வீட்டுத் தகைவிலான்
வீட்டுத் தகைவிலான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | கி. தகிடிகா
|
இருசொற் பெயரீடு | |
கிருண்டோ தகிடிகா ஜெமிலின், 1789 |
வீட்டுத் தகைவிலான் (Pacific swallow) என்பது தெற்காசியாவிலும் தென் பசிபிக் தீவுகளிலும் காணப்படும் (கிருண்டோ தகிடிகா) தகைவிலா குடும்பத்தில் உள்ள ஒரு சிறிய குருவி வகைச் சிற்றினம் ஆகும். இந்த பறவை கடற்கரையோரங்களுடன் தொடர்புடையது, ஆனால் பெருகிய காடுகள் நிறைந்த மேட்டு நிலங்களிலும் காணப்படும்.[2]
துணையினங்களும் பரவலும்
[தொகு]- கிருண்டோ தகிடிகா தகிடிகா: சொசைட்டி தீவுகள் (மூரியா மற்றும் தாகித்தி)
- கிருண்டோ தகிடிகா ஜவானிகா: அந்தமான் மற்றும் மியான்மர் முதல் இந்தோசீனா, சுண்டாஸ், வாலேசியா, பிலிப்பீன்சு
- கிருண்டோ தகிடிகா நமியே: இரியூக்கியூ தீவுகள் மற்றும் தைவான்
- கிருண்டோ தகிடிகா பிரண்டலிசு: வடக்கு மற்றும் மேற்கு நியூ கினியா
- கிருண்டோ தகிடிகா அம்பியன்சு: நியூ பிரிட்டன் (பிசுமார்க் தீவுக்கூட்டம்)
- கிருண்டோ தகிடிகா சப்புசுகா: நியூ அயர்லாந்து முதல் சாலமன்ஸ், நியூ கலிடோனியா, வனுவாட்டு, பிஜி மற்றும் தொங்கா
- கிருண்டோ தகிடிகா ஆல்பெசென்சு: தெற்கு மற்றும் கிழக்கு நியூ கினியா
உடலமைப்பு
[தொகு]இந்தப் பறவை 13 செ. மீ. உடல் நீளம் வரை வளரக்கூடியது. இதன் நெற்றி செம்பழுப்பு நிறத்தில் உடலின் மேற்பகுதி பசுமை தோய்ந்த பளபளக்கும் கருப்பு நிறத்திலும், மேவாய், தொண்டை, மார்பின் மேற்பகுதி ஆகியன செம்பழுப்பு நிறத்திலும், எஞ்சிய வயிறு, வாலடி ஆகியன வெளிர் சாம்பல் நிறத்தில்ம் காணப்படும். சிறிய பிளவுப்பட்ட வால் இறகுடன் காணப்படும்.[2][3]
இனப்பெருக்கம்
[தொகு]பசிபிக் தகைவிலான் வெப்பமண்டல தெற்கு ஆசியா மற்றும் தெற்கு பசிபிக் தீவுகளில் இனப்பெருக்கம் செய்கிறது.[4] பசிபிக் தகைவிலான் நேர்த்தியான கோப்பை வடிவ கூட்டை உருவாக்குகிறது. அலகின் மூலம் சேகரிக்கப்பட்ட மண் துகள்களால் இக்கூடு கட்டப்படுகிறது. குன்றின் விளிம்பின் கீழ் அல்லது கட்டிடம், பாலம் அல்லது சுரங்கப்பாதை போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளில் இக்கூடி அமையும். கூடு மென்மையான பொருட்களை வரிசையாக அடுக்கி கட்டப்படுகிறது. கூட்டில் இரண்டு அல்லது மூன்று முட்டைகள் வரை இடும். இவை காற்றில் வேகமாகப் பறத்து, பறந்து கொண்டிருக்கும் பூச்சிகளை உண்ணவல்லது.[2]
படங்கள்
[தொகு]-
பறக்கும் தருணம்
-
நீர் தெளிக்கும் தருணம்
-
கூடு கட்ட சேற்றை எடுக்கும் வீட்டுத் தகைவிலான்
-
இணையுடன் வீட்டுத் தகைவிலான்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Hirundo tahitica". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ 2.0 2.1 2.2 Turner, Angela K; Rose, Chris (1989). Swallows & Martins: An Identification Guide and Handbook. Houghton Mifflin. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-395-51174-7.
- ↑ Grimmett, Richard; Inskipp, Carol; Inskipp, Tim (2002). Pocket Guide to Birds of the Indian Subcontinent. London: Christopher Helm Publishers Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7136-6304-9.
- ↑ https://avibase.bsc-eoc.org/species.jsp?avibaseid=B9AC53DEE40266A7