வனுவாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வனுவாட்டு குடியரசு
Republic of Vanuatu
வனுவாட்டு கொடி வனுவாட்டு Coat of arms
குறிக்கோள்
"Long God yumi stanap" (பிசுலாமா)
"கடவுளினுள் நாம் நிற்கிறோம்"[1][2][3]
நாட்டுப்பண்
Yumi, Yumi, Yumi  (பிசுலாமா)
நாம், நாம், நாம்

Location of வனுவாட்டு
தலைநகரம்
பெரிய நகரம்
போர்ட் விலா
17°45′S 168°18′E / 17.750°S 168.300°E / -17.750; 168.300
ஆட்சி மொழி(கள்)
தேசிய இனங்கள் (1999)
மக்கள் நி-வனுவாட்டு
அரசு ஒற்றையாட்சி நாடாளுமன்ற குடியரசு
 -  குடியரசுத்தலைவர் பால்டுவின் லோன்சுடேல்
 -  பிரதமர் ஜோ நட்டுமேன்
விடுதலை
 -  பிரான்சு, மற்றும் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 30 சூலை 1980 
பரப்பளவு
 -  மொத்தம் 12,190 கிமீ² (161வது)
4,710 சது. மை 
மக்கள்தொகை
 -  சூலை 2014[5] மதிப்பீடு 266,937 
 -  2009 குடிமதிப்பு 243,304[4] 
 -  அடர்த்தி 19.7/கிமீ² (188வது)
51/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2011 கணிப்பீடு
 -  மொத்தம் $1.204 பில்லியன்[6] 
 -  ஆள்வீத மொ.தே.உ $4,916[6] 
மொ.தே.உ(பொதுவாக) 2011 மதிப்பீடு
 -  மொத்தம்l $743 மில்லியன்[6] 
 -  ஆள்வீத மொ.தே.உ $3,036[6] 
ம.வ.சு (2013) 0.616 (131வது)
நாணயம் வனுவாட்டு வாட்டு (VUV)
நேர வலயம் VUT (வனுவாட்டு நேரம்) (ஒ.ச.நே.+11)
இணைய குறி .vu
தொலைபேசி ++678

வனுவாட்டு (Vanuatu, ஆங்கிலம் கேட்கi/ˌvɑːnˈɑːt/, பிசுலாமா: Vanuatu), அல்லது வனுவாட்டு குடியரசு (Republic of Vanuatu) என்பது பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும். எரிமலைகளைக் கொண்டுள்ள இத்தீவுக்கூட்டம், ஆத்திரேலியாவுக்கு சுமார் 1,750 கிமீ (1090 மைல்) கிழக்கேயும், நியூ கலிடோனியாவுக்கு 500கிமீ (310மைல்) வட-கிழக்கேயும், பீஜிக்கு மேற்கேயும், சொலமன் தீவுகளுக்கு தெற்கேயும் அமைந்துள்ளது.

வனுவாட்டுவில் முதலில் மெலனீசிய மக்கள் வாழ்ந்து வந்தனர். 1606 ஆம் ஆண்டில் போர்த்துக்கீச மாலுமி பெர்னான்டசு டி குயிரோசு என்பவரின் தலைமையில் எசுப்பானியக் கப்பல் இங்கு முதன் முதலில் ஐரோப்பாவில் இருந்து எஸ்பிரித்து சான்டோ என்ற மிகப் பெரிய தீவில் தரையிறங்கியது. இத்தீவுக்கூட்டத்தை குடியேற்றக்கால எசுப்பானியக் கிழக்கிந்தியாவின் ஒரு பகுதியாக அறிவித்து, இதற்கு "ஆத்திரேலியா டெல் எஸ்பிரித்து சான்டோ" (Austrialia del Espiritu Santo) எனப் பெயரிட்டார்.

1880களில், பிரான்சும், ஐக்கிய இராச்சியமும் இத்தீவுக்கூட்டத்தின் ஒரு பகுதியை தமது பகுதிகளாக அறிவித்தன. 1906 ஆம் ஆண்டில் இத்தீவுக்கூட்டத்தை பிரித்தானிய-பிரெஞ்சு கூட்டுரிமை மூலம் "நியூ எபிரைட்சு" (New Hebrides) என்ற பெயரில் நிருவகிக்க உடன்பட்டன. 1970களில் நாட்டில் விடுதலைக்கான இயக்கம் வலுப்பெற்று 1980 ஆம் ஆண்டில் இத்தீவுக்கூட்டம் வனுவாட்டு குடியரசு என்ற பெயரில் விடுதலை அடைந்தது.

சொற்பிறப்பு[தொகு]

பல ஆத்திரோனேசிய மொழிகளில் நிலம் அல்லது வீட்டைக் குறிக்கும் "வனுவா"[7] என்னும் சொல்லில் இருந்தும், நில் என்பதைக் குறிக்கும் டு என்ற சொல்லில் இருந்தும்[8][8] வனுவாட்டு என்ற பெயர் பிறந்தது.[9]

புவியியல்[தொகு]

வனுவாட்டுவின் நிலவரை

வனுவாட்டு எரிமலை விளைபொருட்களாகத் தோன்றிய சுமார் 82 சிறிய தீவுகளைக் கொண்ட ஒரு Y-வடிவத் தீவுக் கூட்டம் ஆகும். இவற்றில் 65 மக்களற்ற தீவுகள் ஆகும். வட, த்னெ முனைத் தீவுகளுக்கிடையேயான தூரம் கிட்டத்தட்ட 1,300 கிமீ (810 மைல்) ஆகும்.[10] இரண்டு தீவுகள் (மெத்தியூ மற்றும் ஹன்டர் தீவுகள்) பிரான்சினால் நியூ கலிடோனியாவின் கூட்டிணைவில் நிருவகிக்கப்படுகிறது.

போர்ட் விலா வனுவாட்டுவின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் ஆகும். இது எஃபாட்டே தீவில் உள்ளது. அதற்கடுத்த பெரிய நகரம் லூகன்வில் எஸ்பிரித்து சான்டோ தீவில் உள்ளது.[11] வனுவாட்டுவின் அதியுயர் புள்ளி எஸ்பிரித்து சான்டோவில் உள்ள தப்வெமசானா மலை ஆகும். இதன் உயரம் 1,879 மீ (6,165 அடி) ஆகும்.

வனுவாட்டுவின் மொத்தப் பரப்பளவு கிட்டத்தட்ட 12,274 சதுரகிமீ (4,739 சது.மைல்),[12] இவற்றில் நிலப்பரப்பு கிட்டத்தட்ட 4,700 சதுரகிமீ (1,800 சதுரமைல்) ஆகும். பெரும்பாலான தீவுகள் செங்குத்தானவையாகவும், திரமற்ற மணலையும் கொண்டுள்ளன, நன்னீர் மிகக்குறைந்தளவே உள்ளன.[10] வனுவாட்டுவின் 9% நிலப்பகுதியே வேளாண்மைக்கு உகந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது.[13]

வனுவாட்டுவில் பெருமளவு செயல்நிலை எரிமலைகள் காணப்படுகின்றன. பல கடலடி எரிமலைகளும் உள்ளன. 2008 நவம்பரில் 6.4 அளவு கடலடி எரிமலை வெடிப்பு இடம்பெற்றது. ஆனாலும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. 1945 இலும் எரிமலை வெடிப்பு இடம்பெற்றது.[14]

மேற்கோள்கள்[தொகு]

  1. Selmen, Harrison (17 July 2011). "Santo chiefs concerned over slow pace of development in Sanma". Vanuatu Daily Post. பார்த்த நாள் 29 August 2011.
  2. John Lynch and Fa'afo Pat (eds), Proceedings of the first International Conference on Oceanic Linguistics, Australian National University, 1993, p. 319.
  3. G. W. Trompf, The Gospel Is Not Western: Black Theologies from the Southwest Pacific, Orbis Books, 1987, p. 184.
  4. (PDF) 2009 Census Household Listing Counts. Vanuatu National Statistics Office. 2009. Archived from the original on 5 December 2010. http://web.archive.org/web/20101205053216/http://www.spc.int/prism/country/vu/stats/P_releases/Adhoc/HH%20listing%20count%20release%20-%20071009.pdf. பார்த்த நாள்: 6 சனவரி 2010. 
  5. நடுவண் ஒற்று முகமை. "Vanuatu". த வேர்ல்டு ஃபக்ட்புக். பார்த்த நாள் 6 January 2010.
  6. 6.0 6.1 6.2 6.3 "Vanuatu". International Monetary Fund. பார்த்த நாள் 22 April 2012.
  7. Vanua in turns comes from the Proto-Austronesian banua – see Thomas Anton Reuter, Custodians of the Sacred Mountains: Culture and Society in the Highlands of Bali, University of Hawaii Press, 2002, p. 29; and Thomas Anton Reuter, Sharing the Earth, Dividing the Land: Land and Territory in the Austronesian World, ANU E Press, 2006, p. 326.
  8. 8.0 8.1 Crowley, Terry (2004). Bislama reference grammar. University of Hawaii Press. p. 3. ISBN 978-0-8248-2880-6. http://books.google.com/books?id=V7Td_VMSh9gC&pg=PA3. 
  9. Hess, Sabine C. (சூலை 2009). Person and Place: Ideas, Ideals and the Practice of Sociality on Vanua Lava, Vanuatu. Berghahn Books. p. 115. ISBN 978-1-84545-599-6. http://books.google.com/books?id=hY80OTx2KuMC&pg=PA115. 
  10. 10.0 10.1 The Peace Corps Welcomes You to Vanuatu. Peace Corps (மே 2007).
  11. "Background Note: Vanuatu". Bureau of East Asian and Pacific Affairs. U.S. Department of State (ஏப்ரல் 2007). பார்த்த நாள் 16 சூலை 2007.
  12. "Oceania – Vanuatu Summary". SEDAC Socioeconomic Data and Applications Centre (2000). பார்த்த நாள் 26 சூலை 2009.
  13. "Water, Sanitation and Hygiene (Pacific Islands Applied Geoscience Commission)". SOPAC. பார்த்த நாள் 26 சூலை 2009.
  14. "Major Earthquake Jolts Island Nation Vanuatu". indiaserver.com (11 சூலை 2008). மூல முகவரியிலிருந்து 13 சூலை 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 26 சூலை 2009.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வனுவாட்டு&oldid=1840026" இருந்து மீள்விக்கப்பட்டது