சூறைக்குருவி
சூறைக்குருவி | |
---|---|
கோடைக்கால சிறகுத்தொகுதியுடன்: வளர்ந்த ஆண் (நடுவில்). பெண் (கீழே), இளம் பறவை (பின்னால்) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Passeriformes
|
குடும்பம்: | Sturnidae
|
பேரினம்: | Sturnus (but see text)
|
இனம்: | S. roseus
|
இருசொற் பெயரீடு | |
Sturnus roseus (L, 1758) | |
வேறு பெயர்கள் | |
Pastor roseus See text. |
சோளப்பட்சி, ரோசா மைனா[2] என அழைக்கப்பெறும் சூறைக்குருவி (Rosy starling, Sturnus roseus) சடர்னிடே குடும்பத்தைச் சேர்ந்த மரத்தை அடையும் பறவையாகும். இது நாகணவாய்ப்புள் குருவியின் பேரினத்தை அடுத்த பேரினமான சடர்னசு பேரினத்தைச் சேர்ந்ததாகும். இந்தியாவில் இது கூடு கட்டி இனப்பெருக்கம் செய்வதில்லை.[3] ஆறிலிருந்து எட்டு முட்டைகள் வரை இட்டு ஆணும் பெண்ணும் சேர்ந்தே அடைகாக்கும் பழக்கம் கொண்டுள்ளது. வெட்டுக்கிளிகளை அதிகமாக உணவாக உட்கொள்கிறது. இதனால் இப்பறவையை விவசாயிகளின் நண்பன் என் அழைக்கிறார்கள். இப்பறவை மரங்களில் அடையும் பேஸ்ஸரின் (Passerine Birds) என்ற பறவை வகையச் சார்ந்ததாகும்.[4]
தோற்ற விளக்கம்
[தொகு]சூறைக்குருவி மைனாவின் அளவுடையது. இதன் தலை, கழுத்து, மேல் மார்பு, இறக்கைகள் ஆகியவை கறுப்பாகவும், உடலின் எஞ்சியப் பகுதிகள் உரோசா நிறத்திலும் இருக்கும். இது செம்மஞ்சள் நிற அலகு, கால்களும் உடையது.
நடத்தை
[தொகு]இப்பறவைகள் பறக்கும்போது கூட்டம், கூட்டமாக வானில் பல வடிவங்களில் பறந்து பல தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை வியப்படைய வைக்கிறது.[4] புதர்காடுகளில் காணப்படும் இது விளை நிலங்களில் தானியங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தக்கூடியது.[5]
வலசை வருதல்
[தொகு]இப்பறவை செப்டம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் நடு ஆசியா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிக்கும் வலசை வருகிறது. இவற்றை கேரளத்திலும், கருநாடகத்திலும் ஓரளவும், தமிழ்நாட்டிலும் ஆந்திரத்தில் அரிதாகவும் காண இயலும்.[5]
கலைச்சொற்கள்
[தொகு]- மரத்தை அடையும் பறவை = Passerine (perching bird) | பேரினம் = genus
- சிறகுத்தொகுதி = plumage |
உசாத்துணை
[தொகு]- ↑ IUCN செம்பட்டியல்
- ↑ தமிழில் பறவைப் பெயர்கள் - டாக்டர் க. ரத்னம் - பக். 57 (282)
- ↑ தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் கலைக்களஞ்சியத்தில் மா. கி.யின் உரை - பக். 278, 279 [1] பரணிடப்பட்டது 2020-09-23 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 4.0 4.1 இலங்கைக்கு கூட்டமாக வலசை செல்லும் சூறைக்குருவிகள்': 'அறிவோம் அறிவிப்போம்' சூழலியல் ஆய்வில் தகவல் தி இந்து தமிழ் 02 சனவரி 2016
- ↑ 5.0 5.1 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. p. 366.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Pastor roseus தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- விக்கியினங்களில் Pastor roseus பற்றிய தரவுகள்
- David, J. P., Manakadan, R., & Ganesh, T. (2015). Frugivory and seed dispersal by birds and mammals in the coastal tropical dry evergreen forests of southern India: A review. Tropical Ecology, 56(1), 41–55.