கினபாத்தாங்கான்
கினபாத்தாங்கான் நகரம் | |
---|---|
Kinabatangan Town | |
சபா | |
![]() | |
![]() | |
கிழக்கு மலேசியாவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 5°25′0″N 117°35′0″E / 5.41667°N 117.58333°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
பிரிவு | சண்டக்கான் பிரிவு |
மாவட்டம் | கினபாத்தாங்கான் மாவட்டம் |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 10,256 |
நேர வலயம் | மலேசிய நேரம் (ஒசநே+8) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை (ஒசநே) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 90200 |
மலேசியத் தொலைபேசி எண் | +6-088 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | S |
கினபாத்தாங்கான் என்பது (மலாய்: Kinabatangan; ஆங்கிலம்: Kinabatangan; சீனம்: 京那巴当岸) மலேசியா, சபா மாநிலம், சண்டக்கான் பிரிவு, கினபாத்தாங்கான் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.
சபா மாநிலத்தின் பூர்வீகக் குழுக்களில் ஒன்றான ஓராங் சுங்கை (Orang Sungai) எனும் பழங்குடியினர் மக்கள் இங்கு அதிகமாக வாழ்கிறார்கள்.[1][2]
சொற்பிறப்பியல்[தொகு]
கினபாத்தாங்கான் (Kinabatangan) எனும் பெயர் முதலில் சினபாத்தாங்கான் (Cinabatangan) என்று அழைக்கப்பட்டது. நீண்ட ஆறு என்று பொருள். இதற்கு ஓங் சம் பிங் (Ong Sum Ping) எனும் சீனக் குடியேற்ற ஆளுநர் பெயரிட்டதாகவும் அறியப்படுகிறது.
அந்தச் சீனக் குடியேற்ற ஆளுநர் 16-ஆம் நூற்றாண்டில் இந்தப் பகுதிக்கு வந்தார். மாவட்டத்தில் அமைந்துள்ள கம்போங் முமியாங் (Kampung Mumiang), சுகாவ் (Sukau) மற்றும் பிலிட் (Bilit) ஆகியவற்றின் பெயர்களும் சீன மொழியில் இருந்து வந்ததாக நம்பப் படுகிறது.
கினபாத்தாங்கான் வனவிலங்கு சரணாலயம்[தொகு]
உலகில் இரண்டு இடங்களில் தான், பத்து வகையான ஓராங் ஊத்தான் (Orangutan) மனித குரங்கினங்கள் இணைந்து வாழ்கின்றன. அந்த இடங்களில், இந்த கினபாத்தாங்கான் வனவிலங்கு சரணாலயம் ஒன்றாகும்.[3]
மேலும் 50 வகையான பாலூட்டிகள்; 200 வகையான பறவைகள்; தும்பிக்கை குரங்குகள் (Proboscis monkeys); சபா குள்ள யானைகள் (Sabah Pygmy elephants); சுமத்திரா காண்டாமிருகங்கள்; நீள்மூக்கு கொக்குகள்; பாம்புத் தாராக்கள்; மரத் தலையன் பறவைகள்; இந்தச் சரணாலயத்தில் பாதுகாக்கப் படுகின்றன.[4]
கோமந்தோங் குகைகள்[தொகு]
கினபாத்தாங்கான் பகுதியில் கோமந்தோங் எனும் பெயரில் ஒரு மலை உள்ளது. அந்த மலையில் மிகப்பெரிய சுண்ணங்கல் குகைகள் உள்ளன. அவற்றின் பெயர் கோமந்தோங் குகைகள் (Gomantong Caves).
கோமந்தோங் குகைகளைச் சுற்றியுள்ள பகுதிகள் ஒராங் ஊத்தான் மனிதக் குரங்குகளுக்குப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பல நூற்றாண்டுகளாக, கோமந்தோங் குகைகள் அவற்றின் கூட்டு உழவாரன் பறவைகளின் கூடுகளுக்கு புகழ்பெற்றவை. இந்தக் கூடுகள் பறவை கூடு சூப் தயாரிப்பிற்காக அறுவடை செய்யப் படுகின்றன.[5]
மேற்கோள்[தொகு]
- ↑ Frans Welman (2011). Borneo Trilogy Volume 1: Sabah. Booksmango. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-616-245-078-5.
- ↑ Wendy Hutton (2004). Kinabatangan: Sabah Colour Guide. Natural History Publications (Borneo). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:983-812-093-6. https://archive.org/details/kinabatangansaba0000unse.
- ↑ "Kinabatangan Wildlife Sanctuary - The sanctuary is one of only two areas in the world inhabited by ten species of primate, four of which are endemic to Borneo". www.wildlifeworldwide.com. 30 March 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Kinabatangan Wildlife KINABATANGAN WILDLIFE SANCTUARY - It is one of the only two places in the world where ten primate species are found cohabiting, next to some 50 species of mammals and 200 species of bird, Orangutans, Proboscis monkeys, Sabah Pygmy elephants, Sumatran Rhino, Storm's stork, Oriental Darter and all eight species of Hornbill in Borneo". Sabah Travel Guide - Ultimate travel guide! Sabah, Malaysia. 30 March 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Ee Lin Wan (2 December 2002). "Gomantong Caves: A Walk into Nature and History". ThingsAsian. 22 October 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 October 2017 அன்று பார்க்கப்பட்டது.
மேலும் காண்க[தொகு]
பொதுவகத்தில் கினபாத்தாங்கான் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.