இந்தோசீனா
இந்தோசீனா இந்தோசீன மூவலந்தீவு பெருநிலத் தென்கிழக்காசியா | |
ஆசியாவின் மூவலந்தீவுகள் | |
நாடுகள் | மியான்மர், கம்போடியா, லாவோஸ், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் |
---|---|
பெருநிலத் தென்கிழக்காசியாவின் நில உருவப்படம்
|
இந்தோசீனா (Indochina) அல்லது இந்தோசீன மூவலந்தீவு (தவிர பெருநிலத் தென்கிழக்காசியா என்றும் அறியப்படும்) இந்தியாவிற்கு கிழக்கிலும் சீனாவின் தெற்கே/தென்மேற்கே அமைந்துள்ள தென்கிழக்காசியாவின் நிலப்பகுதியைக் குறிக்கும்[1]வரலாற்றுரீதியாக "இந்தியா", "சீனா" நாட்டுப் பெயர்களை ஒட்டி இவ்விரு நாடுகளுக்கிடையே உள்ள நாடுகளைக் குறிக்க பிரான்சியர்கள் பயன்படுத்திய இந்தோசீனெ என்பதிலிருந்து இப்பெயர் உருவாகியுள்ளது.
பெருநிலத் தென்கிழக்காசிய நாடுகளின் பண்பாட்டில் இந்தியா மற்றும் சீனாவின் தாக்கத்தை பல்வேறு அளவுகளில் காணலாம்.[1] கம்போடியா, இலாவோசு, தாய்லாந்து, மலேசியா போன்ற சில நாடுகளில் இந்தியாவின் தாக்கம் மிகுந்தும் சீனாவின் தாக்கம் குறைவாகவும் உள்ளது. வியத்நாம் போன்ற பிறநாடுகள் சீனப் பண்பாட்டை பெரிதும் தழுவியுள்ளன.
19ஆவது நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இப்பகுதியில் குடிமைப்படுத்தல் நடந்துள்ளது; பிரான்சிய இந்தோசீனாவும் பிரித்தானிய இந்தியாவும் இவற்றில் முதன்மையானவை.
புவியியல்
[தொகு]பெருநிலத் தென்கிழக்காசியாவிலுள்ள நாட்டுப் பகுதிகள்:
- கம்போடியா
- லாவோஸ்
- மலேசியா (மலேசியத் தீபகற்பம் மட்டும்)
- மியான்மர் (முன்னாள் பர்மா; 1937 வரை பிரித்தானிய இந்தியாவின் அங்கமாக இருந்தது)
- தாய்லாந்து (முன்னாள் சயாம்)
- வியட்நாம்
இவற்றையும் காண்க
[தொகு]மேற்சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Marion Severynse, ed. (1997). The Houghton Mifflin Dictionary Of Geography. Houghton Mifflin Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-395-86448-8.
வெளி இணைப்புகள்
[தொகு]
- (ஆங்கிலம்) (பிரெஞ்சு) The Colonization of Indochina from 1892