உள்ளடக்கத்துக்குச் செல்

பெரிய பச்சைக்கிளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய பச்சைக்கிளி
ஆண் P. e. eupatria
இலங்கை
பெண்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
‘’Psittaciformes’’
பெருங்குடும்பம்:
‘’Psittacoidea’’
குடும்பம்:
’’Psittaculidae’’
துணைக்குடும்பம்:
‘’Psittaculinae’’
சிற்றினம்:
‘’Psittaculini’’
பேரினம்:
Psittacula
இனம்:
P. eupatria
இருசொற் பெயரீடு
Psittacula eupatria
(‘’L.’’, 1766)
Native range of Psittacula eupatria
வேறு பெயர்கள்
  • Psittacus eupatria Linnaeus 1766
  • Palaeornis eupatria (Linnaeus, 1766)

பெரிய பச்சைக்கிளி (Alexandrine Parakeet, Psittacula eupatria) என்பது தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட சிட்டாகுலிடே குடும்பத்தின் பிசிட்டாகுலா பேரினத்தைச் சேர்ந்த நடுத்தர அளவிலான கிளி ஆகும். இவ்வினக் கிளிகள் பேரரசன் அலெக்சாந்தரின் பெயரைக் கொண்டு ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டன. அலெக்சாந்தர் பஞ்சாப் பகுதி முதல் ஜரோப்பா மற்றும் மத்தியதரைக்கடல் பிரதேசங்களிலிருந்து சில இனப் பறவைகளை ஏற்றுமதி செய்தமைக்காக இப்பெயர் வழங்கப்பட்டது. இக் குறிப்பிட்ட பகுதிகளில் இவ்வினக் கிளிகள் உயர்தரம் மற்றும் அரச முக்கியத்துவம் என்பவற்றுக்கான விலை மதிப்பானவையாகக் கருதப்பட்டன.[2]

விளக்கம்

[தொகு]
ஆண் (இடது) பெண் (வலது).

பெரிய பச்சைக்கிளி மிகப்பெரிய கிளிகளில் ஒன்றாகும். இது தலையின் உச்சியில் இருந்து வால் முனை வரை 56 முதல் 62 செமீ (22 முதல் 24 அங்குலம்) நீளமும், 200 முதல் 300 கிராம் (7.1 முதல் 10.6 அவுன்ஸ்) எடையும் கொண்டது. வால் நீளம் 28 முதல் 35 செமீ (11 முதல் 14 அங்குலம்) வரை இருக்கும்.[3] இவை சாதாரண பச்சைக்கிளிகள் போலவே இருக்கும் இவைகளின் கழுத்தில் வளைய வடிவில் சிவப்பு நிறமும் இறகில் சிவப்பு நிறமும் இடம்பெற்றிருக்கும். சாதாரண கிளிகளைவிட சற்று பெரிதாக இருக்கும். இந்த வேறுபாடுகள்தான் இவற்றை சாதாரண கிளிகளிலிருந்து வேறுபடுத்துகின்றன. இக்கிளிகளை குஞ்சு பருவத்திலிருந்தே வீட்டில் வளர்த்தால் பேசும் திறன் பெறும். மேலும் வளர்பவர்களிடம் அன்பாகப் பழகும். இதனால் இதை வீட்டில் வளர்பர். இக்கிளிகள் அழிய வாய்ப்புள்ள இனமாக இருப்பதால் இந்தியாவில் இவற்றை வளர்ப்பதோ அல்லது விற்பதோ சட்டப்படி குற்றமாகும்.[4]

முதிர்ந்த பறவைகள் பாலின இருமை உடையவை. முதிர்ந்த ஆண் பறவைகளின் கீழ் கன்னங்கள் முழுவதும் கருப்பு பட்டையும், பின் கழுத்தில் இளஞ்சிவப்பு நிற பட்டை இருக்கும். முதிர்ந்த பெண் பறவைகளுக்கு கீழ் கன்னத்தில் கருப்பு பட்டை மற்றும் பின் கழுத்தில் இளஞ்சிவப்பு பட்டை என இரண்டும் இல்லை. குஞ்சுகள் தோற்றத்தில் முதிர்ந்த பெண் பறவைகளைப் போலவே இருக்கும் ஆனால் குட்டையான வால்களைக் கொண்டிருக்கும்.[5]

துணை இனங்கள்

[தொகு]

பெரிய பச்சைக்கிளியில் ஐந்து கிளையினங்கள் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[6][5]

துணை இனம் பரவல் குறிப்பு
இலங்கை பெரிய பச்சைக்கிளி Nominate Alexandrine parakeet (P. e. eupatria) மேற்கு இந்தியா, தென்னிந்தியா, இலங்கை. கிளையினமாக அங்கீகரிக்கபட்டுள்ளது
Large Indian parakeet (P. e. nipalensis) கிழக்கு ஆப்கானித்தான், பாக்கித்தான், வட இந்தியா, மத்திய இந்தியா, கிழக்கு இந்தியா, நேபாளம் பூட்டான். இது பிற கிளையினங்களை விட பெரியது மற்றும் அதிகபடியான சாம்பல்-பச்சை நிறமுள்ளது. தலையின் பின்புறமும், கன்னங்களிலும் நீல நிறம் உள்ளது. முதிர்ந்த ஆண் பறவைகளின் கீழ் கன்னத்தில் பரந்த கருப்பு பட்டை உள்ளது.
Large Burmese parakeet (P. e. avensis) வடகிழக்கு இந்தியா, வங்காளதேசம் மியான்மர். இது பிற கிளையினங்களை விட சிறிய அலகைக் கொண்டுள்ளது. ஆண் பறவையின் தோற்றம் இன்னொரு கிளையினமான P. e. nipalensisஐ ஒத்து இருக்கும். இருப்பினும் கழுத்து மற்றும் அடிப்பகுதியில் கூடுதலாக மஞ்சள் நிறம் இருக்கும். மேலும் பின் கழுத்தில் ஒரு குறுகிய நீல பட்டை இருக்கும்.
Large Andaman parakeet (P. e. magnirostris) அந்தமான் தீவுகள், கோக்கோ தீவுகள். இது பிற கிளையினங்களை விட சற்று பெரியது. மேலும் பெரிய அலகு உள்ளது. ஆண் பறவைகளின் பிடரியின் மேலே ஒரு குறுகிய நீல பட்டை இருக்கும்.
Thai rose-ringed parakeet (P. e. siamensis) வியட்நாம், கம்போடியா, லாவோஸ் தாய்லாந்து. இது பிற கிளையினங்களை விட சிறியது மற்றும் வெளிறிய தோள்பட்டை நிறத்திட்டைக் கொண்டுள்ளது. இதன் முகமும், கழுத்தும் மஞ்சளாக இருக்கும். ஆண் பறவைகளின் தோற்றம் இன்னொரு துணை இனமான P. e. avensis ஐ ஒத்து இருக்கும். இருப்பினும் தலையின் பின்புறம் மற்றும் முதுகு நீலம் தோய்ந்ததாக இருக்கும்.
ஆண் P. e. nipalensis மேற்குவங்கத்தின் கொல்கத்தாவில் பழத்தை உண்கிறது.

உசாத்துணை

[தொகு]
  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Psittacula eupatria". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 16 July 2012. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Campbell-Johnston, Rachell (2007-02-13). "A squawk on the wild side". தி டைம்ஸ். London. பார்க்கப்பட்ட நாள் 2008-11-08.
  3. Blanford, William Thomas (1895). The Fauna of British India, Including Ceylon and Burma. Birds. Vol. 3. London: Taylor and Francis.
  4. ச. கார்த்திகேயன் (சனவரி 2017). "பெரிய பச்சைக்கிளியை வீடுகளில் வளர்பதும் , வீற்பதும் குற்றம்". தி இந்து. doi:25. 
  5. 5.0 5.1 Forshaw, Joseph M.; Knight, Frank (2010). Parrots of the World. Princeton, NJ: Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0643100572.
  6. del Hoyo, Josep; Nigel J., Collar; David A., Christie; Andrew, Elliot; Lincoln D.C., Fishpool (2014). HBW and BirdLife International Illustrated Checklist of the Birds of the World. Vol. 1: Non-passerines. Barcelona: Lynx Edicions. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8496553941.

வெளியிணைப்புக்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Alexandrine Parakeet
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Informative websites:

Conservation related links:

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_பச்சைக்கிளி&oldid=3778328" இலிருந்து மீள்விக்கப்பட்டது