உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய நேரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசிய நேரம் அல்லது மலேசிய சீர் நேரம் (ஆங்கில மொழி: Malaysia Standard Time (MST)), (மலாய்: Waktu Piawai Malaysia (WPM)) என்பது மலேசியா முழுவதும் கடைப்பிடிக்கப்படும் ஒரு நேர முறைமையாகும். இந்த நேர வலயம், கிரீன்விச் துள்ளிய நேரத்திற்கு (ஆங்கில மொழி: Greenwich Mean Time (GMT)) +07:30 மணி நேரம் முன்னதாக அமைகின்றது. கோலாலம்பூரில் முன்பு உள்நாட்டு நேரமாக GMT+06:46:48 என இருந்தது. 1880ஆம் ஆண்டு வரை இந்த நேரப் பயன்பாடு அமலில் இருந்து வந்தது. அதன் பின்னர் சிங்கப்பூரின் GMT+06:55:24 உள்நாட்டு நேரம் பயன்படுத்தப்பட்டது.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், 1963 செப்டம்பர் 16ஆம் தேதி வரையில், பிரித்தானிய மலாயா சீர் நேரம் (ஆங்கில மொழி: British Malayan Standard Time) என்று அழைக்கப்பட்டது. அந்தப் பிரித்தானிய மலாயா சீர் நேரம், கிரீன்விச் துள்ளிய நேரத்திற்கு +07:30 முன்னதாக அமைந்து இருந்தது.

1981 டிசம்பர் 31ஆம் தேதி, இரவு 11.30க்கு (2330 hrs local time), தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்த மக்கள் மட்டும், தங்களின் கடிகார நேரத்தை 12.00க்கு (00:00 hrs local time) முன்னதாக வைத்து சரி செய்து கொண்டார்கள். கிழக்கு மலேசியாவில் அமலில் இருந்த UTC+08:00 உள்நாட்டு நேர வலயத்திற்கு சரி சமமாக மலேசியா முழுவதும் நேரம் சரி செய்யப்பட்டது.

இந்தப் புதிய நடைமுறை வருவதற்கு முன்னர், இந்தியாவிற்கும் மேற்கு மலேசியாவிற்கும் நேர இடைவெளி 2 மணி நேரமாக இருந்தது. 1982 ஜனவரி 1லிருந்து நேர இடைவெளி முப்பது நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டு 2 1/2 மணி நேரமாக மாறியது.

வரலாறு

[தொகு]

1981 டிசம்பர் 31ஆம் தேதி, தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்த மக்கள், தங்களின் கடிகார நேரத்தை 30 நிமிடங்கள் முன்னதாக வைத்து சரி செய்ய வெண்டும் என அரசாங்கம் கேட்டுக் கொண்டது. மலேசியாவில் 80 விழுக்காட்டு மக்கள் மேற்கு மலேசியாவில் வாழ்கின்றனர். அதனால், அரசாங்கத்தின் அந்தப் புதிய அறிவிப்பை வழக்கத்திற்கு மாறானதாகப் பலர் கருதினர்.

இருப்பினும், 1982 ஜனவரி 1லிருந்து நேர இடைவெளி முப்பது நிமிடங்களுக்கு கூட்டி வைக்கப்பட்டது. மேற்கு மலேசியாவில் 1982 ஜனவரி 1 நாள் காலை மணி 6.00 என்பது 6.30 என அதிகாரப்பூர்வமாக மாற்றம் கண்டது.

பயன்பாட்டுக் காலம்
Period in use
ஜி.எம்.டி நேர வேறுபாடு
Time offset from GMT
அதிகாரப்பூர்வமற்ற நேரப் பெயர்
Name of Time (unofficial)
1 ஜனவரி 1901 - 31 மே 1905 UTC+06:46:48 பிரித்தானிய மலாயா துள்ளிய நேரம்
British Malayan Mean Time
1 ஜூன் 1905 - 31 டிசம்பர் 1932 UTC+07:00:00 தர மண்டல நேரம்
Standard Zone Time
1 ஜனவரி 1933 - 31 ஆகஸ்ட் 1941 UTC+07:20:00 பகலொளி சேமிப்பு நேரம்
Daylight saving time
பகலொளி நியமநேரம்
Daylight Standard Time
1 செப்டம்பர் 1941 - 15 பிப்ரவரி 1942 UTC+07:30:00 பகலொளி சேமிப்பு நேரம்
Daylight saving time
பகலொளி நியமநேரம்
Daylight Standard Time
16 பிப்ரவரி 1942 - 12 செப்டம்பர் 1945 UTC+09:00:00 தோக்கியோ சீர் நேரம்
Tokyo Standard Time
13 செப்டம்பர் 1945 - 31 டிசம்பர் 1981 UTC+07:30:00 பகலொளி சேமிப்பு நேரம்
Daylight saving time
மலேசியா சீர் நேரம்
Malaysia Standard Time
1 ஜனவரி 1982 – இன்று வரை UTC+08:00:00 மலேசியா சீர் நேரம்
Malaysia Standard Time
பயன்பாட்டுக் காலம்
Period in use
ஜி.எம்.டி நேர வேறுபாடு
Time offset from GMT
அதிகாரப்பூர்வமற்ற நேரப் பெயர்
Name of Time (unofficial)
1 மார்ச் 1926 - 31 டிசம்பர் 1932 UTC+07:44:20 கோத்தா கினபாலு நேரம்
Kota Kinabalu Mean Time
1 ஜனவரி 1933 - 15 பிப்ரவரி 1942 UTC+07:30:00 பேராக் சீர் நேரம்
Perak Standard Time
16 பிப்ரவரி 1942 - 12 செப்டம்பர் 1945 UTC+09:00:00 தோக்கியோ சீர் நேரம்
Tokyo Standard Time
13 செப்டம்பர் 1945 - 16 செப்டம்பர் 1963 UTC+07:30:00 பேராக் சீர் நேரம்
Perak Standard Time
16 செப்டம்பர் 1963 - 31 டிசம்பர் 1981 UTC+08:00:00 சபா சீர் நேரம்
Sabah Standard Time
1 ஜனவரி 1982 – இன்று வரை UTC+08:00:00 மலேசியா சீர் நேரம்
Malaysia Standard Time

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_நேரம்&oldid=3925530" இலிருந்து மீள்விக்கப்பட்டது