தெலுபிட் மாவட்டம்
தெலுபிட் மாவட்டம் | |
---|---|
Telupid District | |
சபா | |
![]() | |
ஆள்கூறுகள்: 5°39′0″N 117°07′0″E / 5.65000°N 117.11667°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
பிரிவு | சண்டக்கான் |
தலைநகரம் | தெலுபிட் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,935 km2 (747 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 29,241 |
• அடர்த்தி | 15/km2 (39/sq mi) |
இணையதளம் | ww2 |
தெலுபிட் மாவட்டம்; (மலாய்: Daerah Telupid; ஆங்கிலம்: Telupid District) என்பது மலேசியா, சபா மாநிலம், சண்டக்கான் பிரிவில் (Sandakan Division) உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் தெலுபிட் (Telupid Town) நகரம்.
முன்பு பெலூரான் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்த மாவட்டம், மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து சுமார் 1842 கி.மீ. தொலைவிலும்; சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து தென் கிழக்கே, ஏறக்குறைய 217 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
பொது[தொகு]
சபா மாநிலத்தின் சண்டக்கான் பிரிவில் உள்ள மாவட்டங்கள்:
- பெலுரான் மாவட்டம் (Beluran District)
- கினபாத்தாங்கான் மாவட்டம் (Kinabatangan District)
- சண்டாக்கான் மாவட்டம் (Sandakan District)
- தெலுபிட் மாவட்டம் (Telupid District)
- தொங்கோட் மாவட்டம் (Tongod District)
வரலாறு[தொகு]
தெலுபிட் மாவட்டத்தில் முதன்முதலில் 1940-ஆம் ஆண்டுகளில் முதல் குடியேற்றம் நடந்து உள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது சண்டாக்கான் மரண அணிவகுப்பிற்கான (Sandakan Death Marches) முக்கியப் பாதையாகவும் இருந்தது.
1940-ஆம் ஆண்டுகளில், இந்த மாவட்டத்தில் டூசுன் மக்கள் அதிகமாக வசித்து வந்தனர். 1965-இல், மலேசியாவின் ஒரு பகுதியாக சபா மாறிய சிறிது காலத்திலேயே தற்போதைய மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஆஸ்திரேலியா அரசாங்கமும்; மலேசிய அரசாங்கமும் இணைந்து ஒரு நெடுஞ்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்ததைத் தொடர்ந்து இந்த மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது.
தெலுபிட் மாவட்ட நகராட்சி[தொகு]
நெடுஞ்சாலை அமைக்கப் பட்டததைத் தொடர்ந்து, பல உள்கட்டமைப்புகள் அங்கு தொடக்கப் பட்டன. 1970-இல் ஐக்கிய சபா தேசிய அமைப்பின் (United Sabah National Organisation) (USNO) நிர்வாகத்தின் கீழ், தெலுபிட் ஒரு துணை மாவட்டமாக மாற்றப்பட்டது.[1]
2015-ஆம் ஆண்டில், தெலுபிட் ஒரு முழு மாவட்டமாகத் தகுதி உயர்த்தப்பட்டது அத்துடன் ஒரு மாவட்ட நகராட்சியும் நிறுவப்பட்டது.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Sejarah Pewujudan Daerah". Telupid District Office. 12 March 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Study on creating Tongod, Telupid district councils – Hajiji". The Borneo Post. 28 September 2015. 12 March 2018 அன்று பார்க்கப்பட்டது.
மேலும் படிக்க[தொகு]
- Treacher, W. H (1891). "British Borneo: sketches of Brunai, Sarawak, Labuan, and North Borneo". University of California Libraries. Singapore, Govt. print. dept. p. 190.
- Rutter, Owen (1922). "British North Borneo - An Account of its History, Resources and Native Tribes". Cornell University Library. Constable & Company Ltd, London. p. 157.
- Tregonning, K. G. (1965). A History Of Modern Sabah (North Borneo 1881–1963). University of Malaya Press. https://archive.org/details/historyofmoderns0000treg.