்கப்பட்டது