கோத்தா கினபாலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோத்தா கினபாலு
Kota Kinabalu
哥打京那巴鲁

KK
மாநிலத் தலைநகரம்
கோத்தா கினபாலு மாநகரம்
கோத்தா கினபாலு மாநகரம்
கோத்தா கினபாலு Kota Kinabalu 哥打京那巴鲁-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் கோத்தா கினபாலு Kota Kinabalu 哥打京那巴鲁
சின்னம்
SabahDistricts-KotaKinabalu-pp.png
நாடுமலேசியா
மாநிலம்சபா
அமைவு1882
வட போர்னியோவின் தலைநகரமாக அறிவிப்பு1946
மாநகர்த் தகுதிபிப்ரவரி 2, 2000
அரசு
 • மேயர்அபிடின் மாடிங்கிர்
 • தலைமை இயக்குநர்டத்தோ இயோ பூன்
பரப்பளவு
 • மொத்தம்351 km2 (136 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்4,52,058
அஞ்சல் குறியீடு88xxx; 89xxx
தொலைபேசி குறியீடு088
இணையதளம்dbkk.sabah.gov.my
1

கோத்தா கினபாலு, (Kota Kinabalu) மலேசியா, சபா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இதன் பழைய பெயர் ஜெசல்டன் (Jesselton). இந்த மாநகரம் போர்னியோ தீவின், வட மேற்கு கடற்கரைப் பகுதியில் அமைந்து உள்ளது. வடக்கே தென் சீனக் கடல் உள்ளது. துங்கு அப்துல் ரஹ்மான் வனப்பூங்கா, நகரத்திற்கு அருகாமையில் இருக்கிறது. கினபாலு மலையின் பெயரைக் கொண்டு இந்த நகரத்திற்கும் ’கோத்தா கினபாலு’ என்று பெயர் வைக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போரில் ஒட்டு மொத்தமாக அழிபட்டுப் போன ஒரு நகரம். அழிவின் சாம்பல்களில் இருந்து, இப்போது புதிய பரிமாணங்களைப் பதித்து வரும் ஒரு புதிய நகரம். அண்மைய காலங்களில் பார்ப்பவர்களின் கண்களில் இயற்கை அழகையும் இனிதான கலாசாரத்தையும் அள்ளித் தெளித்து வருகிறது. கோத்தா கினபாலு இயற்கையின் ஒரு வரப்பிரசாதம்.

மலேசியாவிலும், அனைத்துலக ரீதியிலும் கோத்தா கினபாலுவை கே.கே. என்று அழைக்கிறார்கள். சபாவையும் போர்னியோவையும் பார்க்க வரும் சுற்றுப் பயணிகளுக்கு இந்த நகரம் ஒரு சுற்றுலா சொர்க்கபுரியாக விளங்குகிறது. கோத்தா கினபாலுவில் இருந்து 90 கி.மீ. தொலைவில் கினபாலு தேசியப் பூங்கா இருக்கிறது.[1]

இந்த நகரத்தைச் சுற்றிலும் பல சுற்றுலா மையங்கள் அமைந்துள்ளன. இதைத் தவிர, முக்கிய தொழில்துறை, வாணிபத் தளங்களும் கோத்தா கினபாலுவின் புறநகர்ப் பகுதிகளில் உருவாக்கம் பெற்று வருகின்றன. ஆகவே, இந்த நகரம் கிழக்கு மலேசியாவில் துரிதமாக வளர்ச்சி பெற்று வரும் முக்கியமான நகரங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.[2][3]

வரலாறு[தொகு]

1800களில், பிரித்தானிய வட போர்னியோ நிறுவனம், வட போர்னியோ நிலப்பகுதிகளில் தன்னுடைய காலனிகளை உருவாக்கி வந்தது. 1882இல், அந்த நிறுவனம் காயா விரிகுடாவில் ஒரு சின்ன குடியிருப்பு பகுதியை உருவாக்கியது. அந்த இடத்தில் ஏற்கனவே பாஜாவ் மக்கள் குடியிருந்து வந்தனர். அதுதான் இப்போதைய காயா தீவு ஆகும்.

1897இல், வட போர்னியோ நிறுவனத்தின் அந்தக் குடியிருப்பு பகுதி, பாஜாவ் பூர்வீகக் குடிமக்களால் தாக்கப்பட்டது. பிரித்தானியர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டன. அதற்கு மாட் சாலே எனும் பாஜாவ் இளைஞர் தலைமை தாங்கினார்.[4]

ஜெசல்டன்[தொகு]

ஜெசல்டன் (Jesselton) என்பது மலேசியா, சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவின் பழைய பெயர்.[5] 1890களில் அது ஒரு மீனவர் கிராமமாக இருந்தது. அதன் அப்போதைய பெயர் அப்பி-அப்பி. நீராவிக் கப்பல்கள் நங்கூரம் இடுவதற்கு பொருத்தமான ஓர் இடத்தைப் பிரித்தானியர்கள் தேடி வந்தனர். அந்தக் கட்டத்தில், இந்த மீனவர் கிராமம் பிரித்தானியர்களின் கண்களில் பட்டது.

பிரித்தானிய வட போர்னியோ நிறுவனத்தின் அந்தப் புதிய நிர்வாக மையத்திற்கு ஜெசல்டன் என்று பெயர் வைக்கப்பட்டது.[6] அப்போது வட போர்னியோ நிறுவனத்தின் துணைத் தலைவராக சர் சார்ல்ஸ் ஜெசல் என்பவர் இருந்தார். அவருடைய பெயரே அந்த இடத்திற்கும் வைக்கப்பட்டது. காலப் போக்கில் ஜெசல்டன், வட போர்னியோவின் பிரதான வணிகத் தளமாக மாறியது.[7]

அப்பி-அப்பி[தொகு]

வட போர்னியோ நிறுவனத்தின் காயா குடியிருப்பு பகுதி அழிக்கப்பட்டதும், 1898இல், காந்தியான் விரிகுடாவில் தற்காலிகமாக வேறோர் இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடமும் பொருத்தமாக அமையவில்லை. மறு ஆணடு ஹென்றி வால்க்கர் என்பவர் மீண்டும் நல்ல ஓர் இடத்தைத் தேர்வு செய்வதில் மும்முரமாக இறங்கினார். ஓர் இடத்தையும் கண்டுபிடித்தார்.

அது ஒரு மீனவர் கிராமம் ஆகும். அதன் பெயர் அப்பி-அப்பி. நீராவிக் கப்பல்கள் நங்கூரம் இடுவதற்கு பொருத்தமான இடமாகவும், இரயில் பாதைகள் வந்து துறைமுகத்துடன் இணைவதற்குப் பொருத்தமான இடமாகவும் அமைந்து இருந்தது. தவிர வேகமான காற்றின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பான இடமாகவும் இருந்தது.

சர் சார்ல்ஸ் ஜெசல்[தொகு]

அந்தப் புதிய நிர்வாக மையத்திற்கு ஜெசல்டன் என்று பெயர் வைக்கப்பட்டது. அப்போது வட போர்னியோ நிறுவனத்தின் துணைத் தலைவராக சர் சார்ல்ஸ் ஜெசல் என்பவர் இருந்தார். அவருடைய பெயரே அந்த இடத்திற்கும் வைக்கப்பட்டது.

காலப் போக்கில் ஜெசல்டன், வட போர்னியோவின் பிரதான வணிகத் தளமாக மாறியது. ரப்பர், ரோத்தான்கள், தேன், மெழுகு போன்ற முக்கிய பொருட்களின் பரிமாற்ற இடமாகவும் மாற்றம் கண்டது. புதிய இரயில் பாதையின் மூலமாக பெருநிலப்பகுதி ஜெசல்டன் துறைமுகத்துடன் இணைக்கப்பட்டது.

பாஜாவ் மக்களின் எழுச்சிகளும் புரட்சிகளும்[தொகு]

மலாய்க்காரர்கள், பாஜாவ் மக்களின் எழுச்சிகளும் புரட்சிகளும் அவ்வப்போது இருக்கவே செய்தன. அவற்றையும் பிரித்தானியர்கள் சமாளித்து வந்தனர். வட போர்னியோ கடல் பகுதிகளில் நீண்ட காலமாக இருந்து வந்த கடல் கொள்ளைச் சம்பவங்களை அடக்குவதற்கு பிரித்தானியர்கள் தீவிரமான முயற்சிகளையும் மேற்கொண்டனர். ஓரளவுக்கு வெற்றியும் பெற்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோத்தா_கினபாலு&oldid=3242183" இருந்து மீள்விக்கப்பட்டது