நியூ கலிடோனியா
நியூ கலிடோனியா
| |
---|---|
கொடி | |
குறிக்கோள்: "Terre de parole, terre de partage"[1] "பேச்சின் நிலம், பங்கீட்டின் நிலம்" | |
நாட்டுப்பண்: Soyons unis, devenons frères[1] | |
![]() சின்னம் | |
![]() | |
நிலை | Sui generis சிறப்புக் கூட்டமைப்பு |
தலைநகரம் | நூமியா 22°16′S 166°28′E / 22.267°S 166.467°E |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | பிரெஞ்சு |
பிராந்திய மொழிகள் |
|
மக்கள் | நியூ கலிடோனியன் |
சுயாட்சி | ![]() |
அரசாங்கம் | சார்பு மண்டலம் |
• தலைவர் | இம்மானுவேல் மாக்ரோன் |
• அரசுத்தலைவர் | பிலிப் கெர்மைன் |
• உயர் ஆணையர் | தியெரி லட்டாஸ்டே |
சட்டமன்றம் | பிராந்திய காங்கிரசு |
நிறுவுதல் | |
• பிரான்சுடன் இணைப்பு | 1853 |
• கடல்கடந்த மண்டலம் | 1946 |
• சிறப்பு கூட்டு | 1999 |
பரப்பு | |
• மொத்தம் | 18,576 km2 (7,172 sq mi) |
• நிலம் | 18,275 km2 (7,056 sq mi) |
மக்கள் தொகை | |
• 2017 மதிப்பிடு | ![]() |
• அடர்த்தி | 14.5/km2 (37.6/sq mi) (200-வது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2011 மதிப்பீடு |
• மொத்தம் | US$9.89 பில்.[2] |
• தலைவிகிதம் | US$38,921[2] |
நாணயம் | CFP franc (XPF) |
நேர வலயம் | ஒசநே+11 |
வாகனம் செலுத்தல் | வலது |
அழைப்புக்குறி | +687 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | NC |
இணையக் குறி | .nc |
நியூ கலிடோனியா (New Caledonia, பிரெஞ்சு மொழி: Nouvelle-Calédonie)[கு 1] என்பது பிரான்சின் கடல்கடந்த மண்டலமாகும். இம்மண்டலம் தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில், ஆத்திரேலியாவின் கிழக்கில் இருந்து 1,210 கிமீ தூரத்திலும், பிரான்சில் இருந்து 20,000 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.[3] மெலனீசியா துணைப்பகுதியில் அமைந்துள்ள இத்தீவுக் கூட்டத்தில் கிராண்ட் டெரே, லோயல்டீ தீவுகள், செசுட்டர்பீல்டு தீவுகள், பெலெப் தீவுக்கூட்டம், மற்றும் பல சிறிய தீவுகளும் உள்ளன.[4] செசுட்டர்பீல்டு தீவுகள் பவளக் கடலில் அமைந்துள்ளது.[5]
நியூ கலிடோனியாவின் நிலப்பரப்பு 18,576 சதுரகிமீ ஆகும். மக்கள்தொகை 268,767 ஆகும் (ஆகத்து 2014 கணக்கெடுப்பு)[6] இவர்களில் நியூகலிடோனியாவின் பழங்குடியினர் கனாக்கு மக்கள் எனப்படுவோர், ஐரோப்பியக் குடியேறிகள், பொலினீசிய மக்கள் (குறிப்பாக வலிசியர்), மற்றும் தென்கிழக்காசியர், சிறிய அளவு வடக்கு ஆப்பிரிக்க வம்சாவழியினரும் அடங்குவர்.. இதன் தலைநகரம் நூமியா ஆகும்.[3]
1986 ஆம் ஆண்டு முதல் குடியேற்றங்களை இல்லாதொழிப்பதற்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் நியுகலிடோனியாவை சுயாட்சியற்ற மண்டலமாகப் பட்டியலிட்டு வருகிறது.[7] 1987 இல் இங்கு மக்கள் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டதில், பெரும்பான்மையான மக்கள் விடுதலைக்கு எதிராக வாக்களித்தனர். இரண்டாவது தடவையாக 2018 நவம்பர் 4 இல் இடம்பெற்ற மக்கள் கருத்துக் கணிப்பில்[8][9] 56.9% மக்கள் பிரான்சுடன் இணைந்திருக்க விருப்பம் தெரிவித்தனர்.[10] 2020 இல் நடந்த வாக்கெடுப்பில் 53.3% மக்கள் விடுதலைக்கு எதிராக வாக்களித்தனர். இறுதியாக, 2021 நவம்பர் 12 இல் நடந்த வாக்கெடுப்பில் 96.49% மக்கள் விடுதலைக்கு எதிராகவும், 3.51% மக்கள் ஆதரவாகவும் வாக்களித்தனர்.[11] பழங்குடிகளான கனாக்கு மக்கள் கோவிட்-19 பெருந்தொற்றைக் காரணம் காட்டி இவ்வாக்கெடுப்பைப் புறக்கணித்தனர்.[12][13]
வரலாறு[தொகு]
நியூகலிடோனியாவில் ஆரம்பகால மனிதக் குடியேற்றங்கள் கிமு 1600 முதல் கிபி 500 (லப்பித்தா காலத்தில்) இடம்பெற்றது.[14] லப்பித்தா மக்கள் பசிபிக் பிராந்தியத்தில் மிகவும் திறமை வாய்ந்த மாலுமிகளாகவும் வேளாண்மையில் சிறந்து விளங்கியதாகவும் அறியப்படுகிறது.[15]

பிரித்தானிய நாடுகாண் பயணி கப்டன் ஜேம்ஸ் குக் முதன்முறையாக நியூகலிடோனியாவை 1774 செப்டம்பர் 4 இல் தனது இரண்டாவது கடற்பயணத்தின் போது கண்ணுற்றார்.[16] இசுக்காட்லாந்தின் நினைவாக இதற்கு "புதிய கலிடோனியா" என அவர் பெயரிட்டார்.[16] கிராண்ட் டெரே தீவின் மேற்குக் கரையை 1788 இல் கொம்டே டி லப்பேரோசு என்பவர் கண்டுபிடித்தார். லோயால்ட்டி தீவுகளுக்கு வில்லியம் ராவென் என்பவர் 1793-96 இல் பயணம் செய்தார்.[17]
குறிப்புகள்[தொகு]
- ↑ முன்னர் அதிகாரபூர்வமாக "நியூ கலிடோனியா பிராந்தியமும் சார்புகளும்" (Territory of New Caledonia and Dependencies, பிரெஞ்சு மொழி: Territoire de la Nouvelle-Calédonie et dépendances), சுருக்கமாக "நியூ கலிடோனியா பிராந்தியம்", இப்போது அதிகாரபூர்வமான பிரெஞ்சுப் பெயர் Nouvelle-Calédonie (Organic Law of 19 March 1999, article 222 IV – பார்க்க: [1]).
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "La Nouvelle-Calédonie se dote d'un hymne et d'une devise" (in French). Le Monde.fr. 2010-08-18. http://www.lemonde.fr/politique/article/2010/08/18/la-nouvelle-caledonie-se-dote-d-un-hymne-et-d-une-devise_1399996_823448.html. பார்த்த நாள்: 2013-01-30.
- ↑ 2.0 2.1 "PIB GRANDS AGRÉGATS". ISEE. Archived from the original on 7 September 2013. https://web.archive.org/web/20130907023238/http://www.isee.nc/compteco/pib.html. பார்த்த நாள்: 2013-08-01.
- ↑ 3.0 3.1 "Présentation" (in French). Archived from the original on 30 October 2012. https://web.archive.org/web/20121030174803/http://www.nouvelle-caledonie.gouv.fr/site/La-Nouvelle-Caledonie/Presentation. பார்த்த நாள்: 2013-01-30.
- ↑ "Présentation – L'Outre-Mer". http://www.outre-mer.gouv.fr/?presentation-nouvelle-caledonie.html. பார்த்த நாள்: 2013-01-30.
- ↑ David Stanley (1989). South Pacific Handbook. David Stanley. பக். 549. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-918373-29-8. https://books.google.com/books?id=unz2v_HT5q0C&pg=PA549.
- ↑ "268 767 habitants en 2014.". ISEE. http://www.isee.nc/population/recensement/structure-de-la-population-et-evolutions. பார்த்த நாள்: 2014-11-16.
- ↑ Trust and Non-Self-Governing Territories (1945–1999) United Nations
- ↑ Willsher, Kim (19 March 2018). "New Caledonia sets date for independence referendum". https://amp.theguardian.com/world/2018/mar/19/new-caledonia-sets-date-independence-referendum-france.
- ↑ "Paris meeting to prepare New Caledonia independence vote". 2016-02-02. http://www.radionz.co.nz/international/programmes/datelinepacific/audio/201787812/paris-meeting-to-prepare-new-caledonia-independence-vote.
- ↑ Reuters (2018-11-04). "New Caledonia votes 'non' to independence from France" (in en). http://www.theguardian.com/world/2018/nov/04/new-caledonia-votes-non-to-independence-from-france.
- ↑ "'Tonight France is more beautiful': Macron hails New Caledonia's rejection of independence" (in en). 2021-12-12. https://www.france24.com/en/live-news/20211212-new-caledonia-rejects-independence-from-france-in-referendum-boycotted-by-separatist-camp-partial-results.
- ↑ "New Caledonia rejects independence in final vote amid boycott" (in en). 2021-12-12. https://www.reuters.com/world/europe/new-caledonia-begins-voting-independence-referendum-2021-12-12/.
- ↑ "Covid-19 : aucun décès supplémentaire à déplorer au point sanitaire du 11 décembre 2021". https://la1ere.francetvinfo.fr/nouvellecaledonie/covid-19-aucun-deces-supplementaire-a-deplorer-au-point-sanitaire-du-11-decembre-2021-1177933.html.
- ↑ "Histoire / La Nouvelle-Calédonie" (in French). 2012-11-20. Archived from the original on 30-10-2012. https://web.archive.org/web/20121030183849/http://www.nouvelle-caledonie.gouv.fr/site/La-Nouvelle-Caledonie/Histoire/Histoire. பார்த்த நாள்: 2013-01-30.
- ↑ Leanne Logan; Geert Cole (2001). New Caledonia. Lonely Planet. பக். 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-86450-202-2. https://books.google.com/books?id=lly95WF8n-cC&pg=PA13.
- ↑ 16.0 16.1 "Rapport annuel 2010" (PDF). IEOM Nouvelle-Calédonie. http://www.ieom.fr/IMG/pdf/ra2010_nouvelle-caledonie.pdf. பார்த்த நாள்: 2013-01-30.
- ↑ Quanchi, Max; Robson, John (2005). Historical Dictionary of the Discovery and Exploration of the Pacific Islands. Scarecrow Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780810865280. https://books.google.com.au/books?id=FUwDzM94jGUC&lpg=RA1-PA15.
வெளி இணைப்புகள்[தொகு]
- New Caledonia : picture post card beautiful – Official Government of France website (in English)
- Tourism New Caledonia