புத்ராஜெயா தாவரவியல் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புத்ராஜெயா தாவரவியல் பூங்கா
Putrajaya Botanical Garden
Taman Botani Putrajaya
புத்ராஜெயா பூங்கா
வகைபூங்கா
அமைவிடம்Precint 1, புத்ராஜெயா, மலேசியா
பரப்பு93 எக்டேர்
உருவாக்கப்பட்டது2001
Operated byKompleks Perbadanan Putrajaya 24, Persiaran Perdana, Presint 3, 62675 Putrajaya
புத்ராஜெயா நகராட்சி
Parkingவாகன நிறுத்துமிடம் உள்ளது
Websiteppj.spab.gov.my

புத்ராஜெயா தாவரவியல் பூங்கா; (மலாய்: Taman Botani Putrajaya; ஆங்கிலம்: Putrajaya Botanical Garden; சீனம்: 布城植物园) என்பது மலேசியா, புத்ராஜெயா நகரில் அமைந்து உள்ள ஒரு தாவரவியல் பூங்காவாகும்.[1]

பிப்ரவரி 4, 2003-இல் துன் மகாதீர் பின் முகமது அவர்களால் திறக்கப்பட்டது. புத்ராஜெயாவில் திறக்கப்பட்ட ஆரம்பகால பூங்காக்களில் புத்ராஜெயா தாவரவியல் பூங்காவும் ஒன்றாகும். ஒரு பரந்த ஏரிக்கு அருகில், 230 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள புத்ராஜெயா தாவரவியல் பூங்கா, புத்ராஜெயா கூட்டாட்சி பிரதேசத்தில் 'அனைத்து தோட்டங்களின் தாய்' (Mother of all Gardens) என்றும் அழைக்கப்படுகிறது.[1]

பொது[தொகு]

இந்தப் பூங்கா எட்டு தாவரவியல் கருப்பொருள்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது: மலேசிய மூலிகை (Malaysian Ulam) மற்றும் மருத்துவம்; மூங்கில் வனம் (Bambusetum); இஞ்சி தாவரங்கள் (Zingiberales), உண்ணக்கூடிய பழவகை மரங்கள், புல்வெளி மற்றும் மூங்கில்புல் (Gramineae), பழங்குடியின மருத்துவ தாவரங்கள் (Aboriginal Medicinal Plants), சுற்றுச்சூழல் குளம் (Conservatory and Ecological Pond).[2]

புத்ராஜெயா தாவரவியல் பூங்கா, ஏரியுடன் கூடிய ஒரு பசுமையான பகுதியில் அமைந்துள்ளது. இதன் கலாச்சாரக் கூறுகள்; பல்வகை வடிவமைப்புகள்; பாரம்பரிய குடிசைகள் (Traditional Wakaf); பூங்கா விளக்குகள் (Flower-Theme Park Lighting); மற்றும் தாவர அடிப்படையிலான அறிவியல் விளக்க அட்டைகள் (Plant-based Scientific Labels) போன்றவை பார்வையாளர்களை ஈர்க்கிறது.[2]

காட்டுத் தாவரங்கள் வளர்ப்பு[தொகு]

இங்கு பல்வேறு கண்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 750-க்கும் மேற்பட்ட தாவரங்கள் உள்ளன. இங்கு ஒரு தாவரவியல் மற்றும் தாவரவியல் பாதுகாப்பு துறை (Ethno Botany and Conservation Sector) உள்ளது. ஆராய்ச்சிகளுக்காகவும்; ஆபத்தான காட்டுத் தாவரங்களின் (Endangered Wild Plants) பாதுகாப்பு நோக்கங்களுக்காகவும் காட்டுத் தாவரங்கள் வளர்க்கப் படுகின்றன.

2008-இல் லண்டன் அரச செல்சியா மலர் கண்காட்சியில் (London’s Royal Chelsea Flower Show) அரச செல்சியா அறக்கட்டளையால் (Royal Chelsea Foundation) ஆசியாவின் மிக அற்புதமான தோட்டங்களில் (Asia’s Most Amazing Gardens) ஒன்றாக புத்ராஜெயா தாவரவியல் பூங்கா அங்கீகரிக்கப்பட்டது.

மொரோக்கோ பாரம்பரியம் மற்றும் கட்டிடக் கலையால் உருவாக்கப்பட்ட பிரபலமான அசுதகா மொராக்கோ (Moroccan Pavilion) அரங்கமும் இங்கு உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]