மலேசியத் தீபகற்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆள்கூற்று: 4°0′N 102°30′E / 4.000°N 102.500°E / 4.000; 102.500

மலேசியத் தீபகற்பம்

மலேசியத் தீபகற்பம் அல்லது மலேசிய மூவலந்தீவு (Peninsular Malaysia, மலாய்: Semenanjung Malaysia), அல்லது மேற்கு மலேசியா[1] (முன்னர் மலாயா), என்பது மலாய் தீபகற்பத்தில் (மலேசிய மூவலந்தீவில்) அமைந்திருக்கிறது. இது மலேசியாவின் ஒரு பகுதியாகும். இதன் பரப்பளவு 131,598 சதுர கிமீ (50,810 சதுர மைல்கள்). இது வடக்கே தாய்லாந்து நாட்டை நில எல்லையாகக் கொண்டுள்ளது. தெற்கே சிங்கப்பூர் உள்ளது. மேற்கே மலாக்கா நீரிணைக்கு மறுகரையில் சுமாத்திரா தீவு அமைந்துள்ளது. கிழக்கே தெற்கு சீனக் கடலுக்கு மறுகரையில் கிழக்கு மலேசியா (போர்னியோ தீவில்) உள்ளது. ஏறத்தாழ 21 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது இத்தீபகற்பம் (இம் மூவலந்தீவு).

மாநிலங்களும் பிரதேசங்களும்[தொகு]

மலேசிய மூவலந்தீவில் மட்டும் 11 மாநிலங்களும், இரண்டு நடுவண் பிரதேசங்களும் அமைந்துள்ளன:

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. மலேசியா நாட்டின் இன்னொரு பகுதியான, சபா, சரவாக் பகுதிகளைக் கொண்ட கிழக்கு மலேசியா என்பது இந்தோனேசியத் தீவின் ஒரு பகுதியாகும். இது மலேசிய மூவலந்தீவில் இருந்து தென்சீனக் கடலால் பிரிக்கப்பட்டு இருக்கும் நிலப்பகுதி

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசியத்_தீபகற்பம்&oldid=1750866" இருந்து மீள்விக்கப்பட்டது