உள்ளடக்கத்துக்குச் செல்

பியூபோர்ட் மாவட்டம்

ஆள்கூறுகள்: 5°20′44.84″N 115°44′40.43″E / 5.3457889°N 115.7445639°E / 5.3457889; 115.7445639
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியூபோர்ட் மாவட்டம்
Beaufort District
சபா
பியூபோர்ட் மாவட்ட மன்றம்
பியூபோர்ட் மாவட்ட மன்ற அலுவலகம்.
Location of பியூபோர்ட் மாவட்டம்
ஆள்கூறுகள்: 5°20′44.84″N 115°44′40.43″E / 5.3457889°N 115.7445639°E / 5.3457889; 115.7445639
நாடு மலேசியா
மாநிலம் சபா
பிரிவுஉட்பகுதி
தலைநகரம்பியூபோர்ட்
அரசு
 • மாவட்ட அதிகாரிவோங் பூ டின்
பரப்பளவு
 • மொத்தம்1,735 km2 (670 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்64,350
இணையதளம்www.mdbft.sabah.gov.my
ww2.sabah.gov.my/pd.bft/
பியூபோர்ட் மாவட்டம், சபா வரைபடம்

பியூபோர்ட் மாவட்டம்; (மலாய்: Daerah Beaufort; ஆங்கிலம்: Beaufort District) என்பது மலேசியா, சபா மாநிலம், உட்பகுதி பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். அதே வேளையில் இந்தப் பியூபோர்ட் (Beaufort) நகரம், பியூபோர்ட் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும்.

பியூபோர்ட் நகரம் கோத்தா கினபாலுவிற்கு தெற்கே 90 கி.மீ. தொலைவில் உள்ளது. அமைதியான நகரம். நகரின் மையத்தில் படாஸ் ஆறு (Padas River) பாய்கிறது. இந்தப் படாஸ் ஆற்றில் அவ்வப்போது ஏற்படும் வெள்ளத்தைத் தவிர்ப்பதற்காக சாலைகளுக்கு மேல் உயரமாகக் கடைவீடுகள் கட்டப்பட்டு உள்ளன.

பொது[தொகு]

சபா, உட்பகுதி பிரிவில் உள்ள மாவட்டங்கள்:

வரலாறு[தொகு]

1890-ஆம் ஆண்டுகளில் சபாவில் உருவாக்கப்பட்ட நகரங்களில் பியூபோர்ட் நகரமும் ஒன்றாகும். சபாவில் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாக வரலாறு படைக்கின்றது.[1]

1898-ஆம் ஆண்டில் பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தின் (British North Borneo Chartered Company) நிர்வாக இயக்குநர் வில்லியம் சி. கோவி (William C. Cowie) என்பவரால் பியூபோர்ட் நகரம் நிறுவப்பட்டது.

1895-ஆம் ஆண்டு லபுவான் மற்றும் பிரித்தானிய வடக்கு போர்னியோவின் (British North Borneo) ஆளுநராக இருந்த சர் லீசெஸ்டர் பியூபோர்ட் (Sir Leicester Beaufort) என்பவரின் பெயரால் இந்த நகருக்குப் பெயரிடப்பட்டது.[2]

1898-ஆம் ஆண்டுக்கு முன்னர் பியூபோர்ட் நகருக்கு அருகாமையில் சிற்சில குடியேற்றங்கள் இருந்து உள்ளன. பெரும்பாலும் படாஸ் டாமிட் (Padas Damit), கிலியாஸ் (Klias), ஜிம்பங்கா (Jimpangah) போன்ற பகுதிகளில் அந்தக் குடியேற்றங்கள் நடந்து உள்ளன.

இனக் குழுக்களாக மக்கள்[தொகு]

சபாவின் பியூபோர்ட் பகுதிக்குப் பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தார் வருவதற்கு முன்பு, பியூபோர்ட் பகுதிகளில் உள்ள மக்கள், உள்ளூர் தலைவர்களால் ஆளப் பட்டனர். அப்போது இனக் குழுக்களாக மக்கள் வாழ்ந்து உள்ளனர். ஒவ்வோர் இனக் குழுவிற்கும் ஒரு தலைவர் தலைமை தாங்கி உள்ளார்.[2]

நகரின் மையத்தில் ஓடிய படாஸ் ஆற்றின் கரையில் பியூபோர்ட் நகரத்தை, வில்லியம் சி. கோவி நிறுவினார். அப்படி நிறுவும் போது அந்தப் பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதி என்பது அவருக்குத் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.

தெரிந்து இருந்தால், புதிய நகரத்திற்கான இடத்தைத் தேர்வு செய்யும் போது வெள்ளப்பெருக்கு ஏற்படாத பகுதியைத் தேர்வு செய்து இருப்பார். பியூபோர்ட் பகுதியில் இடையிடையே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், புதிய நகர்ப் பகுதி பழைய இடத்திலேயே இருந்தது. இன்றும் இருக்கிறது. அந்த வகையில் படாஸ் ஆறு அந்தக் காலத்தில் ஒரு நெடுஞ்சாலையாக இருந்து உள்ளது.[2]

மக்கள் தொகையியல்[தொகு]

2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாவட்டத்தின் மக்கள் தொகை 64,350 மக்கள். இங்கு வாழும் மக்கள் பெரிய சமூகங்களாகவும் சிறியச் சமூகங்களாகவும் பிரிக்கப்பட்டு உள்ளனர்.

பியூபோர்ட் நகரில் பிசாயா (Bisaya) சமூகத்தினர் பெரும்பான்மை இனத்தவராய் வாழ்கிறார்கள். அடுத்த நிலையில் புரூணை மலாய்க்காரர்கள் (Brunei Malay), கெடாயான் பழங்குடி மக்கள், பஜாவ் பழங்குடி மக்கள் மற்றும் சீனர்கள் வாழ்கிறார்கள்.[3]

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Beaufort is situated in the interior division of Sabah's West Coast". Sabah, Malaysian Borneo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 April 2022.
  2. 2.0 2.1 2.2 "The town of Beaufort was founded in 1898 by the Managing Director of the British North Borneo Chartered Company (BNBCC), Mr William C. Cowie. It is named after Sir Leicester Beaufort who was then the Governor of Labuan and British North Borneo (1895 – 1900)". North Borneo History Enthusiasts (in ஆங்கிலம்). 21 March 2012. பார்க்கப்பட்ட நாள் 7 April 2022.
  3. History, Borneo (8 December 2016). "This flourishing and extensive district which on the 1st May 1884 passed under the rule of The British North Borneo Government". Borneo History. பார்க்கப்பட்ட நாள் 7 April 2022.

மேலும் படிக்க[தொகு]

மேலும் காண்க[தொகு]

மலேசியாவின் மாவட்டங்கள்

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பியூபோர்ட்_மாவட்டம்&oldid=3925393" இலிருந்து மீள்விக்கப்பட்டது