புத்ராஜெயா
புத்திராசெயா | |
---|---|
நிருவாகத் தலைநகரம் Administrative Capital | |
Putrajaya | |
மேலிருந்து... இடமிருந்து வலமாக: பெர்டானா புத்ராவில் மலேசியப் பிரதமரின் அலுவலகம்; புத்ரா மசூதி, புத்திராசெயா நிறுவன வளாகம்; துவாங்கு மிசான் சைனல் அபிதீன் பள்ளிவாசல்; புத்திராசெயா அனைத்துலக மாநாட்டு மையம்; செரி வாவாசான் பாலம்; உயரமான அமைச்சக வளாகங்கள் | |
குறிக்கோளுரை: Bandar raya Taman, Bandar raya Bestari (Garden City, Intelligent City) | |
ஆள்கூறுகள்: 02°55′48″N 101°41′24″E / 2.93000°N 101.69000°E | |
நாடு | ![]() |
மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதி | ![]() |
உருவாக்கம் | அண். 1921 |
திட்டமிடப்பட்டு நிறுவப்பட்ட நகரம் | 19 அக்டோபர் 1995 |
சிலாங்கூர் மாநிலத்தில் இருந்து கூட்டாட்சி அதிகார வரம்பிற்கு மாற்றப்பட்டது | 1 பிப்ரவரி 2001 |
அரசு | |
• வகை | கூட்டாட்சி பிரதேசம் நேரடியான கூட்டாட்சி நிர்வாகம் |
• நிர்வாகம் | புத்ராஜெயா நகராட்சி |
• தலைவர் | முகமது அசுமி முகமது சைன் (Muhammad Azmi Mohd Zain) |
பரப்பளவு[1] | |
• மொத்தம் | 49 km2 (19 sq mi) |
மக்கள்தொகை (2020)[2] | |
• மொத்தம் | 109,202 |
• அடர்த்தி | 2,200/km2 (5,800/sq mi) |
மனித வளர்ச்சிக் குறியீடு | |
• HDI (2019)[3] | 0.856 (very high) (3rd) |
நேர வலயம் | மலேசிய நேரம் (ஒசநே+8) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 62xxx |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +603-88 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | F & Putrajaya |
ஐ. எசு. ஓ.3166-2 | MY-16 |
ரேபிட் டிரான்சிட் | ![]() |
இணையதளம் | www |
புத்திராசெயா அல்லது புத்திரா செயா (மலாய்:Putrajaya; ஆங்கிலம்:Putrajaya; சீனம்:布城; சமசுகிருதம்: पुत्र जया; சாவி: ڤوتراجاي) என்பது மலேசியாவில் திட்டமிட்டுக் கட்டப்பட்ட ஒரு நவீன நகரமாகும். 1999-ஆம் ஆண்டு முதல் மலேசியாவின் நிருவாகத் தலைநகரமாகச் செயல்படுகிறது.[4]
அதிகாரப்பூர்வமாக புத்திராசெயா கூட்டரசுப் பிரதேசம் (மலாய்:Wilayah Persekutuan Putrajaya; ஆங்கிலம்: Federal Territory of Putrajaya) என்று அழைக்கப்படுகிறது.
கோலாலம்பூர் மாநகருக்கு தெற்கே அமைந்துள்ள இந்த நகரம், மலேசிய அரசாங்கத்தின் அலுவல் மையமாகும். 2005-ஆம் ஆண்டு முதல் அனைத்து அமைச்சுகளும் கோலாலம்பூர் மாநகரத்தில் இருந்து புத்திராசெயாவிற்கு மாற்றம் செய்யப் பட்டன.
வரலாறு[தொகு]
புத்திராசெயாவின் கட்டுமானம் 1995 ஆகத்து மாதம் தொடங்கியது. 2001 பிப்ரவரி 1-ஆம் தேதி முடிக்கப்பட்டது. கட்டுமானச் செல்வு $8.1 பில்லியன் அமெரிக்க டாலர் (US Dollar); (மலேசிய ரிங்கிட்: 36.26 பில்லியன்).[5]
மலேசிய பல்லூடகப் பெருவழி (Multimedia Super Corridor - MSC) திட்டத்தில் புத்திராசெயாவும் ஒரு பகுதியாகும். இந்தத் திட்டம், கிள்ளான் பள்ளத்தாக்கை உள்ளடக்கிய ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலமாகும். மலேசியப் பல்லூடகப் பெருவழி என்பது மலேசியாவை நவீனப் படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும். 1996 பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி, அப்போதைய பிரதமர் மகாதீர் பின் முகமது அதிகாரப் பூர்வமாக, இந்தத் திட்டத்தைத் திறந்து வைத்தார்.[5]
பொது[தொகு]
மலேசியாவின் அரசியலமைப்பின்படி கோலாலம்பூர் மாநகரம், இன்றும் மலேசியாவின் தேசியத் தலைநகரமாக உள்ளது. மேலும் இந்தக் கோலாலம்பூர் மாநகரம் யாங் டி பெர்துவான் அகோங் அவர்களின் அரச நகரமாகவும் விளங்குகிறது. மற்றும் மலேசியாவின் நாடாளுமன்றத்தின் அவைக் கூடமாகவும்; நாட்டின் வணிகம் மற்றும் நிதி மையமாகவும் உள்ளது.[5]
2001 பிப்ரவரி 1-ஆம் தேதி புத்ராஜெயா மலேசியாவின் மூன்றாவது கூட்டாட்சிப் பிரதேசமாக மாறியது. 1974-ஆம் ஆண்டில் கோலாலம்பூர் முதல் கூட்டாட்சிப் பிரதேசமாகவும்; அடுத்து 1984-ஆம் ஆண்டில் லபுவான் இரண்டாவது கூட்டாட்சிப் பிரதேசமாகவும் மாறின.[5]
புத்ராஜெயா எனும் பெயர் மலேசிய நாட்டின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் (Tunku Abdul Rahman) அவர்களை நினைவுகூறும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘புத்ரா’ (Putra) என்னும் சொல் சமசுகிருதத்தில் புத்திரர் என பொருள் படும். ‘ஜெயா’ எனும் சொல் வெற்றியைக் குறிக்கின்றது.

பிராங் பெசார்[தொகு]
1920-ஆம் ஆண்டுகளில் காடுகளாக இருந்த இந்தப் பகுதி, பிரித்தானியர் ஆட்சிக் காலத்தின் பொது, ரப்பர் தோட்டப் பகுதிகளாக உருவாக்கப்பட்டது. இந்தத் தோட்டப் பகுதியை பிராங் பெசார் (Prang Besar) என்று அழைத்தனர். இந்தத் தோட்டப் பகுதியில் பிரிட்டனின் முதலாம் உலகப் போரின் காலத்தில் இங்கு ஒரு போர் நடந்தது. அதனால் இந்தப் பகுதிக்கு பெராங் பெசார் (பெரிய போர்) எனும் பெயர் சூட்டப்பட்டது. பெராங் பெசார் என்பது காலப் போக்கில் பிராங் பெசார் என்று திரிபு அடைந்தது.[6]
1975-ஆம் ஆண்டு வரை இந்தப் பகுதி உலு லங்காட் மாவட்டத்தின் கீழ் செயல்பட்டது. பின்னர் காஜாங் மாவட்டத்தின் அதிகாரத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் மலேசியாவின் 4-ஆவது பிரதமரான மகாதீர் பின் முகமது, நெரிசலான கோலாலம்பூர் மாநகரத்தில் இருந்த நடுவண் அரசாங்க அலுவலகங்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்குத் திட்டமிட்டார்.
அதற்காக இரண்டு இடங்கள் முன்மொழியப்பட்டன. முதலாவது இடம் பகாங் மாநில எல்லையில் உள்ள ஜாண்டா பாக்யிக் (Janda Baik) எனும் இடம். இரண்டாவது இடம் பிராங் பெசார். அந்த இரு இடங்களில், பிராங் பெசார் தேர்தெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 1990-ஆம் ஆண்டுகளில் மலேசிய அரசாங்கம், சிலாங்கூர் மாநில அரசிடம் இருந்து 11,320 ஏக்கர் பரப்பளவு (45.8 கி.மீ.2) கொண்ட பெராங் பெசார் நிலப் பகுதியை வாங்கியது.
புத்ராஜெயா நிர்மாணிப்பு[தொகு]
புத்ராஜெயா நிர்மாணிப்பு பணிகள் 1995-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கியது. அந்தக் காலக் கட்டத்தில் இது மலாயாவில் மட்டுமன்றி தென்கிழக்கு ஆசியாவில் மிகப் பெரிய கட்டிடப் பணியாகக் கருதப்பட்டது.
இதன் நிர்மாணிப்புகள் அனைத்தும் உள்ளூர் நிபுணர்களால் திட்டமிடப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கப் பட்டன. கட்டுமானத்தின் பொழுது 10 விழுக்காட்டுப் பொருட்கள் மட்டுமே வெளியூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. மற்றவை அனைத்தும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்கள்.
1997-ஆம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சின் பொழுது கட்டுமானப் பணிகள் பெரும் சவால்களை எதிர்நோக்கியதோடு சில மேம்பாட்டு பணிகளும் நிறுத்தப்பட்டன.
போக்குவரத்து தொடர்புமுறை[தொகு]
புத்ராஜெயாவை சாலை மற்றும் இரயில் வழிகளில் வந்து அடையலாம். கோலாலம்பூரையும் புத்ராஜெயாவையும் இணைக்க மேக்ஸ் (MEX Highway) நெடுஞ்சாலை கட்டப்பட்டது.
2002-ஆம் ஆண்டு முதல் கே.எல்.ஐ.ஏ. டிரான்சிட் (KLIA Transit) என அழைக்கப்படும் இரயில் சேவை தொடங்கப்பட்டது. இதன் வழி கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (KLIA) எனும் அனைத்துலக விமான நிலையத்தையும் கோலாலம்பூர் மாநகரையும் எளிதில் சென்று அடைய முடியும்.
மக்கள் தொகை[தொகு]
2020-ஆம் ஆண்டில் புத்ராஜெயாவின் மக்கள் தொகை 109,202 ஆகும். இவர்களில் மலாய்க்காரர்கள் 97.9%; சீனர்கள் 0.6%; இந்தியர்கள் 1.2%; மற்ற இனத்தவர்கள் 0.2%.[7]
சுகாதாரம்[தொகு]
புத்ராஜெயா மருத்துவமனை மற்றும் தேசியப் புற்றுநோய் மையம் ஆகியவை புத்ராஜெயாவில் உள்ள முக்கிய மருத்துவ மையங்கள் ஆகும்.
புத்ராஜெயா மருத்துவமனை 2005-ஆம் ஆண்டு செயல் படத் தொடங்கியது. தேசியப் புற்றுநோய் மையம் 2013 செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி செயல் படத் தொடங்கியது.[8]
அரசாங்கக் கட்டடங்கள்[தொகு]
• பெர்டானா புத்ரா - (Perdana Putra) பிரதமர் அலுவலகம்
• ஸ்ரீ பெர்டானா - (Seri Perdana) பிரதமரின் அதிகாரபுர இல்லம்
• ஸ்ரீ சத்ரியா - (Seri Satria) துணை பிரதமரின் அதிகாரபுர இல்லம்
• புத்ராஜெயா உயர் நீதிமன்றம் - (Palace of Justice)
• மெலாவதி அரண்மனை - (Istana Melawati)
• டாருல் ஏசான் அரண்மனை - (Istana Darul Ehsan)
• புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையம் - (Putrajaya International Convention Centre)
• புத்ராஜெயா மசூதி - (Putra Mosque)
புத்ராஜெயாவில் செயல்படும் அமைச்சுக்கள்[தொகு]
• மலேசிய தொழில்முனைவர் மேம்பாட்டு அமைச்சு
• மலேசிய பெண்கள், குடும்பம் மற்றும் சமூக அமைச்சு
• மலேசிய சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு அமைச்சு
• மலேசிய பொருளாதார விவகார அமைச்சு
புத்ராஜெயா காட்சியகம்[தொகு]
-
2013-இல் புத்ராஜெயா
-
பெர்டானா புத்ரா
-
அரசு அலுவலக வளாகம்
-
நிதியமைச்சு வளாகம்
-
நீதித்துறை வளாகம்
-
புத்ராஜெயா நடைபாதை
-
இரவில் பிரதமர் அலுவலகம்
-
ஸ்ரீ வாவாசான் பாலம்
-
புத்ரா பள்ளிவாசல்; பிரதமர் அலுவலகம்
-
ஸ்ரீ சவுசானா பாலம்
-
புல்மான் தங்கும் விடுதி
-
நவீனக் கட்டிடக்கலை
-
புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையம்
-
மலேசிய சுகாதார அமைச்சு பயிற்சி மையம்
-
புறநகர் 4-இல் வானளாவிகள்
-
மலேசிய விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சு
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Laporan Kiraan Permulaan 2010". Jabatan Perangkaan Malaysia. p. 27 இம் மூலத்தில் இருந்து 8 July 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110708202650/http://www.statistics.gov.my/ccount12/click.php?id=2127.
- ↑ "Malaysia's population stood at 32.6 million in Q4 2018". The Borneo Post. 2018. http://www.theborneopost.com/2019/02/13/malaysias-population-stood-at-32-6-million-in-q4-2018/.
- ↑ "Subnational Human Development Index (2.1) [Sabah – Malaysia"]. Global Data Lab of Institute for Management Research, Radboud University. https://hdi.globaldatalab.org/areadata/shdi/.
- ↑ Moser, Sarah (2010-08-01). "Putrajaya: Malaysia's new federal administrative capital" (in en). Cities 27 (4): 285–297. doi:10.1016/j.cities.2009.11.002. பன்னாட்டுத் தர தொடர் எண்:0264-2751. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0264275109001139.
- ↑ 5.0 5.1 5.2 5.3 Landau, Esther (2020-09-25). "NST175: From Prang Besar to Putrajaya | New Straits Times" (in en). https://www.nst.com.my/news/nation/2020/09/627093/nst175-prang-besar-putrajaya.
- ↑ "The Story of Prang Besar Estate" இம் மூலத்தில் இருந்து 8 அக்டோபர் 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221008031128/https://www.arabis.org/index.php/articles/articles/plantation-history/the-story-of-prang-besar. பார்த்த நாள்: 3 June 2019.
- ↑ "Department of Statistics Malaysia Official Portal". https://www.dosm.gov.my/v1/index.php?r=column/cone&menu_id=bkJnUlk2WXUyT0hVWm5IZXlubERjUT09. பார்த்த நாள்: 20 August 2022.
- ↑ "Latarbelakang". http://nci.moh.gov.my/index.php/ms/info/profile. பார்த்த நாள்: 3 June 2019.
மேலும் கவனிக்க[தொகு]
மேலும் படிக்க[தொகு]
- King, Ross: Kuala Lumpur and Putrajaya: Negotiating Urban Space in Malaysia, Nias Press, 2008
வெளி இணைப்புகள்[தொகு]
பொதுவகத்தில் புத்ரஜெயா தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Tourism Malaysia – Putrajaya
- Traveller's guide to Putrajaya written and maintained by locals
- State Development Office – State Development Office Wilayah Persekutuan
- How to get to Putrajaya from Kuala Lumpur